Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

மகா சிவராத்திரி 2024: 300 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அரிய சுப யோகம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரத தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த அற்புத நாளின் இரவு நேரத்தில் நான்கு ஜாமா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி 2024 அன்று உருவாகும் சிறப்பு யோகங்கள் பற்றி தமிழ் ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதை இங்கு காணலாம்.

மகா சிவராத்திரி சுப யோகங்கள்

இந்து பஞ்சாங்கத்தின்படி, மகா சிவராத்திரி அன்று அதிகாலை 4:45 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் சிவயோகம் உள்ளது. இதேபோல் சர்வார்த்த சித்தி யோகம் காலை 6:45 மணிக்கு தொடங்கி 10:41 வரை நீடிக்கும். சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட அரிய யோகம் கிடைக்கிறது. இந்த நேரத்தில், மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடப்பதால் சந்திர மங்கள யோகம் உருவாகிறது. மேலும் கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சூரியன் என மூன்று கிரக சேர்க்கை யோகம், மீனத்தில் ராகு மற்றும் புதன் இணைவு நடக்கிறது. இந்த கிரக நிலைகள் சில ராசிகளுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும்.

வார ராசிபலன் மார்ச் 4 முதல் 10 வரை: இந்த ராசிகளுக்கு வேலை, பொருளாதாரத்தில் வெற்றி!

மேஷம்

இந்த ராசிக்கு மகா சிவராத்திரியில் உருவாக்கக்கூடிய யோகத்தால் அற்புதமான பொருளாதார பலன்களைப் பெறுவார்கள். இது உங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும். உங்களின் வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த கடின உழைப்புக்கு முன்னேற்றம் தரக்கூடிய பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். முதலீடுகள் மூலம் லாபத்தை பெறலாம். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியின் போது சிவபெருமானின் சிறப்பு பூஜைகளால் மகத்தான பலனை பெறலாம். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் அமையும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெறலாம். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள். சிவபெருமானின் அருளால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை மீண்டும் ஒருமுறை தொடங்கி அதில் வெற்றி பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு சிவராத்திரியில் உருவாகக்கூடிய சுப யோகங்களால் பல நன்மைகளைப் பெறலாம். உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தையும், நற்பெயரையும் பெறுவீர்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். புதிய வண்டி, வாகனம், வீடு போன்ற விஷயங்கள் குறித்த முயற்சிகள் நிறைவேறும். திருமண முயற்சிகளில் நல்ல தகவல் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த மகா சிவராத்திரியில் சிவயோகம், சர்வார்த்த சித்தி யோகம், மற்றும் சந்திர மங்கள யோகம் போன்ற அரிய யோகங்கள் உருவாகின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் கிடைக்கிறது.

மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு மகா சிவராத்திரியில் உருவாகும் சுப யோகங்களால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு வேலை மற்றும் பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும்.

Our Other Services