உங்கள் தலைமுடி இளநரை அடையாமல் இருக்கவும், அதன் இயற்கையான நிறத்தை பராமரிக்கவும், மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் சில முக்கிய உணவுகளைப் பற்றி Jothidam360 வழங்கும் சிறப்புப் பதிவு!
முன்கூட்டியே நரைமுடி இருந்தால், கூந்தல் பராமரிப்பு மட்டும் போதாது. அதனுடன் முடியின் நிறத்தைப் பாதுகாக்கும் மெலனின் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் எனப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை நிறமி. இது தோல், கண்கள் மற்றும் தலைமுடி போன்றவற்றை அடர் நிறமாக மாற்றுகிறது. உங்கள் தலைமுடி மேலும் இளநரை வராமல் இருக்கவும், படிப்படியாக நரைமுடி குறையவும் தினசரி உங்கள் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மெலனின் நிறைந்த உணவுகள் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
இளநரையைத் தடுக்கும் 7 முக்கிய மெலனின் நிறைந்த உணவுகள்:
பச்சை இலை காய்கறிகள்
வளரும் பருவம் முதலே பச்சை இலை காய்கறிகள் அவசியம் சேர்க்க வேண்டும். இவை உடல் ஆரோக்கியம் போன்று, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. கீரைகள், இலைக்கீரைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பீட்டா கரோட்டிம், ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இவை மெலனின் உற்பத்தியை தூண்டவும், உச்சந்தலை சருமம் சேதமடைவதை சரி செய்யவும் உதவுகின்றன. இளநரை தடுப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. கூந்தல் வறட்சியை தடுக்க செய்கின்றன. கீரை சூப், சாலட், பொரியல் வடிவில் சாப்பிடலாம்.
தக்காளி
தக்காளி தினமும் சாப்பிடுகிறோம், இது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பியாக செயல்படும் லைகோபீன் என்னும் கரோட்டினாய்டு கொண்டது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க செய்கிறது. கூந்தலை புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது. வைட்டமின் சி கொண்ட இவை சருமத்தின் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் தோற்றத்தையும் குறைக்கிறது. தக்காளியை உணவில் சேர்ப்பதுடன் சூப் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். சாலட் சாப்பிடும் போது ஆலிவ் எண்ணெய் தூவி அதனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
முட்டை
முட்டை புரதம் மற்றும் டைரோசின் நிறைந்துள்ளது. உடலில் மெலனின் உற்பத்தி செய்யும் ஒரு வகை அமினோ அமிலமான டைரோசின் முட்டையில் உள்ளது. முட்டைகள் வைட்டமின் பி, பி12 போன்றவையும் கொண்டுள்ளன. இவை உடலில் செல் புதுப்பித்தலை மேம்படுத்துகிறது. முட்டையில் இருக்கும் வைட்டமின் பி12 ஆனது முன்கூட்டியே இளநரை விழுவதை தடுக்கிறது. தினமும் ஒரு முழு முட்டை சாப்பிடுவது சிறந்தது.
பூசணி விதைகள்
கொட்டைகளும் விதைகளும் உணவுமுறையில் சேர்த்து வருவது நல்லது. பூசணி விதைகள் மெலனின் மற்றும் துத்தநாகம் கொண்டுள்ளன. இதனால் உச்சந்தலையில் எண்ணெய் செபம் சரியாக உற்பத்தி செய்ய உதவுகிறது. ஆரோக்கியமான முடி நுண்குழாய்களை இவை ஆதரிக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ உச்சந்தலை சருமத்தை சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது. சாலட்கள், ஸ்மூத்தி போன்றவற்றில் இந்த விதைகளை வறுத்து சாப்பிடலாம்.
பாதாம்
தினமும் 4 பாதாம் தண்ணீரில் ஊறவைத்து தோல் உரித்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும். இளநரை முடிக்கு தீர்வாக பாதாம் சேர்ப்பது நல்லது. மெலனின் நிறைந்த சுவையான உணவுகளில் பாதாம் ஒன்று. பாதாம் தாமிரம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் வைட்டமின் ஈ நிறைந்தவை. இவை சருமத்தை பாதுகாக்கும். முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதால் முடி இளநரை தடுக்கப்படுகிறது. மேலும் இது வறட்சியையும் தடுக்க செய்கிறது. காலை உணவில் ஓட்ஸ் உடன் இதை சேர்த்து சாப்பிடலாம்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் புரதச்சத்து கொண்டவை. இந்திய சமையலறையில் தினசரி ஏதேனும் ஒரு வகை உணவில் பருப்புகள் இடம்பிடிக்கும். இந்த புரதம் நிறைந்த பருப்புகள் எல்லாமே மெலனின் தன்மை கொண்டவை. பருப்புகளில் வைட்டமின் பி 9 உள்ளது. இது கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தினசரி உணவில் பருப்புகளை சேர்ப்பது மிக எளிது. தோசை வடிவில், கிரேவியாக, சுண்டலாக என தினம் ஒன்றை சேர்க்கலாம்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் தினசரி ஒரு துண்டு சாப்பிட்டால் அபரிமிதமான நன்மைகளை பெறலாம். இது உண்மையில் ஒரு சூப்பர் ஃபுட். இவை குழந்தை பருவ இளநரையை தடுப்பதோடு இதயத்துக்கும் நன்மை செய்ய கூடியவை. டார்க் சாக்லேட் ஆக்ஸிஜனேற்றிகள் கொண்டவை. இது உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இளநரைக்கு உடல் நச்சுக்களும் கூட காரணமாக இருக்கலாம். நச்சு அகற்ற செய்யும் டார்க் சாக்லேட் மெலனின் உற்பத்திக்கு வேண்டிய தாமிரமும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடம் மற்றும் ஆரோக்கியம்
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த உணவுகள், உங்கள் உடலின் ஆற்றலையும் மேம்படுத்தி, முருகன் அருளால் சுபிட்சம் தரும். ஆறுபடை வீடுகள் தரிசனம் போன்ற புனிதப் பயணங்கள் மன அமைதியையும், உடல் நலத்தையும் அளிக்கும். ஜோதிடம் கூறும் பலன்கள் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும். தமிழ் கலாச்சாரத்தில் உணவும், ஆரோக்கியமும் பிரிக்க முடியாதவை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு Jothidam360 பொறுப்பேற்காது.