நம் அன்றாட வாழ்வில் நிகழும் பல விஷயங்களை சாஸ்திரம் மற்றும் ஜோதிட சகுனங்களாகப் பார்ப்பதுண்டு. பல்லி விழும் பலன்கள், கண் துடித்தல், மற்றும் உள்ளங்கை அரிப்பு போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தைப் பற்றிய சில குறிப்புகளை உணர்த்துவதாக நம் முன்னோர்கள் நம்பினர். உள்ளங்கை அல்லது உள்ளங்கால்களில் திடீரென ஏற்படும் அரிப்பு அல்லது இழுப்பு உடல்நலக் குறைபாடுகளைக் குறிக்கலாம். ஆனால், எப்போதாவது ஒருமுறை சிறிது நேரம் மட்டும் இவை ஏற்பட்டால், அது ஜோதிடம் ரீதியாக சில முக்கியமான சகுனங்களை உணர்த்துகிறது. இந்த பதிவில், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களுக்கான ஜோதிட பலன்களை விரிவாகப் பார்ப்போம்.
உள்ளங்கை, பாத அரிப்பு: ஜோதிடப் பார்வை
நம்முடைய உள்ளங்கை அல்லது பாதம் திடீரென அரிப்பு ஏற்படுவது உண்டு. இது தொடர்ச்சியாக இருப்பின் இது சில நோய் அல்லது உடல்நலப் பிரச்சனைகளைக் குறிப்பதாக அமைகிறது. அதுவே எப்போதாவது திடீரென சிறிது நேரம் மட்டும் ஏற்பட்டால் அது ஜோதிட பார்வையில் சில சகுனங்களை உணர்த்துவதாக அமைகிறது. நம்முடைய கையில் மகாலட்சுமி, சரஸ்வதி, கெளரி ஆகிய மூன்று தேவிகளின் சக்தி வடிவில் அறிவு, செழிப்பு, சக்தி ஆகிய மூன்று சக்திகளை ஒன்றிணைக்கக்கூடியது. இந்த கைகளில் ஏற்படும் அரிப்பு அல்லது இழுப்பு, செல்வ வளம், வெற்றி, அல்லது புதிய வாய்ப்புகளைக் குறிக்கும் முக்கிய ஜோதிட சகுனமாக பார்க்கப்படுகிறது. இது தமிழ் ஜோதிடம் கூறும் ரகசியங்களில் ஒன்று.
கை, கால் விரல் அரிப்பு மற்றும் இழுப்பு பலன்கள்
- வலது கட்டைவிரல் அல்லது இடது காலின் கட்டைவிரல் அரிப்பு: எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
- இடது கட்டைவிரல் அல்லது வலது காலின் கட்டைவிரல் அரிப்பு: முயற்சியில் தடைகளைக் குறிக்கிறது.
- இடது முழங்கை அரிப்பு: சிந்தனை அதிகரிக்கும்.
- வலது முழங்கை அரிப்பு அல்லது இழுப்பு: வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- கால் விரல், கை விரல்களில் அரிப்பு: உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
- வலது கையில் அரிப்பு: ஆதாயங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
வலது கை விரல்களில் அரிப்பு தரும் பலன்கள்
- ஆள் கட்டி விரல்: கல்வி, திருமணம் தொடர்பான விஷயங்களில் நற்பலன் கிடைக்கும்.
- நடுவிரல்: வீடு, மனை, பூமி ஆதாயம் கிடைக்கும்.
- மோதிர விரல்: பதவி, புகழ் உயர்வு இருக்கும்.
- சிறிய விரல்: நல்ல செய்திகள் கிடைக்கும்.
இடது கை விரல்களில் அரிப்பு தரும் பலன்கள்
- ஆள் கட்டி விரல்: உறவுகளில் கெட்ட செய்திகள் கிடைக்கும்.
- நடுவிரல்: பண மற்றும் பூமிக்குரிய இழப்பு ஏற்படலாம்.
- மோதிர விரல்: வீழ்ச்சி, தாழ்வு, அவதூறு ஏற்படும்.
- சிறிய விரல்: கெட்ட செய்தி கிடைக்கும்.
உடலின் வலது பகுதியில் அரிப்பு தரும் பலன்கள்
- பாதம்: அதிர்ஷ்ட காற்று வீசும்.
- கை மணிக்கட்டு: சச்சரவுகள் ஏற்படும்.
- கால்விரல்: தன் அன்புக்குரிய உறவினரை பிரிய வாய்ப்புள்ளது.
- கை: லாபகரமான பயணம் ஏற்படும்.
- முழங்கால்: உறவினர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
- கை: பரிசு பொருட்கள், பணம் கிடைக்கும்.
- உள்ளங்கையின் பின்புறம்: எதிர் பாலினத்தவரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
- தொடை: எதிர்பாலினத்தவருடன் சண்டை ஏற்படலாம்.
- கன்னம்: எதிர் பாலினத்திலிருந்து ஏமாற்றுதல்.
- முழங்கால்: நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
உடலின் இடது பகுதியில் அரிப்பு தரும் பலன்கள்
- பாதம்: பன்முகத்தன்மை கொண்ட தனிப்பட்ட நபர்களிடமிருந்து துஷ்பிரயோகம் ஏற்படலாம்.
- கை மணிக்கட்டு: அன்புக்குரியவரின் வருகை ஏற்படும்.
- கால்விரல்: நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- கை: நல்ல செய்தி கிடைக்கும்.
- முழங்கால்: உறவுகள் பலப்படும்.
- கை: மரியாதை மற்றும் நல்ல உறவு ஏற்படும்.
- தொடை: ஒரே பாலினத்தவருடன் சண்டை ஏற்படலாம்.
- கன்னம்: ஒரே பாலினத்தவர் மூலம் மோசடி ஏற்படலாம்.
- முழங்கால்: துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.