Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கழுத்து பிடிப்புக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்

நம்மில் பலரும் கழுத்து பிடிப்பால் அவதிபடுவதுண்டு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உட்காரும் அல்லது நிற்கும் போது தவறான தோரணை, தூங்கும் போது ஏற்படும் அசௌகரியம், அதிக எடை தூக்குதல், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லலாம். இதனால் கழுத்தை அசைக்கும்போது வலி, தலைவலி, கழுத்தை திருப்ப முடியாத நிலை போன்ற அசெளகரியங்கள் இருக்கும். கழுத்து வலி மற்றும் பிடிப்பு நிவாரணத்திற்கான இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவக்கூடும்.

கழுத்து பிடிப்பு நீங்க எளிய வழிகள்

வெப்பம் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம்

வெப்பம் அல்லது ஐஸ் கட்டிகளை கழுத்தில் வைத்தால் வலி நன்றாகவே குறையும். தசைகளை தளர்த்தும். வீக்கம் மற்றும் காயத்தைத் தடுக்கவும் இது உதவும். குளிர்ந்த ஒத்தடம் போன்று சூடான ஒத்தடமும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சூடு அதிகம் இல்லாமல் பொறுக்கும் சூட்டில் கொடுக்கவும். அதே போன்று ஐஸ் கட்டிகளை நேரடியாக வைக்காமல் மெல்லிய துணியில் சுற்றி வைக்கலாம். இது சருமத்தை பாதிக்காது.

ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

கழுத்து தசைகளை நீர்த்துவதன் மூலம் வலியை குறைக்கலாம். ஸ்ட்ரெச்சிங் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், குணப்படுத்தவும் உதவும். மேலும் இது மன அழுத்தத்தை குறைக்கும். எதிர்காலத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும். சரியான முறையில் செய்து வருவது கழுத்து பிடிப்பு தளர்த்தி இறுக்கத்தை சரி செய்து வலி உணர்வை குறைக்கும்.

கழுத்துக்கு மசாஜ்

கழுத்து பிடிப்பு இருக்கும் போது மசாஜ் செய்வதன் மூலம் வலியை குறைக்கலாம். மசாஜ் செய்வது இறுக்கமான தசைகளை தளர்த்தி, அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் கழுத்து பிடிப்பு படிப்படியாக குறையும். மேலும் மென்மையான மசாஜ் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைத்து நிறைந்த உணர்வை தரும்.

சரியான தோரணை

சரியான தோரணையை பராமரிப்பது முக்கியம். மோசமான தோரணை கழுத்து தசைகளை பாதிக்கும். இது நாள்பட்ட வலி, தலைவலிக்கு வழிவகுக்கும். சரியான தோரணை கழுத்து மற்றும் முதுகெலும்பை நேராக வைக்க உதவும். கழுத்து பிடிப்பு இருந்தால் உங்கள் தோரணையில் கவனம் செலுத்துவது வலி உணர்வை குறைக்கும். அதே போன்று வேலை செய்யும் இடத்தில் சரியான அமைப்பை உருவாக்குவது அவசியம். கணினி திரையை கண் மட்டத்திற்கு நேராக வைக்கவும். இது கழுத்து வலியைத் தடுக்கும்.

சௌகரியமான தூக்கம்

கழுத்து விறைப்பு நிலைக்கு தூங்கும் நிலை மிக முக்கியமானது. சரியான தூக்கம் கழுத்து வலியைத் தடுக்க உதவும். படுக்கை அறை செளகரியம் போன்று, சரியான தலையணை மற்றும் மெத்தை பயன்படுத்துவதும் தூக்கத்தை மேம்படுத்துவதோடு கழுத்து பிடிப்புகளையும் குறைக்கும். குப்புறப்படுத்து தூங்குவதை தவிர்க்கவும்.

உடல் செயல்பாடுகளை குறைத்தல்

கழுத்து பிடிப்பு இருக்கும் போது கழுத்துக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிக எடை தூக்குதல், அதிக நேரம் திரை பார்ப்பது, கழுத்து உயர வைத்து வேலை செய்வது போன்றவற்றை தவிர்ப்பது வலியை கட்டுக்குள் வைக்க உதவும்.

கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்

  • மருத்துவ ஆலோசனை: வலி நிவாரணிகளும் தசைப்பிடிப்புகளை தவிர்க்க உதவும் எனினும் மருத்துவரின் அறிவுரையுடன் இதை எடுத்துகொள்வது பாதுகாப்பானது.
  • பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உட்காரும் அல்லது நிற்கும் போது தவறான தோரணை, தூங்கும் போது ஏற்படும் அசௌகரியம், அதிக எடை தூக்குதல், மற்றும் மன அழுத்தம் ஆகியவை கழுத்து பிடிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.

வெப்பம் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம், மென்மையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் மற்றும் கழுத்துக்கு மசாஜ் செய்வது உடனடி நிவாரணம் பெற உதவும்.

சரியான தோரணையை பராமரிப்பது, சௌகரியமான தூக்க நிலையை உறுதி செய்வது (சரியான தலையணை), மற்றும் அதிக உடல் செயல்பாடுகளை குறைப்பது கழுத்து பிடிப்பைத் தடுக்க உதவும்.

Our Other Services