எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதி எண்ணை ஆளக்கூடிய அதிபதியின் ஆளுமை அந்த நபர் மீது அதிகமாக இருக்கும். குறிப்பாக, சனி பகவான் ஆளக்கூடிய 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? அவர்களின் ஆளுமை, இயல்பு, நிதி நிலை, மற்றும் செல்வ மேலாண்மை திறன் எப்படி அமையும் என்பதை இந்த ஜோதிட வழிகாட்டி விளக்குகிறது.
சனி பகவானின் தாக்கம் மற்றும் நிதி நிலை
சனி பகவானின் தாக்கத்தால், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் நிதி நிலை மீது கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இதனால் இவர்கள் சிலசமயம் கஞ்சத்தனமானவர்களாகத் தோன்றலாம். இவர்களின் செல்வ நிலை, வேலை, குடும்ப சூழல் ஆகியவை அவர்களின் கடின உழைப்பு மற்றும் சிந்தனையுடன் கூடிய பண நிர்வாகத்தால் மேம்படும்.
8 ஆம் தேதி பிறந்தவர்கள்: எண் கணித பலன்
எண் கணிதத்தின்படி, சனி பகவானின் எண் 8 ஆம் தேதி பிறந்தவர்கள், சனியின் சிறப்பு கருணைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் எந்த தொழிலை செய்தாலும் அதில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிறப்பான நிதி நிலை இருந்தாலும், பெரும்பாலும் சற்று கஞ்சத்தனமானவர்களாக இருப்பார்கள். வருடத்தின் எந்த மாதத்தில் 8 ஆம் தேதி பிறந்திருந்தாலும், அவர்கள் கடின உழைப்பால், எப்படிப்பட்ட பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அதிக நம்பிக்கை மற்றும் சிறப்பான சிந்தனை இருக்கும். இதனால் தொழில் வாழ்க்கையில் வெற்றியும், சமூகத்தில் மரியாதையும் பெறுவார்கள். பணம், புகழ், செல்வம் நிறைந்திருக்கும். அதே சமயம் இவர்களிடமிருந்து பணத்தை பெறுவது கடினமான விஷயமாக இருக்கும். தங்களின் பணத்தை மிகவும் கவனமாக செலவழிப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் பெரியளவில் பொருளாதார பிரச்சனையையும் சந்திக்க மாட்டார்கள்.
17 ஆம் தேதி பிறந்தவர்கள்: எண் கணித பலன்
எந்த மாதத்திலும் 17 ஆம் தேதி பிறந்தவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். சுயமரியாதை மிகவும் முக்கியம். இவர்களிடம் பிறரிடம் எளிதாக பழகும் குணம், சந்திக்கும் எண்ணம் இருக்காது. குறிப்பாக பணம் விஷயத்தில் யாரையும் எளிதாக நம்ப மாட்டார்கள். பணத்தை சேமிப்பதில் வல்லவர்கள். 17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், பணத்தை சேமித்து வசதியுடன் வாழக்கூடியவர்கள். மேலும் தான் எந்த துறையில் இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு தன் கடின உழைப்பாலும், போராட்டத்தாலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். இவர்கள் நிதி விஷயங்களில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் செலவழிக்க விரும்ப மாட்டார்கள்.
26 ஆம் தேதி பிறந்தவர்கள்: எண் கணித பலன்
எந்த மாதத்திலும் 26 ஆம் தேதி பிறந்தவர்கள் சிறந்த கடின உழைப்பாளிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் தான் சம்பாதித்த பணத்தை அதிக சிந்தனையுடன் செலவு செய்வார்கள். அதனால் ஒருபோதும் வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்க மாட்டார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பெரும்பாலான வருமானத்தைச் சேமிப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். மேலே குறிப்பிட்ட 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் பெரிய மன பிரச்சனையே இருக்காது. இவர்கள் பார்க்க கஞ்சன் போல தோன்றினாலும், நிதி விஷயங்களை சரியாக கையாளுவார்கள். சமூகத்தில் மரியாதை, நல்ல பெயரும் அதிகமாகவே இருக்கும். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.
முக்கிய சிறப்பம்சங்கள்
- சனி பகவான் ஆதிக்கம்: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆசியைப் பெற்றுள்ளனர்.
- கடின உழைப்பு: இவர்கள் எந்த பணியையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
- நிதி மேலாண்மை: பணத்தை சேமிப்பதிலும், கவனமாக செலவழிப்பதிலும் சிறந்தவர்கள்.
- சமூக மரியாதை: தொழில் மற்றும் சமூகத்தில் நல்ல பெயர் மற்றும் மரியாதையைப் பெறுவார்கள்.
- பொருளாதார ஸ்திரத்தன்மை: வாழ்க்கையில் பெரியளவில் பொருளாதார பிரச்சனைகளை சந்திப்பதில்லை.