Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

புஷ்பவனம் குப்புசாமி வீட்டு சீக்ரெட் கடுகு காபி

சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தங்கள் வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல், சளி, தலைவலி வந்தால் தன் அம்மா ஒரு காபி செய்து தருவார் என்றும், அதை குடித்ததுமே சளி, தலைவலி சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது கடுகு காபி என்று சொன்னார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த பாரம்பரிய வைத்தியத்தின் அற்புதங்களை பற்றி இங்கு காண்போம்.

கடுகு காபி செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

  • கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 300 மில்லி
  • நாட்டுச் சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்யும் முறை:

  1. ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் அளவு கடுகை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. அதை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து வறுக்க வேண்டும். கடுகு முழுவதும் பொரிந்து வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடுங்கள். கடுகு தீய்ந்து விடக் கூடாது.
  3. இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடி செய்ய வேண்டும். இது பார்க்கவும் வாசனையும் காபி பொடி போல இருக்கும்.
  4. எடுத்து வைத்திருக்கும் 300 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த கடுகு பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  5. நன்கு கொதித்ததும் வடிகட்டினால் கடுகு காபி ரெடி. இதை சூடாக காபி போல குடிக்க வேண்டியது தான்.

கடுகு காபி குடிப்பதன் நன்மைகள்

காய்ச்சல் சரியாக

நம் தாத்தா பாட்டி காலத்தில் காய்ச்சல் வந்தால், அதிலும் குளிர் ஜுரம் வந்தால் இந்த கடுகு காபி தான் செய்து குடிப்பார்களாம். இந்த காபியை நன்கு சூடாகக் குடித்து விட்டு, போர்வை போர்த்திப் படுத்துக் கொண்டால் கொஞ்ச நேரத்தில் நன்கு வியர்த்து விடும். காய்ச்சலும் உடல் வெப்பநிலையும் அப்படியே குறைந்துவிடுமாம்.

தலைவலி, சளி நீங்க

மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கிற சளியாக இருந்தாலும் சரி, அல்லது மார்பில் தேங்கியிருக்கும் சளியாக இருந்தாலும் சரி, இந்த கடுகு காபி குடித்தால் சட்டுனு கரைஞ்சி வெளியேறிடுமாம். அதேபோல நீண்ட நாள் தீராத ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் டென்ஷனால் ஏற்படும் தலைவலி இருக்கும்போது இந்த கடுகு காபியை ஒரு டம்ளர் அளவு சூடாகக் குடித்தால் உடனே தலைவலி குறையுமாம்.

மூளை சுறுசுறுப்புக்கு மற்றும் நீர்க்கோவை

தலைக்குக் குளித்து விட்டு வந்தவுடன் அல்லது அதிகமாக வியர்க்கும் போது அதிகமாக தலையில் நீர்க் கோர்க்கும் பிரச்சினை உண்டாகும். இந்த பிரச்சினை ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தான் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு இந்த கடுகு காபி நல்ல தீர்வு தரும். இதை இன்னும் கொஞ்சம் அதிகம் தண்ணீரும் கடுகும் சேர்த்து நீர்க்கோவை சரியாகும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சளி, காய்ச்சல், தலைவலி, மூக்கு ஒழுகல், மார்புச் சளி, நீர்க்கோவை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு காபி நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. இது பாரம்பரியமான ஒரு வீட்டு வைத்தியமாகும்.

கடுகை வெறும் வாணலியில் நன்கு வறுத்து, ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர், 300 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் கடுகு பொடியை சேர்த்து நன்கு கொதித்ததும் வடிகட்டி சூடாக குடிக்கலாம். நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு சமயம் தமிழ் பொறுப்பல்ல. எந்தவொரு மருத்துவ ஆலோசனையும் பெறுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Our Other Services