விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமானது கணேச அஷ்டக மந்திரம். இந்த சக்தி வாய்ந்த துதியானது கணபதியின் பெருமைகளையும், மகிமைகளையும் போற்றிப் புகழ்கிறது. வாழ்வில் தடைகளை நீக்கி, துன்பங்களை விரட்டி, அனைத்து காரியங்களிலும் வெற்றியைத் தேடித்தரும் இந்த அற்புதமான கணேச அஷ்டகத்தைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விநாயகரின் அருள் பெறும் வழி இது.
கணேச அஷ்டகம் - விநாயகர் மந்திரம்
கணேசக அஷ்டக மந்திரமானது கணபதியின் உருவத்தையும், பெருமைகளையும் போற்றி புகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இதை படிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பது இதன் கடைசி ஸ்லோகத்திலும், நூல் பயனிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. விநாயகரை போற்றும் மந்திரங்களில் மிகவும் அற்புதமான, சக்தி வாய்ந்த மந்திரமாக இருப்பது கணேச அஷ்டகம் ஆகும். எட்டு பாடல்களைக் கொண்ட இந்த மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் தடைகள், துன்பங்கள் அனைத்தும் விலகும். பாவங்களில் இருந்து விடுபட்டு, நற்கதி அடைவார்கள்.
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 1
1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
பொருள்: ஒற்றை தந்தத்தை உடையவரே...பெரிய உடலை உடையவரே...பொன்னிறம் உடையவரே...தொப்பை கணபதியே! விசாலமான பார்வையை உடையவரே...கணங்களின் தலைவனாக விளங்கக் கூடிய கணபதியே உங்களை வணங்குகிறேன்.
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 2
2. மெளஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம் பாலேந்து விலஸன் மெளலிம்வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: முஞ்சாப்புல் எனப்படும் புல், கிருஷ்ணார்ஜினம் ஆகியவற்றை ஆபரணமாக அணிந்தவரே! நாகத்தை பூணூலாக அணிந்தவரே! தலையில் சந்திரனை சூடிக் கொண்டிருப்பவரே! கணங்களின் தலைவனாக விளங்கக் கூடியவரே உங்களை வணங்குகிறேன்.
ஜம்முவில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோவில் : ஜூன் 8 ல் கும்பாபிஷேகம்
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 3
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி : பரிபாலிதம் பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கண நாயகம்
பொருள்: அம்பிகையின் மனதை மகிழ்விக்கக் கூடியவரே! பக்தர்களின் அன்பு கொண்டு காப்பாற்றக் கூடியவரே! கணங்களின் தலைவனாக இருக்கக் கூடியவரே உங்களை வணங்குகிறேன்.
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 4
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம் சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: பலவிதமான ரத்தினங்களையும், மாலைகளையும் அணிந்து அலங்காரமாக காட்சி தருபவரே! பல வித ரூபங்களில் அருள்பவரே! கணங்களின் தலைவனே உங்களை வணங்குகிறேன்.
வரவே வராது என நினைத்த பணம் திரும்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும்
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 5
5. கஜவக்த்ரம் ஸூர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம் பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: யானை முகம் கொண்டவரே ! தேவர்களுக்கு எல்லாம் முதல்வனாக செவிகளை விசிறிகளை போல் அசைப்பவரே! பாசம், அங்குசம் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவரே! கணங்களின் தலைவனே உங்களை வணங்குகிறேன்.
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 6
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸூர மஹா ஹவே யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: தேவ - அசுர போரின் போது மூசிக வாகனத்தில் வந்து போர் புரிந்து, வெற்றி பெற்றவரே! சிறந்த பராக்கிரமத்தை உடையவரே ! கணங்களின் தலைவனே உங்களை வணங்குகிறேன்.
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 7
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை : ஸதா ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: யட்சர், கின்னரர், கந்தர்வர், சித்தர், பண்டிதர்களால் சதா சர்வ காலமும் பூஜிக்கப்படுபவரே! பெரியவரே ! கணங்களின் தலைவனான உங்களை வணங்குகிறேன்.
திருப்பதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
கணேச அஷ்டகம் - ஸ்லோகம் 8
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம் ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
பொருள்: அனைத்து விதமான துன்பங்களையும் தகர்ப்பரே! அனைத்து தடைகளையும் விலக்குபவரே! அனைத்திலும் வெற்றியை தருபவரே! கணங்களின் தலைவனான உங்களை வணங்குகிறேன்.
கணேச அஷ்டகம் பாராயணம் செய்வதன் பலன்கள்
கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.
பொருள்: இந்த கணேஷ அஷ்டகம் மகா புண்ணியம் நிறைந்ததாகும். பக்தியோடு இதை பாராயணம் செய்து கணேசரை துதிப்பவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்று, சகல நலன்களும் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முக்கிய பலன்கள்
- வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும்.
- அனைத்து துன்பங்களும் விலகும்.
- பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
- அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.
- சகல நலன்களும் பெற்று நற்கதி அடையலாம்.
- விநாயகரின் முழுமையான அருளைப் பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
கணேச அஷ்டகம் என்றால் என்ன?
கணேச அஷ்டகம் என்பது விநாயகப் பெருமானைப் போற்றிப் பாடும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த துதியாகும். இது விநாயகரின் உருவத்தையும், பெருமைகளையும் விவரிக்கிறது.
கணேச அஷ்டகம் பாராயணம் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும், துன்பங்கள் விலகும், பாவங்களில் இருந்து விடுதலை பெற்று, அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். சகல நலன்களும் பெற்று நற்கதி அடையலாம்.