சனி பகவான் கர்ம காரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவரின் செயலுக்கு ஏற்ற பலனை தரக்கூடியவர். சிறப்பான செயல்கள், தர்ம காரியங்கள் மூலம் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும்போது சனி மூலம் அசுப விளைவுகள் ஏற்படும். சனி பகவான் தரக்கூடிய அசுப பலன்களிலிருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்களை ஜோதிடம்360 உங்களுக்காக இங்கு வழங்குகிறது.
ஏழரை சனி எந்த ராசிகளை பாதிக்கும்?
சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் போது, அந்த ராசிக்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளையும் சேர்த்து ஏழரை சனி பாதிப்பு ஏற்படும். இது மூன்று பகுதியாக நடக்கும்:
- விரய சனி: முதலில் இரண்டரை ஆண்டுகள் முன் ராசிக்கு.
- ஜென்ம சனி: அடுத்த இரண்டரை ஆண்டுகள் சொந்த ராசிக்கு.
- பாத சனி: இறுதி இரண்டரை ஆண்டுகள் அடுத்த ராசிக்கு.
மொத்தம் ஏழரை ஆண்டுகள் சனி பகவான் சோதிப்பார். இந்த ஏழரை சனி காலத்தில் சனி பகவான் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துவார், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் அசுபமான பலன்களையும், சிக்கலான சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி, சம்பள உயர்வில் தடை ஏற்படலாம். உங்கள் செயலில் நிதானமும் ஒழுக்கமும் அவசியம்.
சனி பாதிப்பிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்
சனி தோஷத்திலிருந்து விடுபட சில எளிய ஆனால் சக்திவாய்ந்த பரிகாரங்கள் இங்கே: இந்த பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும்.
சனி விரதம் மற்றும் வழிபாடுகள்
- சனிக்கிழமைகளில் விரதம் இருங்கள்.
- அனுமான் வழிபாடு செய்யுங்கள்.
- சனி ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது உங்கள் அபாயமான சூழலைக் குறைக்கும்.
- நேர்மறையான சிந்தனையும், இனிமையான பேச்சும் அவசியம்.
ஒழுக்கத்துடன் இருத்தல்
உங்கள் குடும்பத்திலும், வெளியிடத்திலும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம். உங்கள் பேச்சு, செயலில் நிதானம் தேவை. ஒழுக்கமான வாழ்க்கை சனியின் அசுப பலன்களை குறைக்கும்.
நிழல் தானம்
வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு இளைப்பாற நிழலை ஏற்படுத்தித் தருவதும், தாகத்தை போக்க சுத்தமான தண்ணீர் தருவதும் மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும். இது சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும்.
அரசமர பரிகாரம்
ஏழரை சனி அல்லது ஜாதகத்தில் அசுபமான இடத்தில் சனி பகவான் இருப்பின், ஒவ்வொரு சனிக்கிழமையும், வெள்ளம் மற்றும் கருப்பு எள் கலந்த நீரை அரசமரத்திற்கு ஊற்றவும். தினமும் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செய்யவும். மாலை நேரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிய தீபத்தில் கருப்பு எள் திரியில் அரச மரத்திற்கு கீழே ஏற்றி வழிபாடு செய்யவும்.
மந்திரங்களை உச்சரித்தல்
சனி பகவானின் நல்லருளை பெற்றிட ஏழரை சனி, அஷ்டமா சனி, அர்த்தாஷ்டமச் சனி நடக்கக்கூடிய ராசிகள் அனுமான் சாலிசா, விநாயகர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கவும். முடிந்த போதெல்லாம் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய சிவ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து வரவும். இதன் மூலம் உங்களின் இன்னல்கள் குறையும்.
முக்கிய குறிப்புகள்
- சனி பகவானின் அருளைப் பெற பொறுமையும் நேர்மையும் மிக அவசியம்.
- தொடர்ச்சியான தான தர்மங்கள் மற்றும் இறை வழிபாடு உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.
- ஜோதிடம் மூலம் உங்கள் தனிப்பட்ட சனி பாதிப்பறிந்து அதற்கேற்ற பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.