பைரவர் வழிபாடு என்பது நம் வாழ்வின் துன்பங்களை நீக்கி, பயம், கவலைகளை அகற்றி, பாதுகாப்பு மற்றும் வெற்றியை அருளும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாகும். இந்த தொகுப்பில் பைரவர் 108 போற்றி மந்திரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது. கால பைரவர் அருள் பெற இந்த போற்றிகளை தினமும் ஓதி பலன் பெறுங்கள்.
பைரவர் 108 போற்றி மந்திரங்கள் பட்டியல்
- ஓம் பைரவனே போற்றி
- ஓம் பயநாசகனே போற்றி
- ஓம் அஷ்டரூபனே போற்றி
- ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
- ஓம் அயன்குருவே போற்றி
- ஓம் அறக்காவலனே போற்றி
- ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
- ஓம் அடங்காரின் அழிவே போற்றி
- ஓம் அற்புதனே போற்றி
- ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
- ஓம் ஆனந்த பைரவனே போற்றி
- ஓம் ஆலயக்காவலனே போற்றி
- ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
- ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
- ஓம் உக்ர பைரவனே போற்றி
- ஓம் உடுக்கை ஏந்தியனே போற்றி
- ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
- ஓம் உன்மத்த பைரவனே போற்றி
- ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
- ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
- ஓம் எல்லை தேவனே போற்றி
- ஓம் எளிதில் இருங்குபவனே போற்றி
- ஓம் கபாலதாரியே போற்றி
- ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
- ஓம் கர்வ பங்கனே போற்றி
- ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
- ஓம் கதாயுதனே போற்றி
- ஓம் கனல்வீச்சு கண்ணனே போற்றி
- ஓம் கருமேக நிறனே போற்றி
- ஓம் கட்வாங்க தாரியே போற்றி
- ஓம் களவைக் குலைப்போனே போற்றி
- ஓம் கருணாமூர்த்தியே போற்றி
- ஓம் கால பைரவனே போற்றி
- ஓம் காபாலிகர் தேவனே போற்றி
- ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
- ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
- ஓம் காசிநாதனே போற்றி
- ஓம் காவல்தெய்வமே போற்றி
- ஓம் கிரொத பைரவனே போற்றி
- ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
- ஓம் சண்ட பைரவனே போற்றி
- ஓம் சட்டை நாதனே போற்றி
- ஓம் சம்ஹார பைரவனே போற்றி
- ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் சிவத்தோன்றலே போற்றி
- ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
- ஓம் சிக்ஷகனே போற்றி
- ஓம் சீர்காழித்தேவனே போற்றி
- ஓம் சுடர்ச்சடையனே போற்றி
- ஓம் சுதந்திர பைரவனே போற்றி
- ஓம் சிவ அம்சனே போற்றி
- ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
- ஓம் சூலதாரியே போற்றி
- ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
- ஓம் செம்மேனியனே போற்றி
- ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
- ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
- ஓம் தலங்களின் காவலனே போற்றி
- ஓம் தீது அழிப்பவனே போற்றி
- ஓம் துர்சொப்பன நாசனே போற்றி
- ஓம் தெற்கு நோக்கனே போற்றி
- ஓம் தைரியமளிப்பவனே போற்றி
- ஓம் நவரச ரூபனே போற்றி
- ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
- ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
- ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
- ஓம் நாய் வாகனனே போற்றி
- ஓம் நாடியருள்வோனே போற்றி
- ஓம் நிமலனே போற்றி
- ஓம் நிர்வாணனே போற்றி
- ஓம் நிறைவளிப்பவனே போற்றி
- ஓம் நின்றருள்வோனே போற்றி
- ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
- ஓம் பகையை அழிப்பவனே போற்றி
- ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
- ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
- ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் பால பைரவனே போற்றி
- ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
- ஓம் பிரளயகாலனே போற்றி
- ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
- ஓம் பூஷண பைரவனே போற்றி
- ஓம் பூதங்களின் நாதனே போற்றி
- ஓம் பெரியவனே போற்றி
- ஓம் பைராகியர் நாதனே போற்றி
- ஓம் மல நாசனே போற்றி
- ஓம் மகோதரனே போற்றி
- ஓம் மகா பைரவனே போற்றி
- ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
- ஓம் மகா குண்டலனே போற்றி
- ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் முக்தியருள்வோனே போற்றி
- ஓம் முனீஸ்வரனே போற்றி
- ஓம் மூலமூர்த்தியே போற்றி
- ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
- ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
- ஓம் ருத்ரனே போற்றி
- ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
- ஓம் வடுக பைரவனே போற்றி
- ஓம் வடுகூர் நாதனே போற்றி
- ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
- ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
- ஓம் வாரணாசி வேந்தே போற்றி
- ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
- ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
- ஓம் விபீஷண பைரவனே போற்றி
- ஓம் வீழாமல் காப்பவனே போற்றி.
பைரவர் போற்றி மந்திரங்களின் பயன்கள்
பைரவர் 108 போற்றி மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். இவை உங்கள் வாழ்வில் நேர்மறை மாற்றங்களை கொண்டு வரும்.
- பய நீக்கம்: மனதிலுள்ள பயம், கவலைகள் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீக்கி தைரியத்தை அளிக்கும்.
- தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு: தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
- கடன் மற்றும் தடைகள் நீங்கும்: நிதி நெருக்கடிகள், கடன் தொல்லைகள் மற்றும் வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி வளத்தை அருளும்.
- நோய்கள் அகலும்: உடல்நலக் கோளாறுகள் மற்றும் நோய் பாதிப்புகளில் இருந்து விடுதலை அளிக்கும்.
- சாதனை மற்றும் வெற்றி: செய்யும் காரியங்களில் வெற்றி அடையவும், லட்சியங்களை அடையவும் துணை நிற்கும்.
- கால பைரவர் அருள்: காலத்தின் அதிபதியான கால பைரவரின் நேரடி அருளைப் பெற்று, காலத்தின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பைரவர் 108 போற்றி என்பது கால பைரவரை போற்றும் 108 மந்திர நாமாவளிகளின் தொகுப்பாகும். இவை மன அமைதியையும் பாதுகாப்பையும் அருளும். இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் பைரவரின் அருளை எளிதாகப் பெறலாம்.
பைரவர் போற்றி மந்திரங்களை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஓதுவது சிறப்பு. எந்த நேரத்திலும் ஓதலாம், குறிப்பாக அதிகாலை அல்லது மாலை வேளைகளில் ஓதுவது அதிக பலன் தரும்.
பைரவர் வழிபாடு தீய சக்திகளை நீக்கி, பயம், கவலைகள், கடன் பிரச்சனைகள் மற்றும் தடைகளை அகற்றி, வெற்றி, செல்வம், பாதுகாப்பு மற்றும் மன அமைதியை அருளும். ஜோதிட ரீதியாகவும், சனியின் தாக்கத்தைக் குறைக்கும்.