இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28ஆம் தேதி இரவு தொடங்கி, அக்டோபர் 29ம் தேதி அதிகாலை வரை நீடிக்கிறது. ஜோதிடத்தின் படி, சந்திர கிரகணம் ராகுவின் தாக்கத்தால் ஏற்படுகிறது. மேஷ ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்திரத்தில் ஏற்பட உள்ள இந்த கிரகணத்தின் தாக்கம் எந்தெந்த ராசிகள் மீது மோசமான பலனை ஏற்படுத்தும் என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.
சந்திர கிரகணம் எப்போது, எப்படி ஏற்படுகிறது?
சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனின் மீது விழுவதை பூமி தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அற்புத வானியல் நிகழ்வானது அக்டோபர் 28ஆம் தேதி இரவு 11.31 மணிக்கு தொடங்கி, அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 3.56 மணிக்கு முடிவடைகிறது. மேஷ ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்திரத்தில் ஏற்படக்கூடிய இந்த சந்திர கிரகணம் சில ராசிகளுக்கு கடுமையான பலனை தரக்கூடும்.
சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
அக்டோபர் 28, 2023 அன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் கீழ்க்கண்ட ராசிகளுக்கு சவாலான காலகட்டமாக அமையலாம். ஜோதிட ரீதியாக அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது:
மேஷ ராசி
மேஷ ராசியிலேயே இந்த சந்திர கிரகணம் ஏற்படுவதால் அதிக பாதகம் ஏற்படும். மன அழுத்தம், குடும்ப மற்றும் வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் சிக்கல், நிதி பிரச்சனைகள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷப ராசி
பன்னிரண்டாம் ஸ்தானத்தில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் உடல் நலம் மற்றும் மனக்கவலை அதிகரிக்கும். எளிதாக நினைத்த விஷயங்கள் சவாலாக இருக்கும். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். புதிய வேலைகளை தொடங்குவதைத் தவிர்க்கவும். நிதிநிலை சற்று மோசமடையலாம். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடக ராசி
பத்தாம் வீட்டில் கிரகணம் ஏற்படுவதால் பேச்சு மற்றும் செயலில் கூடுதல் கவனம் தேவை. சர்ச்சையான விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மூலம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம் ராசி
சப்தம ஸ்தானமா ஏழாம் வீட்டில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் பொறுமையின்மை அதிகரிக்கும். செலவினங்களைக் கட்டுப்படுத்தவும். வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும். மனைவியுடன் உறவில் சச்சரவுகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை.
மீன ராசி
இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் தேவையற்ற கவலைகள் மற்றும் பேராசை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனைகளும், மன உளைச்சலும் ஏற்படும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட விஷயங்களை நண்பர்களிடம் பகிர வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கவனமாக செயல்படவும். வீட்டு பெரியவரின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும்.
இத்தகைய கிரகண காலகட்டங்களில் ஜோதிட பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக, முருகன் ஆலயங்கள் அல்லது பிற தெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மன அமைதியை தரும். ராகுவின் தாக்கத்தை குறைக்க மந்திர ஜபங்கள் செய்வது உகந்தது.
சந்திர கிரகணம் 2023: கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாதது என்ன?
சந்திர கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடம் அறிவுறுத்துகிறது. இந்த காலகட்டத்தில் கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், வெளியே செல்வதைத் தவிர்க்கவும், மேலும் எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருப்பதை கருத்தில் கொள்ளவும். கிரகண தோஷம் நீங்க இறைவனை பிரார்த்திப்பது நல்லது.