Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வழுக்கை திட்டுகளில் முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய்: 5 வழிகள்

கடுகு எண்ணெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது. இது இரத்த ஒட்டத்தை தூண்டி, முடி வேர்களை பலப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்க உதவும். வழுக்கை திட்டுகளில் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கடுகு எண்ணெயுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். உங்கள் கூந்தல் ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுங்கள்.

கடுகு எண்ணெயுடன் கறிவேப்பிலை: முடி மெலிவதை தடுக்க

கடுகு எண்ணெயை இளஞ்சூடாக்கி அதில் கறிவேப்பிலையை சேர்க்கவும். கறிவேப்பிலை வெடித்ததும் இறக்கி, அறைவெப்பநிலைக்கு வந்ததும் எண்ணெயை வடிகட்டி சேமித்து, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். வாரத்தில் இரண்டு முறை இந்த மசாஜ் செய்வதால் கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரோட்டின் முடி மெலிவதை நிறுத்தி, முடி வளர்ச்சியை உயிர்ப்பிக்க செய்கிறது. இது நரை முடியையும் தடுக்கும்.

கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி: அடர்த்தியான கூந்தலுக்கு

செம்பருத்தி இலை மற்றும் பூ இரண்டையும் நசுக்கி, கடுகு எண்ணெயுடன் கலந்து வழுக்கை இருக்கும் இடங்களில் தடவவும். 40 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை அலசி எடுக்கலாம். இது அடர்த்தியை மீட்டெடுத்து, கூந்தலை பளபளப்பாக வைத்திருக்க செய்கிறது. செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகள் கெரட்டின் உற்பத்தியை தூண்டி, வழுக்கை திட்டுக்கள் உள்ள இடத்தில் முடி வளர செய்யும். கடுகு எண்ணெயுடன் கலக்கும்போது இது நிறம் மாறி, கூந்தல் மறுவளர்ச்சிக்கு துரிதப்படுத்தும்.

கடுகு எண்ணெயுடன் கற்றாழை: உச்சந்தலை பாதுகாப்புடன் முடி வளர்ச்சி

கடுகு எண்ணெயுடன் கற்றாழை ஜெல் சேர்த்து ப்ளெண்டர் ஆக்கி அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து கூந்தலை அலசி விடவும். இது உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி செய்யும். கடுகு எண்ணெயை இளஞ்சூடாக்கி முடி நுண்ணறைகளை தூண்டும், கற்றாழை குளிச்சியை தரும். இரண்டும் இணைந்து உச்சந்தலையை சேதத்திலிருந்து பாதுகாத்து, புதிய முடி வளரவும் செய்யும்.

கடுகு எண்ணெயுடன் வெந்தயம்: நுண்ணறைகளை வலுப்படுத்த

வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் பேஸ்டாக அரைத்து அதை கடுகு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். இதை தலைமுடி முழுவதும் தடவி 40 நிமிடங்கள் வைத்திருந்து கூந்தலை அலசினால் முடி வளர்ச்சி உயிர்ப்பிக்கலாம். வெந்தயத்தில் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைவாக உள்ளது. கடுகு எண்ணெய், வெந்தயம் இரண்டும் முடியின் நுண்ணறைகளுக்கு உதவுவதோடு, அடர்த்தியான கூந்தலை உருவாக்கி, முடியின் வேரிலிருந்து வலுப்படுத்தி, உறுதிப்படுத்துகின்றன.

கடுகு எண்ணெயுடன் வெங்காயச்சாறு: கொத்து கொத்தாக உதிரும் முடிக்கு

முடி வளர்ச்சிக்கு வெங்காயச் சாறுடன் இளஞ்சூடான கடுகு எண்ணெயை சம பாகங்களாக கலந்து, உச்சந்தலையில் குறிப்பாக முடி கொத்தாக உதிரும் பகுதிகளில் மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை சுத்தம் செய்யவும். வழக்கமாக இதை செய்து வரும்போது கொத்தாக விழுந்த பகுதிகளில் முடி வளர்வதை பார்க்கலாம். வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி நுண்குழாய்களை தூண்டி, முடி வளர்ச்சி டானிக் ஆக செயல்படும்.

கடுகு எண்ணெய் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் மற்றும் பயன்பாட்டு முறைகள்

கடுகு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு அற்புதமாக உதவும் என்றாலும் அது உடனடியாக நடக்காது. முடி வளர்ச்சிக்கு விலை உயர்ந்த சீரம்கள், ஷாம்புகள் விட கடுகு எண்ணெய் சிறப்பாகவே உதவும். கடுகு எண்ணெய் பயன்படுத்தும் போது அப்படியே பயன்படுத்தாமல் இளஞ்சூடாக்கி பயன்படுத்த வேண்டும். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மசாஜ் செய்யலாம். மஞ்சள் மற்றும் கருப்பு கடுகு எண்ணெய் இரண்டுமே முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகின்றன. கருப்பு கடுகு எண்ணெய் அதிக அளவு குளுக்கோசினோலேட்டுகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உச்சந்தலை இரத்த ஓட்டத்தை தூண்டுகின்றன. மஞ்சள் கடுகு எண்ணெய் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது இது உச்சந்தலையை சீரமைக்க உதவுகிறது. வறட்சி மற்றும் பொடுகை குறைக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கடுகு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், அது உடனடியாக நடக்காது. தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல பலனைத் தரும். பொறுமையுடன் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சள் மற்றும் கருப்பு கடுகு எண்ணெய் இரண்டுமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு சத்துக்களை கொண்டிருப்பதால், உங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம்.

Our Other Services