சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை பொருள். சமையலுக்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது. சருமத்திற்குத் தேவையான கொழுப்பு அமிலங்களுடன், இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. எரிச்சல், அரிப்பு மற்றும் எக்ஸிமா போன்ற தோல் நோய்களுக்கு இது மிகவும் நல்லது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை அமைதிப்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயைக் கொண்டு முகத்திற்குப் போடப்படும் பல்வேறு ஃபேஸ் மாஸ்க்குகள் பற்றி இப்போது விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
தேங்காய் எண்ணெய் முகத்திற்கு நல்லதா?
பலருக்கும் இது குறித்த சந்தேகம் உண்டு. தேங்காயெண்ணெய் சருமத்துக்கு நல்லது. இது சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. வறண்ட சருமத்திற்கு நல்லது என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் டெர்மடாலஜி, வெனிரியாலஜி மற்றும் லெப்ராலஜி வெளியிட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் முகப்பரு உள்ள சருமத்திற்கு இது சரியா என்பது விவாதத்திற்குரியது. தேங்காய் எண்ணெய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. மேலும், பாக்டீரியா மற்றும் வீக்கத்தை குறைக்கும் பண்புகளும் இதில் உள்ளன. இவை முகப்பருவை குறைக்க உதவும். ஆனால், தேங்காய் எண்ணெயில் காமோடோஜெனிக் அளவு அதிகம். இது சரும துளைகளை அடைத்து முகப்பருவை அதிகமாக்கலாம் என்பதால் முகப்பரு அல்லது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை தவிர்ப்பது நல்லது.
பல்வேறு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்குகள்
தேவை: தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், தயிர் - 2 டீஸ்பூன்
செய்முறை: இரண்டையும் நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவி விடவும். 14-20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும்.
நன்மைகள்: தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. முகம் வறட்சியாக இருப்பவர்கள் இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.
தேவை: தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், மஞ்சள் - 2 டீஸ்பூன்
செய்முறை: தேங்காயெண்ணெயில் மஞ்சளை சேர்த்து நன்றாக குழைக்கவும். இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும்.
நன்மைகள்: மந்தமான சருமத்தை பிரகாசமாக்குகிறது. சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை குறைக்கிறது. இந்த மாஸ்க் ஆண்கள் போட வேண்டாம்.
தேவை: தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், பொடித்த ஓட்ஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை: தேங்காயெண்ணெயில் பொடித்த ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும்.
நன்மைகள்: தேங்காயெண்ணெய் சருமத்தை ஆற்றும். சருமத்தை மெதுவாக உரிக்கும். வாரம் ஒருமுறை இதை செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாக மாறுவதை பார்க்கலாம்.
தேவை: தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
செய்முறை: கற்றாழை ஜெல்லில் தேங்காயெண்ணெய் கலந்து நன்றாக ப்ளெண்டர் செய்யவும். இவை நன்றாக குழைந்ததும் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும்.
நன்மைகள்: கற்றாழை, தேங்காயெண்ணெய் இரண்டுமே சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. இது எரிச்சல் அடைந்த சருமத்திற்கு நல்லது.
தேவை: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: இரண்டும் நன்றாக கலந்து பிறகு சருமத்தில் மென்மையாக தடவி விடவும். 10-20 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவி விடவும்.
நன்மைகள்: தேன் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். எலுமிச்சை சரும நிறத்தை மந்தத்தை குறைத்து, சருமத்தை பொலிவாக்கும்.
தேவை: தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை: நீர்த்த எலுமிச்சை சாற்றை தேங்காயெண்ணெயில் கலந்து குழைத்து அதை முகத்தில் தடவி வரலாம். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். இதை வாரம் ஒருமுறை போடலாம். சரும வறட்சி இருப்பவர்கள் இந்த ஃபேக் முயற்சிக்க வேண்டாம்.
நன்மைகள்: எலுமிச்சை வைட்டமின் சி கொண்டவை. இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைத்து சரும நிறத்தை மேம்படுத்தும். எலுமிச்சை அதிகப்படியான எண்ணெயை குறைப்பதோடு சரும அழற்சியையும் குறைக்கும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- பேட்ச் டெஸ்ட்: எந்த மாஸ்க் பயன்படுத்தினாலும், சருமத்துக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதை அறிய பேட்ச் டெஸ்ட் செய்வது முக்கியம்.
- சுத்தமான எண்ணெய்: சருமத்துக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் அவசியம்.
- மருத்துவ ஆலோசனை: இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்துவதற்கு முன்பு, தோல் மருத்துவரை அணுகவும்.
- பயன்பாட்டின் அளவு: வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் சருமத்தில் துளைகள் அடைக்கப்படலாம். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் மற்றும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு Jothidam360 பொறுப்பேற்காது.