துர்கா தேவியின் சக்திவாய்ந்த மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் துதிகள் அடங்கிய தொகுப்பு இது. இம் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் துன்பங்கள் நீங்கி, இன்பமும் வெற்றியும் பெருகும். துர்கா தேவி வழிபாடு பக்தர்களுக்கு அமைதியையும், தைரியத்தையும், செல்வத்தையும் அருளும்.
துர்கா தேவியின் முக்கிய மந்திரங்கள்
1. சர்வ மங்கள மாங்கல்யே:
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே திரியம்பிகே கெளரி நாராயணீ நமோஸ்துதே!!
2. ஸர்வா பாதா:
ஸர்வா பாதா வினிரும்க் தோ தன் தாந்ய சுதன் விதஹ் மனுஷ்யோ மத்ப்ரஸாதேந் பாவிஷ்யதி ந சன்ஸாயஹே
3. ஜயந்தீ மங்களா காளீ:
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே
4. தேஹி செளபாக்யம்:
தேஹி செளபாக்யம் ஆரோக்கியம் தேஹி மே பரமம் சுகம் ரூபம் தேஹி ஜெயம் தேஹி யஷோ தேஹி த்விஷோ ஜஹி
5. காத்யாயனி மஹாமாயே:
காத்யாயனி மஹாமாயே மஹாயோகிந்யதீஸ்வரி நந்தகோபசுதம் தேவி பதிம் மே குரு தே நம
சிறப்பு துர்கா மந்திரங்கள்
துர்கா தேவி தியான மந்திரம்:
'ஓம் ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்மன் லோகாயந்த்ரா சன்யுக்தம் பட்மெண்டு சத்ய ஷான் நாம் '
துர்கா காயத்ரி மந்திரம்:
"ஓம் காத்யாயனய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி தன்னோ துர்கிப்ரசோதயாத்"
துர்க்கை சத்ரு சாந்தி மந்திரம்:
"ஓம் தும் துர்காயே நமஹ"
துர்கா சித்த மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் தும் துர்காயே நமஹ"
நவர்ண மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சை
காலராத்ரி மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சை ஓம் காலராத்ரி தைவ்யே நம
பீஜ மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே
துர்கா கவச் மந்திரம்:
ஓம் அஸ்ய ஸ்ரீ சண்டிகா கவச்சஸ்ய பிரம்ம ரிஷி, அனுஷ்டுப் சந்த, சாமுண்டா தேவதா ஓம் ஜெயந்தி மங்கள காளி பத்ரகாளினி துர்கா க்ஷமா சிவ தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோ'ஸ்துதே யா தேவி ஸர்வ பூதேஷு மா காலராத்ரி ரூபாண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
துர்கை ஸ்லோகம்
வாழ்வு ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகையீன்றவள் துர்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மையானவள் துர்கா செபமுமானவள் அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள் மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உயிருமானவள் துர்கா உடலுமானவள் உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள் பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள் துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள் நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவுமானவள் துர்கா குழந்தையானவள் குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள் திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தொடர்புடைய துர்கை மந்திரங்கள் : துர்க்கை 108 போற்றி , லலிதா சகஸ்ரநாமம்