Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பெண்களுக்கான மச்ச சாஸ்திரம்: அதிர்ஷ்ட மச்சங்கள் தரும் பலன்கள்

பொதுவாக அதிர்ஷ்டசாலிகளை மச்சக்காரர்கள், எங்கேயோ மச்சம் இருக்கு என பலர் கிண்டலாக சொல்வதுண்டு. மச்சங்கள் ஒருவரின் அடையாளமாகவும் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு உடல் பாகங்களில் இருக்கும் மச்சங்கள் எந்த மாதிரியான பலன்களை அவர்களுக்கு தரும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மச்ச சாஸ்திரம் என்றால் என்ன?

மச்ச சாஸ்திரம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவாகும். ஒருவரின் உடலில் உள்ள மச்சங்களை வைத்தே அவர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் ஏற்படும், அவர்களின் குணங்கள் என்ன என்பதை கணித்து சொல்வது மச்ச சாஸ்திரம் ஆகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் வேறுபடும். குண நலன்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் பற்றிய அறிய உதவக் கூடியது என்பதால் மச்ச சாஸ்திரம் மக்களிடம் சமீப காலமாக அதிகம் பிரபலமாகி வருகிறது.

சாமுத்திரிக்கா லட்சணப்படி ஒரு குறிப்பிட்ட இடங்களில், குறிப்பாக கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. அப்படி பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

பெண்களுக்கான அதிர்ஷ்ட மச்சங்கள் தரும் பலன்கள்

உதட்டில் மச்சம்

மேல் உதடு அல்லது கீழ் உதடு எதுவாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு அமைய இருக்கும் கணவரும் சிறந்த துணையாக இருப்பார். வசதியான வாழ்க்கையும் அமையும்.

நெற்றியில் மச்சம்

வலது புறம்: தைரியசாலியாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் இருப்பார்கள். யாரையும் சார்ந்து இருக்க மாட்டார்கள். எந்தக் காரியத்திலும் வெற்றி அடைய வேண்டும் என்ற வைராக்கியம் இவர்களிடம் அதிகமாகக் காணப்படும்.

இடது புறம்: இவர்கள் அழுத்தக்காரர்களாகவும், பிடிவாதக்காரர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு தீய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படும்.
சிவப்பு நிற மச்சம்: இடது நெற்றியில் பெண்களுக்கு சிவப்பு நிற மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.

நெற்றிப் பொட்டில் மச்சம்

பொட்டு வைக்கும் இடம் அல்லது குங்குமம் வைக்கும் நெற்றி வகிட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் உயர் பதவியில் இருப்பவரை கணவராக அடைவார்கள். திருமணம் செய்யும் போது சாதாரண நிலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இவர்களின் கணவர் உயர்வான பதவியை அடைவார்.

மூக்கில் மச்சம்

மூக்கிற்கு மேல் மச்சம் இருந்தால், எவ்வளவு கஷ்டமான சவாலாக இருந்தாலும் அசால்டாக முடித்து விடுவார்கள். எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டார்கள். மற்றவர்களால் செய்து முடிக்க முடியாத காரியங்களைக் கூட இவர்கள் எளிதில் செய்து முடிப்பார்கள். நுனி மூக்கில் மச்சம் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு வசதியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.

வாய்க்கு மேல் மச்சம்

வாய்க்கு மேல், மூக்கிற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கன்னத்தில் மச்சம்

இடது கன்னம்: ஈர்ப்பு சக்தியும், வசீகரமும் அதிகமாக இருக்கும். அனைவருக்கும் மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். யாரிடமாவது உதவி கேட்டால் அது உடனடியாக கிடைக்கும். வயது ஏற ஏற வசீகரமும், ஈர்ப்புத் தன்மையும் அதிகரிக்கவே செய்யும்.

வலது கன்னம்: இவர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். சமநிலை என்பது இவர்களது வாழ்க்கையில் இருக்காது.

கழுத்தில் மச்சம்

வலது கழுத்து: செல்வாக்கு அதிகமாக இருக்கும். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலும் இவர்களின் வார்த்தைக்கு தனி மதிப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் இவர்கள் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும்.

இடது கழுத்து: பண வசதி கொண்டவர்களாக இருப்பார்கள். வயது ஏற ஏற இவர்களின் பொருளாதார நிலை உயர்ந்து கொண்டே இருக்கும். இரக்க குணமும் அதிகமாக இருப்பதால் தானம், தர்மங்கள் போன்றவற்றில் அதிக சிந்தனையும் இருக்கும்.

தோளில் மச்சம்

வலது தோள்பட்டை: இது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. தைரியமானவர்களாகவும், எதற்கும் பயப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.

இடது தோள்: இவர்கள் குடும்பத்தை மிகச் சிறப்பாக வழி நடத்தும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் மச்சம்

மேல் வயிற்றுப் பகுதி: பொறுமையான, நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அடி வயிறு: ராஜயோகத்தைக் குறிக்கும். உயர்ந்த பதவிகள், சொந்த தொழில் ஆகியவை இவர்களுக்கு அமையும்.

முதுகில் மச்சம்

முதுகில் மச்சம் இருந்தால் இவர்கள் நினைத்தைத நடத்தி காட்டும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வ செழிப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மச்ச சாஸ்திரம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை ஆகும். ஒருவரின் உடலில் உள்ள மச்சங்களின் அமைப்பை வைத்து அவர்களின் குணங்கள், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆகியவற்றை கணிப்பதாகும்.

பெண்களுக்கு உதட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல கணவர் அமைந்து வசதியான வாழ்க்கை கிடைக்கும்.

ஆம், இடது நெற்றியில் பெண்களுக்கு சிவப்பு நிற மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் ஈர்ப்பு சக்தியும், வசீகரமும் அதிகமாக இருக்கும். வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறி வரும்.

Our Other Services