வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் வீட்டில் எதை செய்யலாம் எவற்றை செய்யக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் நாம் மேற்கொள்ளும் சில செயல்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுத் தரும் அல்லது இழக்கச் செய்யும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மாலை நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகள் இங்கே!
துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்கவும்
மகாலட்சுமி தேவியின் அம்சமாகப் பார்க்கப்படும் துளசி இலைகளை மாலை நேரத்தில் பறிக்கக்கூடாது. மாலை நேரத்தில் துளசி இலையைப் பறிப்பதால் வீட்டின் செல்வ நிலை குறையும், வறுமை ஏற்படும். மேலும் துளசி செடியை மாலை நேரத்தில் தொடுவதோ, தண்ணீர் ஊற்றுவதோ கூடாது.
கடன் கொடுப்பது அல்லது வாங்குவதைத் தவிர்க்கவும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை நேரத்தில் நாம் யாருக்கும் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். யாருக்கும் பணத்தைக் கடனாகக் கொடுக்க வேண்டாம், அதே போல கடன் வாங்கவும் கூடாது. மாலை நேரத்தில் கடன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்சனையும், கடன் கொடுத்தால் பணம் வருவதிலும் தாமதமும் ஆகும். இது செல்வப் பெருக்கத்திற்கு நல்லதல்ல.
வீட்டில் இருள் சூழாமல் பார்த்துக் கொள்ளவும்
ஆன்மிக நம்பிக்கையின்படி தெய்வங்களும், நல்ல சக்திகளும் மாலை நேரத்தில் உலா வருவதாக நம்பப்படுகிறது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டின் எந்த ஒரு அறையிலும், மூலையிலும் இருள் இல்லாமல் வெளிச்சம் நிறைந்திருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் விளக்கில்லாமல் இருள் இருப்பின், அந்த வீட்டில் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் குறையும்.
சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு போர் நிறுத்தப்பட்டு மீண்டும் மறுநாள் போர் நடப்பது போன்ற நிகழ்வுகளை நாம் புராணக் கதைகளில் கேட்டிருப்போம். அப்படி இருக்க நாம் மாலை நேரத்தில் அக்கம் பக்கத்தினருடன் சண்டை, வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும். மாலை நேரத்தில் நாம் வீட்டில் விளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்வதும், பஜனை, கீர்த்தனை, இறை மந்திரங்களை உச்சரித்தல் என சுப விஷயங்களைச் செய்வது அவசியம்.
மாலை நேரத்தில் வீட்டை சுத்தப்படுத்துவதைத் தவிர்க்கவும்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை அல்லது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களை கூட்டி, பெருக்குவது கூடாது. இப்படி செய்வதால் செல்வத்தை அருளும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இதனால் வீட்டில் செல்வ இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றி லட்சுமி தேவியின் அருளைப் பெறுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆன்மிக மற்றும் வாஸ்து நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. விரிவான தனிப்பட்ட ஆலோசனைக்கு துறை சார்ந்த நிபுணர்களை அணுகவும்.