இந்த ஆண்டு மகாசிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை தரிசிப்பதும், பூஜை, அர்ச்சனை செய்வதும் நற்பலனைத் தரும். ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனியின் தாக்கத்திலிருந்து விடுபடவும், சிவனின் நல்லருளைப் பெறவும், 12 ராசியினர் செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் பற்றி ஜோதிடம்360.in இங்கே வழங்குகிறது.
12 ராசிகளுக்கான மகாசிவராத்திரி சிறப்பு பரிகாரங்கள்
மேஷ ராசி
மேஷ ராசியினர் கரும்புச் சாறு மற்றும் நெய் ஆகியவை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவும்.
ரிஷப ராசி
சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் வெள்ளை நிற பூக்களை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதும், சூட்டுவதும் நற்பலனைத் தரும்.
மிதுன ராசி
புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியை சேர்ந்தவர்கள் சிவராத்திரி தினத்தில் ஈசனுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்யவும்.
கடக ராசி
அஷ்டம சனி நடக்கக்கூடிய கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு, சனியால் ஏற்படும் அசுப பலன்கள் குறைய, ஈசனின் அருள் கிடைக்க பால் அபிஷேகம், அரளிப் பூவால் அர்ச்சனை செய்யவும்.
சிம்ம ராசி
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியினர் அக்னிபுரீஸ்வரர் அருள் கிடைத்திடவும், சனியின் அசுப பலன்கள் குறைந்திடவும், வெல்லம் கலந்த பால் அபிஷேகம் செய்யவும்.
கன்னி ராசி
புதன் பகவானை அதிபதியாக கொண்ட கன்னி ராசியை சேர்ந்தவர்கள், அக்னீஸ்வரர் அருள் பெற்றிட சிவலிங்கத்தின் மீது ஊமத்தங்காய் பூ வைத்து அர்ச்சனை செய்யவும்.
துலாம் ராசி
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி தினத்தில் அண்ணாமலையார் அருள் பெற்றிட சிவலிங்கத்திற்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியினர் அகஸ்தீஸ்வரரின் அருளை பெற்றிட மகா சிவராத்திரி தினத்தில் சிவ சாலிசா பாராயணம் செய்யவும். தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரை அபிஷேகம் செய்யவும்.
தனுசு ராசி
குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினருக்கு சிவபெருமானின் அருள் பெறவும், சனியின் தோஷம் குறையவும், மகாசிவராத்திரி அற்புத நாளில் “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
மகர ராசி
ஏழரை சனி நடக்கக்கூடிய மகர ராசியினர் சனியின் அசுப பலன்கள் குறைய, சிவ சாலிசாவை பாராயணம் செய்யவும். நல்லெண்ணெய், பழத்தை படைத்தல் வேண்டும். அபிஷேகம் செய்வதும் சனியின் தாக்கத்தை குறைக்கும்.
கும்ப ராசி
ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கக்கூடிய கும்ப ராசியினர் இந்த சிவராத்திரி அற்புத தினத்தில், சிவனின் நல்லருளை பெற்றிட கருப்பு எள் கொண்டு அர்ச்சனை செய்வதும், கங்கை நீரால் அபிஷேகம் செய்வதும் நல்லது.
மீன ராசி
ஏழரை சனி தொடங்கியுள்ள மீன ராசியினர் மகாசிவராத்திரி தினத்தில் சனியின் தோஷம் குறைய சிவலிங்கத்திற்குப் பச்சைப் பால் அபிஷேகம் செய்யவும்.
இந்த மகாசிவராத்திரி நாளில், உங்கள் ராசிக்கேற்ற பரிகாரங்களைச் செய்து, சிவபெருமானின் அருளைப் பெற்று, வாழ்வில் சகல நன்மைகளையும் பெறுங்கள்.