பருவ காலங்கள் மாறும்போது நம் சருமத்தின் தன்மையும் மாறும். கோடை காலம் மற்றும் பிற பருவங்கள் வரும்போது சருமத்தில் ஏற்படும் மாசுக்கள், வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பின் காரணமாக சில சருமப் பிரச்சினைகள் தோன்றும். அவற்றில் முக்கியமான ஒன்று தான் இந்த முகப்பரு பிரச்சினை. சில சமயம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாலும் இந்த முகப்பருக்கள் தோன்றும். தமிழ் பாரம்பரியத்தில், முகப்பருக்களை இருந்த இடம் தெரியாமல் விரட்டக்கூடிய அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி ஜோதிடம் போல தெளிவான வழிகாட்டுதல்களை இந்த கட்டுரையில் காணலாம். உங்கள் சருமத்தை பாதுகாத்து, முகப்பரு இல்லாத பளபளப்பான சருமத்தைப் பெற இந்த குறிப்புகள் உதவும்.
முகப்பருக்களை விரட்டும் எளிய வீட்டு வைத்தியங்கள்
கற்றாழை
கற்றாழை சருமத்தை இளமையாக வைத்திருக்கும். இது இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர முகப்பருக்கள் மிக வேகமாக சரியாகும். முகம் பளிங்கு போல வழுவழுப்பாக மாறும். சரும பராமரிப்புக்கு கற்றாழை ஒரு வரப்பிரசாதம்.
மஞ்சள்
நம் பாட்டி, அம்மாக்கள் காலத்து தினசரி சரும பராமரிப்பு புராடக்ட் என்றால் அது மஞ்சள் தான். அழகை மேம்படுத்துவது மட்டுமல்ல சருமத்தில் எந்தவித தொற்றுக்களும் ஏற்படாமல் தடுக்கவும் மஞ்சள் உதவும். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல், அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் முகப்பருக்களை விரட்டவும், இவை இருந்த தழும்பையும் சேர்த்து மறைக்கச் செய்யும். மஞ்சளை விளக்கெண்ணெயுடன் கலந்து அப்ளை பண்ணுங்க.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகர் உடலில் எப்படி மேஜிக் செய்கிறதோ அதேபோல உங்கள் சருமத்திலும் செய்யும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, சிட்ரிக் அமிலம் உள்ளிட்ட சில அமிலங்களும் இருக்கின்றன. அவை பருக்கள் உண்டாகக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வேலையைச் செய்கின்றன. ஆப்பிள் சிடார் வினிகரை சிறிது தண்ணீர் அல்லது ரோஸ்வாட்டர் கலந்து அப்ளை செய்யுங்கள்.
வேப்பிலை
ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் உங்கள் முகப்பருக்களை விரட்ட முடியும் என்றால் அது இந்த வேப்பிலையால் முடியும். வேப்பிலையில் வைட்டமின் ஈ, கால்சியம், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன. இவை முகப்பருவை விரட்டுவது மட்டுமல்ல, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும். வேப்பிலை பொடி அல்லது ஃபிரஷ்ஷான இலைகளை அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.
டீ ட்ரீ ஆயில்
முகப்பருக்களை மிக வேகமாக மறையச் செய்வதற்கு டீ ட்ரீ ஆயில் மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகச் செயல்படும். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்பு பருக்கள் உருவாகக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பண்பு கொண்டது. அதோடு பருக்கள் வந்த இடத்தில் ஏற்படும் எரிச்சலையும் குறைக்கும். 4 சொட்டு டீ ட்ரீ ஆயிலுடன் அரை ஸ்பூன் அளவு ரோஸ்வாட்டரை மிக்ஸ் செய்து, இரவு படுக்கச் செல்லும்முன் முகப்பருக்களின் மேல் வைத்துவிடுங்கள். பின்பு காலையில் எழுந்து பார்த்தால் அந்த முகப்பருவின் வீக்கம், அளவு எல்லாம் சுருங்கியிருக்கும்.
சந்தனம் பொடி
சந்தனத்துக்கு பருக்களை விரட்டும் தன்மை கொண்டது. சிலருக்கு உடல்சூடு அதிகமானாலும் அடிக்கடி பரு வரும். அதுபோன்று உள்ளவர்களுக்கு சந்தனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். முகப்பரு மற்றும் அதற்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் அதிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல்ஜ்களை எதிர்த்துப் போராடும். இது பருக்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் வடுக்கள், கறைகள், கரும்புள்ளிகள், தோலழற்சியையும் குறைக்கும். கால் ஸ்பூன் சந்தனப் பொடியோடு 2 சிட்டிகை வெந்தயப் பொடியுடன் சேர்த்து நீரில் குழைத்து அப்ளை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மேற்கண்ட எல்லா பொருள்களுமே பெரும்பாலும் நம் வீட்டில் இருக்கும் பொருள்கள் தான். அவற்றைப் உங்கள் முகப்பருக்களில் அப்ளை செய்து வர மிக விரைவாக பருக்கள் மறையும். பரு வந்த ஆரம்பத்திலேயே இந்த வீட்டு வைத்தியங்களை செய்தால் பரு ஒரே நாளில் கூட மறையலாம்.
பொறுப்புத் துறப்பு - இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் துல்லியம், செயல்திறன் மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றுக்கு சமயம் தமிழ் பொறுப்பாகாது.