Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பணியிடத்தில் பதவி உயர்வு பெற முதலாளியின் எதிர்பார்ப்புகளை அறிய வேண்டிய ராசிகள்

ஜோதிடத்தின்படி, உங்கள் ராசி மற்றும் லக்கினத்தைப் பொறுத்து உங்கள் ஆளுமை அமையும். பணியிடத்தில் உங்கள் முதலாளி அல்லது மேலாளரின் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பதவி உயர்வு பெறுவது எப்படி என்பதை 12 ராசிகளுக்கும் இக்கட்டுரையில் காண்போம். முருகப்பெருமானின் அருளால், உங்கள் பணியிடத்தில் சிறந்து விளங்கி, பதவி உயர்வுகளைப் பெறுங்கள்.

12 ராசிகளும் பணியிடத்தில் செயல்படும் விதம் மற்றும் முதலாளியின் எதிர்பார்ப்புகள்

மேஷம் (Aries)

செவ்வாய் ஆளக்கூடிய மேஷ ராசியினர் எப்போதும் தங்கள் வேலையில் மூழ்கி இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இதையே தனக்கு கீழ் பணியாற்றுபவர்கள் அல்லது சக ஊழியர்களிடம் எதிர்பார்க்கின்றனர். தன் முதலாளி அல்லது மேலதிகாரி கோபமாக இருக்கும் போது, அந்த நேரத்தில் எதிர்வினை ஆற்றமாட்டார். அவர் இயல்பான நிலையில் இருக்கும் போது, அவர் மனம் அறிந்து பேசுவார். மேஷ ராசியினர் தன் திறமையை வெளிப்படுத்தி முதலாளியை கவரலாம்.

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசி அதிபதி சுக்கிரன். இவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகள் செயல்களை செய்வார்கள். விரைவாக முடிவெடுக்கும் திறன் கொண்ட இவர்கள், மற்றவர்களை நம்ப அவகாசம் எடுத்துக் கொள்வார்கள். இதையே தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் எதிர்பார்ப்பார்கள். ரிஷப ராசியினர் அவர்களின் நேர்த்தியான ஆடை, செயல்பாடுகளால் மேலதிகாரிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

மிதுனம் (Gemini)

இரட்டையர்களை அடையாளமாக கொண்ட மிதுன ராசியினர், எந்த விஷயத்திற்கும் மிக விரைவாக எதிர்வினை ஆற்றக்கூடியவர்கள். அதே போல மோசமான விஷயங்களை கடுமையான சூழ்நிலைகளிலும் கூட நிறைய யோசனைகள், திட்டங்கள் மூலம், நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளக்கூடியவர்கள். மிதுன ராசியை சேர்ந்த மேலதிகாரியாக இருந்தால், அவருக்கு பரிசு கொடுப்பதும், அவரின் எதிர்பார்ப்பை போல புது யோசனைகளுடன் செயல்படுவது பதவி உயர்வை தரும்.

கடகம் (Cancer)

கடக ராசியினர் அவர்களுடைய முடிவுகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பவர்கள். மேலும் இவர்கள் சக ஊழியர்களிடமும், மேலதிகாரிகளிடம் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவார்கள். இவர்கள் பார்க்க கடுமையான நபராக தோன்றும் ஆனால் மென்மையான மனது படைத்தவர்கள். நீங்கள் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகுவதும், அவர்கள் தரும் முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பதும் நல்லது.

சிம்மம் (Leo)

சிம்ம ராசியை சேர்ந்த நபர்கள் தனித்துவமும், தலைமைத் துவமும் கொண்டவர்கள். இவர்கள் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். தனது வேலையை முழுமனதுடன் செய்யக்கூடியவர்கள். இவர்கள் அதிகம் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள். மற்றவர்கள் முன்னிலையில் எப்போதும் பிரபலம் போல தோன்ற வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். இவர்களை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பதும், மகிழ்ச்சியாக வைத்திருப்பது பதவி உயர்வை பெற்றுத் தரும்.

கன்னி (Virgo)

கன்னி ராசியை சேர்ந்த மேலதிகாரிகள் பார்க்க அன்பாகவும், நட்பாகவும் தோன்றுவார். அவருடைய நட்பான நடத்தையைப் பார்த்து, அனைவரும் தங்கள் நண்பர் என கருதுவார்கள். ஆனால் கன்னியின் இரட்டைத் தன்மை என்ன வென்றால் அவர்கள் வேலையில் யார் பொறுப்புடன் இருக்கிறாரோ அவரையே பிடிக்கும். முதலாளி, சக ஊழியர் என யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். ஆனால் சொந்த விருப்பப்படி முடிவுகளை எடுப்பார்கள். கன்னி ராசியினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், உங்கள் வேலையை பொறுப்புடன் செய்யுங்கள்.

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு பணியிலும் விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கட்சிதமாக செய்து முடிக்க நினைப்பார்கள். வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும் போதும் கூட, இவர்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அதையே தங்கள் ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதனால் துலாம் ராசியை சேர்ந்த முதலாளிகளாக இருப்பின் அவர்களிடம் ஆர்வமாக இருப்பது போல் காட்டினால் மட்டும் போதாது, வேலைகளை அதே போன்று செய்தால் தான் பிடிக்கும். அப்படிப்பட்டவருக்கு முதலாளி நிச்சயமாக உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசியினர் தன் முதலாளி தன் வேலையை பிடிக்கிறதோ இல்லையோ அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் சரியான வேலைகளை, சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் வேலையில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அதனால் எப்போது என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலுடன் இருப்பார்கள். இதையே தன் ஊழியர்களிடமும் எதிர்பார்ப்பார்கள்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசியினர் புதிய வித்தியாசமான சிந்தனை, வேலையில் சிறந்த முறையில் செய்து முடிக்க நினைக்கக்கூடியவர்கள். மேலும் இவர்கள் விதிகள், கட்டுப்பாடுகள், ஆராய்ச்சி, தர்க்கம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுதந்திர மனப்பான்மை கொண்ட இவர்கள், ரிஸ்க் எடுக்கும் பழக்கத்தை கொண்டவர்கள். மேலும் சவாலான வேலைகளை செய்யக்கூடியவர்களையும், வேலையை திட்டமிட்ட முறையில் செய்பவர்களை மிகவும் பிடிக்கும்.

மகரம் (Capricorn)

மகர ராசியை சேர்ந்தவர்கள் முதலாளியாக, மேலதிகாரியாக நிறைய திட்டங்களுடன் இருப்பார்கள். இதன் மூலம் தங்கள் பணிகளை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல முயலுகிறார்கள். இவர்கள் பணியிடத்தில் சாக்கு போக்கு சொல்பவர்கள் மற்றும் சோம்பேறித் தனத்துடன் இருப்பவர்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் எந்த ஒரு வேலையை செய்து முடிக்க நினைப்பார்கள். அலுவலகத்தில் நல்லிணக்கத்துடனும், எந்த ஒரு விஷயத்திற்கும் விரைவாக முடிவுகளை எடுக்க விரும்புவார்கள். கடினமாக உழைப்பவர்களையும், நேர்மையானவர்களை மிகவும் பிடிக்கும்.

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர் மீனைப் போல அமைதியாக இருக்க விரும்புகிறார். மேலும் தேவையற்ற மன அழுத்தத்தை விரும்ப மாட்டார்கள். தங்கள் வேலை என்ன என்பதை அறிந்து அதை முடிப்பதில் குறியாக இருப்பார்கள். சக ஊழியர்களிடமிருந்து நேர்மறையான எண்ணங்கள், திட்டங்களை எதிர்பார்ப்பார்கள். பணியில் அர்ப்பணிப்புடனும் இருக்கக்கூடியவர்களை மிகவும் பிடிக்கும்.

முக்கிய குறிப்புகள்

  • ஒவ்வொரு ராசியினரும் பணியிடத்தில் செயல்படும் முறை.
  • முதலாளிகள் மற்றும் மேலாளர்களின் எதிர்பார்ப்புகள்.
  • பதவி உயர்வு பெற உதவும் ஜோதிட ரீதியான தந்திரங்கள்.
  • ஜோதிடத்தின் மூலம் பணியிட உறவுகளை மேம்படுத்துதல்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு. உங்கள் ராசி மற்றும் முதலாளியின் ராசிக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது முக்கியம். இக்கட்டுரையில் ராசிகளுக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆம், முதலாளியின் ராசி குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது உங்கள் வேலை திருப்தியையும் பதவி உயர்வையும் மேம்படுத்த உதவும். ஜோதிடம் பணியிடத்தில் சிறந்த புரிதலை வழங்கும்.

ஜோதிடம் உங்கள் ஆளுமை, மேலாளர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவுகள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்ள உதவும். இதன் மூலம் நீங்கள் சிறந்த முடிவுகளை எடுத்து, பணியில் முன்னேறலாம்.

Our Other Services