Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

திருப்பதி வேங்கடேச பெருமாள் - பத்மாவதி தாயார் கதை: பக்தர்கள் குவியும் ரகசியம்

உலகிலேயே அதிக பக்தர்கள் குவியும் புண்ணிய ஸ்தலங்களில் முதன்மையானது திருப்பதி ஏழுமலையான் கோவில். லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வேங்கடேச பெருமாளை தரிசிக்க குவிகிறார்கள். மற்ற கோவில்களில் காணாத இந்த மாபெரும் பக்தர் கூட்டத்திற்கு பின்னால், வேங்கடேச பெருமாளும் பத்மாவதி தாயாரும் நிகழ்த்திய அற்புதமான திருவிளையாடல்களும், அவர்களது கருணையும் தான் காரணம். இந்த கட்டுரையில், திருமலை திருப்பதிகளின் மகிமையையும், பத்மாவதி தாயார் ஏன் கீழ் திருப்பதியிலேயே அருள்பாலிக்கிறார் என்பதையும், பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும் ஜோதிடம்360 உங்களுக்காக விளக்குகிறது.

திருமலையில் வேங்கடேச பெருமாள் குடிகொண்ட கதை

மற்ற எந்த கோவிலிலும் இல்லாமல் திருப்பதியில் மட்டும் ஏன் இவ்வளவு பக்தர்கள் குவிகிறார்கள் என்பதை திருமலையில் வேங்கடேச பெருமாள் குடி கொண்ட கதையையும், அவர் நிகழ்த்திய திருவிளையாடல் கதை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பத்மாவதியான மகாலட்சுமி

ஆகாசராஜன் என்றொரு அரசன், ஒரு சமயம் நகர்வலம் வரும் போது தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது இருப்பதை கண்டார். அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், "இது யாருடைய குழந்தை? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே" என்று கூறினார். ராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மி தான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தைக்கு உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி உத்தர விட்டார். ஆனால் யாரும் குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. "எல்லாம் இறைவன் செயல். இந்த குழந்தையை என் மகளாக ஏற்று நானே வளர்ப்பேன்" என்று முடிவெடுத்து அந்த குழந்தைக்கு, தாமரையில் கண்டெடுத்ததால் "பத்மாவதி" என்று பெயரிட்டார் அரசர்.

சீனிவாச - பத்மாவதி திருமணம்

குழந்தை பருவத்தில் இருந்து பத்மாவதி மங்கை பருவம் அடைந்தாள். தான் யார் என்பதை உணர்ந்து, பெருமாளுடன் மீண்டும் ஒன்று சேர தவம் இருந்தாள். வேங்கடேச பெருமாள், திருப்பதி மலை மீது தோன்றி தன் உடன் இருந்த வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் அனுப்பி பெண் கேட்டு தூது அனுப்பினார். வெங்கடாசலபதியே மருமகனாக வர இருப்பதை தடுப்பாரா அரசர்? தன் மகளின் விருப்பத்தையும் தெரிந்த மன்னர், பெருமாளுக்கு பெண் தர சம்மதம் தெரிவித்தார். அரசருடைய மகளை திருமணம் செய்வதால் அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் திருமணத்திற்கு தன் சார்பிலும் கல்யாண செலவு செய்ய வேண்டும் என்று விரும்பி குபேரரிடம் கடன் பெற்றார் பெருமாள். திருமணமும் பிரமாண்டமாக நடந்தது. ஒரே மகள் என்பதால் சீர்வரிசையை அள்ளி கொடுத்தார் அரசர். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் சீர் பொருட்கள் இருந்தாலும், சமையல் பொருட்களில் கருவேப்பிலை இல்லாததை கண்டார் பெருமாள்.

கோபத்தில் பெருமாள் சொன்ன வார்த்தை

"என்ன பத்மாவதி, உன் தந்தைக்கு கருவேப்பிலை வாங்க கூட பணம் இல்லையா." என்று கேலியாக நகைத்தார். தன் தந்தையை பற்றி கிண்டலாக பேசி விட்டாரே என்ற கோபத்தில், "சரி.. இருங்கள், தந்தையிடம் சென்று கருவேப்பிலை வாங்கி வருகிறேன். பொழுது சாயும் முன்பாகவே வந்து விடுகிறேன்." என்று உறுதி தந்து சென்றாள் பத்மாவதி. ஆனால் தந்தையிடம் கருவேப்பிலை வாங்கி மேல் திருப்பதி செல்வதற்கு முன்னதாகவே கீழ் திருப்பதியிலேயே கதிரவன் மேற்கில் மறைந்துவிட்டான். பொழுது சாய்ந்தும் விளக்கு வைக்கும் நேரத்தில் மனைவி வீடு திரும்பாமல் இருக்கிறாளே என்று கோபப்பட்ட பெருமாள், "நீ கீழ் திருப்பதியிலேயே தங்கி விடு." என்று சொல்லிவிட்டார்.

கீழேயே தங்கிய பத்மாவதி

தன் கணவரின் சொல்லுக்கு மறுப்பு சொல்லி வாதாடுவது நல்லதல்ல என்று நினைத்த பத்மாவதி, கீழ் திருப்பதியிலேயே தங்கிவிட்டாள். ஒருவருக்கு ஆபத்து என்றால் முதலில் பரிதாபப்பட்டு அதற்கு தீர்வு சொல்வதும் பெண்கள்தான். அதனால் பெருமாளுக்கு முன்னதாகவே பக்தர்களுக்கு அருள் தர பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் தங்கி இருக்கிறார். இந்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் ஒன்றும் சொல்லப்படுகிறது.

உடல் குறையை தீர்த்த தாயார்

கூனன், குருடன், முடவன், ஊமை இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாக இருந்தார்கள். "இந்த சமுதாயம் நம்மை மதிக்கவில்லையே, இனி நாம் உயிருடன் இருப்பதை விட இறப்பதே நல்லது." என்று முடிவெடுத்து, திருமலையின் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணி திருப்பதி மலையின் மேல் ஏற முயற்சித்தனர் நால்வரும். அதற்கு முன்னதாக கீழ் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசித்தனர். பிறகு திருப்பதி மலை ஏற ஏற கூனன் தன் கையில் இருந்த கோலை வீசி நிமிர்ந்து நடந்தான், குருடன் கண் பார்வை பெற்று, ஒரு மரத்தை சுட்டிக்காட்டி, "அதோ பார்… அந்த மரத்தில் கொம்பு தேன்." என்று கத்தினான். நொண்டி நொண்டி நடந்து வந்த முடவன், "எங்கே அந்த மரத்திலா?" என்று கூறி கொண்டே அந்த மரத்தின் மேல் ஏறினான். வாய் பேச முடியாதவனோ, "அந்த தேனில் எனக்கும் பங்கு தர வேண்டும்." என்று கத்தினான். இப்படி நால்வருக்கும் உடல்குறை நிவர்த்தியாகி ஏற்பட்ட நல்ல மாற்றத்தை கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

திருப்பதியில் கூட்டம் கூடக் காரணம்

திருப்பதி பெருமாளையும், பத்மாவதி தாயாரையும் வணங்கினால் ஏற்றம் ஏற்படும். இராஜேந்திர சோழர் அரச பதவி ஏற்றால் திருப்பதி ஸ்தலத்தில் 24 நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டினார். அவர் வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. பதவி ஏற்ற பிறகு தினமும் 24 நெய்விளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றி வந்தார். இப்படி பக்தர்கள் வேண்டியதை மட்டுமின்றி, அவர்கள் வேண்டாமல் விட்ட, அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் அனைத்து நன்மைகளையும் பெருமாளும் தாயாரும் அருள்கிறார்கள் என்பதால் தான் வேறு எந்த கோவிலும் இல்லாமல் திருப்பதியில் மட்டும் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் குவிகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள் (Key Highlights)

  • பெருமாள் - தாயார் அருள்: வேங்கடேச பெருமாளும், பத்மாவதி தாயாரும் இணைந்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
  • கீழ் திருப்பதி முக்கியத்துவம்: பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியிலேயே அருள்பாலிப்பதால், பக்தர்கள் முதலில் தாயாரை தரிசித்துவிட்டு பெருமாளை வணங்குவது சிறந்தது.
  • உடல் குறை நீக்கும் சக்தி: தாயாரின் கருணையால் உடல் குறைபாடுகள் நீங்கி, வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பதற்கு கூனன், குருடன் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
  • வரலாற்றுப் பின்னணி: ராஜேந்திர சோழர் போன்ற மன்னர்கள் திருப்பதியை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.
  • ஜோதிட ரீதியான பார்வை: ஜோதிடம் கூறும் கிரக அமைப்புகள் ஒருவரின் புண்ணிய ஸ்தல யாத்திரையை தூண்டலாம். திருப்பதி யாத்திரை ஒருவருக்கு அபரிமிதமான புண்ணியத்தை சேர்க்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

வேங்கடேச பெருமாளும் பத்மாவதி தாயாரும் இணைந்து, பக்தர்கள் வேண்டாத நன்மைகளையும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் அற்புத லீலைகளும், வரலாறும் பக்தர்களை ஈர்க்கிறது.

ஒருமுறை பெருமாலுடன் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டின் காரணமாக, பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியிலேயே தங்கிவிட்டார். பக்தர்களுக்கு பெருமாளுக்கு முன்னதாகவே அருள் வழங்கும் நோக்கத்துடன் அவர் அங்கேயே நிலைபெற்றார்.

ஆம், சில ஜோதிட அமைப்புகள் ஒருவரை புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல தூண்டும். திருப்பதி யாத்திரை, பாவங்களை போக்கி, சுப பலன்களை அளிக்கும் என நம்பப்படுகிறது.

Our Other Services