Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

டாக்டர் ஹரீஷ் கூறும் ஆரோக்கியமான உதடுகளுக்கான 7 குறிப்புகள்

ஜோதிடம் 360 வழங்கும் இந்த சிறப்புப் பதிவில், சரும நிபுணர் டாக்டர் ஹரீஷ் அவர்கள் ஆரோக்கியமான மற்றும் அழகிய உதடுகளைப் பெறுவதற்கான அத்தியாவசிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். வறண்ட மற்றும் கருமையான உதடுகளால் அவதிப்படுபவர்களுக்கு லிப் பாம் மட்டும் போதாது! உதடுகளின் ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு பகுதியாகும். இந்த உதடுகள் நமது தமிழ் கலாச்சாரத்தில் பேசும் அழகுக்கு ஒரு முக்கிய அம்சம்.

உதடு ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் ஹரீஷ் கூறும் முக்கிய குறிப்புகள்:

உதடுகள் அழகாக இருக்க நீங்கள் பல்வேறு பராமரிப்புகளை செய்யலாம். உதடுகள் வறண்டு, உரிந்து அல்லது கருமையாக இருந்தால் உங்கள் உதடு பராமரிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் சொல்ல முயற்சிக்கலாம். சில நேரங்களில் அன்றாட வாழ்க்கை முறை தவறுகள் கூட உதடு ஆரோக்கியத்தை கெடுக்கலாம். பல் சுகாதாரம், நீரேற்றம், மேக்-அப் பொருள்களின் பயன்பாடுகள் போன்றவை உதடு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்கள் உதடு ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.

1. உதடுக்கு லிப் பாம்

நீங்கள் உதடுக்கு லிப் பாம் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் உதடு ஈரப்பதமாக இருக்கும். அழகாக காட்டும். உதடு வறட்சி இல்லாமல் வைத்திருக்க நீங்கள் லிப் பாம் பயன்படுத்தலாம். ஆனால் உதடு அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க லிப் பாம் மட்டுமே போதாது என்கிறார் டாக்டர் ஹரிஷ். மேலும் நீங்கள் பயன்படுத்தும் லிப் பாம் ஆனது சூரிய ஒளியிடமிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும் எஸ்பிஎஃப் கொண்ட லிப் பாம் ஆக இருக்க வேண்டும் என்கிறார். லிப் பாம் பயன்படுத்துவதுடன் உதடு ஆரோக்கியத்துக்கு நீங்கள் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டுமாம். அப்படி அவர் சொல்வது என்னென்ன என்பதையும் கூறியுள்ளார். அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

2. உதடு நீரேற்றமாக இருக்க தண்ணீர்

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்கிறார்கள். நீரேற்றம் சருமம் போன்று மென்மையான உதடுகள் பெறுவதற்கும் அவசியமாம். உங்கள் உதடு வறட்சியாக இருப்பது, உதடு வெடித்து இருப்பது போன்றவை எல்லாமே உதடு பராமரிப்பு பிரச்சனை அல்ல அதற்கு காரணம் உடலில் போதுமான நீரேற்றம் இல்லாதது தான் என்கிறார் டாக்டர் ஹரீஷ்.

3. உதடை நாவால் தடவ வேண்டாம்

உதடு வெடிப்பு இருக்க கூடாது என்று பலரும் அடிக்கடி தன்னுடைய நாவால் உதட்டை ஈரம் செய்வது உண்டு. ஆனால் இந்த பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள் என்கிறார் டாக்டர் ஹரிஷ். மேலும் இப்படி நாவால் உதடை தடவி கொடுக்கும் போது உமிழ்நீர் தற்காலிகமாக உதடுக்கு ஈரம் கொடுக்கும் ஆனால் இந்த உமிழ்நீர் உதடு உலர்வாக வைத்திருப்பதை மேலும் மோசமாக்கும்.

4. நீண்ட நேரம் லிப்ஸ்டிக் பயன்பாடு

உதட்டு சாயம் எப்போதும் வசீகரமானவை உங்களை அழகாக காட்ட கூடியவை. ஆனால் அவை எல்லா நேரங்களுக்கும் ஏற்றது அல்ல என்கிறார் டாக்டர் ஹரீஷ். எப்போதும் உதடுக்கு சாயம் போடுவது, மேக் - அப் கலையாமல் இருப்பது என எல்லாமே உதட்டை எரிச்சலுக்கு ஆளாக்கி உதட்டின் நிறத்தை கருமையாக மாற்றும். அதனால் அதிகமாக லிப்ஸ்டிக் பயன்பாடு வேண்டாம் என்கிறார்.

5. உதடுகள் ஆரோக்கியமாக இருக்க டயட்

உதடுகள் மென்மையாகவும், அழகாகவும், சிவப்பாகவும் இயற்கையாகவே இருக்க பராமரிப்பு மட்டும் போதாது. உங்கள் உணவு முறையிலும் கவனம் செலுத்த வேண்டுமாம். டாக்டர் ஹரீஷ் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார், இதன் மூலம் உங்கள் உதடுகள் மென்மையாக, சிவந்த நிறமாக ஆரோக்கியமாக இருக்குமாம். உள்ளிருந்து உதடை ஆரோக்கியமாக வைக்க உணவு முறை அவசியம்.

6. உதடு அழகாக இருக்க பற்களின் சுகாதாரமும் முக்கியம்

உதடுகளின் அழகை எடுத்துகாட்டுவதில் பற்களுக்கும் பங்குண்டு என்கிறார் டாக்டர் ஹரீஷ். பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் வாய் மற்றும் உதடுகளும் ஆரோக்கியமாக இருக்குமாம். மேலும் வயதாகும் போதும் ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் உதடுகள் முழுமையாக அழகாக தெரியும் என்கிறார் டாக்டர் ஹரீஷ். இனி உங்கள் உதடு ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளையும் மனதில் கொள்ளுங்கள்.

7. புகைப்பழக்கம் இருந்தால் தவிருங்கள்

உதடு கருமை நிறம் இல்லாமல் அழகும் ஆரோக்கியமும் கொண்டிருக்க விரும்பினால் உங்களிடம் இருக்கும் புகைப்பழக்கத்தை தவிருங்கள். புகைப்பது உதட்டில் கருமையை ஏற்படுத்தும் மேலும் உதட்டில் ஆங்காங்கே பேட்ச் போன்று தனித்து காட்டும் என்கிறார். புகைப்பழக்கம் நுரையீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உதட்டின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அது புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

டாக்டர் ஹரீஷ் கருத்துப்படி, உதடு வறட்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் போதுமான நீரேற்றம் இல்லாததுதான். நீரேற்றத்தை அதிகரிப்பது உதடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆம், டாக்டர் ஹரீஷ் கூறுகிறார். நீண்ட நேரம் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது அல்லது மேக்கப்பை அகற்றாமல் இருப்பது உதடுகளை எரிச்சலுக்கு ஆளாக்கி, அவற்றின் நிறத்தை கருமையாக்கலாம். அளவான பயன்பாடு அவசியம்.

புகைப்பழக்கம் உதட்டில் கருமையை ஏற்படுத்தும் என்றும், சில சமயங்களில் ஆங்காங்கே திட்டுக்கள் போல தோன்றும் என்றும் டாக்டர் ஹரீஷ் எச்சரிக்கிறார். இது உதடு ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

ஜோதிடம் 360 - ஒரு holistic பார்வை

உடல் ஆரோக்கியம் முதல் ஆன்மீக வழிகாட்டுதல் வரை, ஜோதிடம் 360 உங்களின் முழுமையான நல்வாழ்வுக்கு உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான குறிப்புகள் தேவைப்படுவது போல, வாழ்க்கையின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள ஜோதிடம் மற்றும் முருகன் ஆலயங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் வழங்குகிறோம். தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஆறுபடை வீடுகள் மற்றும் பிற முருகன் ஆலயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் இங்கு கிடைக்கும். ஆரோக்கியமான உடலும் தெளிவான மனமும் கொண்ட வாழ்க்கைக்கு எங்களை நாடுங்கள்.

Our Other Services