அரசர் சாணக்கியர் தனது நீதியின் மூலம், ஒரு தேசத்தை ஆள்வது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் எப்படி செல்வ செழிப்பை அடைந்து உயர்வது என்பதையும் விளக்கியுள்ளார். அவரது எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எந்த ஒரு சாதாரண மனிதனும் நிதி சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் பெற முடியும். ஜோதிடம்360 தளத்தின் மூலம், இந்த அரிய வழிகளைப் பின்பற்றி உங்கள் வாழ்வில் செல்வத்தை ஈர்க்கத் தொடங்குங்கள்.
1. சண்டைகள் மற்றும் வீண் பேச்சுகளை தவிர்க்கவும்
வெளியிடத்தில் மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு, சண்டை போடுவது தவிர்ப்பது மட்டுமல்லாமல், வீட்டிலேயே அடிக்கடி ஏற்படக்கூடிய சண்டைகள், கசப்பான வார்த்தைகளை தவிர்ப்பது அவசியம். தவறான விஷயங்களை பேசுவதிலேயே பலரின் நேரம் வீணாக செலவாகிறது. இது பொருளாதார நிலையை எதிர்மறையாக பாதிக்கிறது. வீட்டில் இணக்கமும் அமைதியும் இருந்தால் மட்டுமே செல்வம் இருந்தாலும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.
2. வீண் செலவுகளை தவிர்க்கவும்
சிந்தனை இல்லாமல் பணத்தை வீணாக செலவு செய்பவர்களுக்கு நிதி நெருக்கடி வெகு விரைவில் வந்து விடும். உங்களின் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். சம்பளம் வந்தவுடன் சேமிப்பிற்காக முதலில் பணத்தை எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் செலவை திட்டமிடவும். வருமானத்திற்கும், செலவிற்கும் இடையில் சமநிலையை பேணக் கூடியவர்கள் மட்டுமே முன்னேற முடியும் மற்றும் தங்களின் நிதி நிலையை பலப்படுத்தவும் முடியும்.
3. பேராசையிலிருந்து விலகி இருங்கள்
சாணக்கியரின் நீதியின் படி, கடினமான உழைப்பும், இலக்கை அறிவுடன் யோசிக்க கூடியவர் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அப்படிப்பட்ட நபருக்கு பணம், மகிழ்ச்சி மற்றும் சொத்து சார்ந்த பற்றாக்குறை சந்திக்க மாட்டார். எனவே பேராசையிலிருந்து விலகி இருப்பதோடு, மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளாத நபர் தான், பணத்தை சம்பாதிப்பதற்கான அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவது அவசியம்.
4. சுத்தமாக இருக்கவும், சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும்
அழுக்கு அதிகமாக உள்ள வீட்டில், அதில் இருக்கக்கூடிய நபர்கள் சுத்தமான ஆடையை அணிவதில்லை. அத்தகையவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும். எனவே வீட்டை சுத்தமாக, தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, தன்னுடைய ஆடையையும் சுத்தமாக அறிந்து கொள்ளவும். அப்படி செய்தாலே நம்முடைய நம்பிக்கை அதிகரிக்க தொடங்கும்.
சாணக்கிய நீதியின் படி யார் ஒருவன் சோம்பேறித்தனத்துடன் இருக்கிறாரோ, அவரின் வாழ்க்கையில் அனைத்திலும் தோல்வியை சந்திக்க நேரிடும். அதனால் சோம்பலை கைவிட்டு, உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்யுங்கள். வெற்றி தானாக தேடி வரும்.
5. சூரிய அஸ்தமனத்திற்கு முன் தூங்க வேண்டாம்
சூரிய அஸ்தமனத்திற்கு முன் யாரும் தூங்க கூடாது. அதேபோல வீட்டில் மகாலட்சுமி வரக்கூடிய நேரம் ஆன சூரிய அஸ்தமனம் ஆகக்கூடிய நேரத்தில் யாரும் தூங்கவும் கூடாது. இதனால் உங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல் சந்திக்க நேரிடும். அந்தி சாயும் நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இது முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெறவும் உதவும்.
முக்கிய அம்சங்கள்
- சண்டைகளை தவிர்த்து அமைதியைப் பேணவும்.
- வீண் செலவுகளைக் குறைத்து, சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும்.
- பேராசையைத் தவிர்த்து, கடின உழைப்பில் கவனம் செலுத்தவும்.
- வீடு மற்றும் உடைகளை சுத்தமாக வைத்து சோம்பலை கைவிடவும்.
- மகாலட்சுமி கடாட்சம் பெற சூரிய அஸ்தமன நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவும்.