திருமணம், தேர்வு நாட்கள், அல்லது புனிதமான முருகன் ஆலயங்களுக்கு யாத்திரை செல்லும் முக்கிய தருணங்களில், மாதவிடாய் வந்துவிட்டால் ஏற்படும் சிரமங்களை அனைவரும் அறிவோம். இத்தகைய சூழலில், உங்கள் நலன் கருதி, ஜோதிடம்360 தளம், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி மாதவிடாயை பாதுகாப்பான முறையில் ஒத்திவைக்க உதவும் 6 பாரம்பரிய தமிழ் இயற்கை வீட்டு வைத்தியங்களை இங்கே வழங்குகிறது. இந்த எளிய குறிப்புகள் உங்கள் முக்கிய நிகழ்வுகளை மன அமைதியுடன், முருகனின் அருளுடன் கொண்டாட உதவும்.
இயற்கையாக மாதவிடாயை ஒத்திவைக்க வழிகள்
1. இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டை டீ உங்கள் மாதவிடாயைத் தள்ளிப் போட உதவும் அற்புதமான வீட்டு வைத்தியமாகும். கருஞ்சீரகம் எப்படி மாதவிடாயைத் தூண்டுமோ அதுபோல, இலவங்கப்பட்டைக்கு மாதவிடாயைத் தூண்டும் ஹார்மோன்களின் செயலை மெதுவாக்கும் தன்மை உண்டு. அதேபோல மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகளையும் இது குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதிக ரத்தப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். மற்ற கஷாயங்கள் போல கசப்பாகவும் இருக்காது; குடிப்பதற்கு நன்கு சுவையாகவே இருக்கும்.
2. ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகர் உங்கள் மாதவிடாய் தள்ளிப் போவதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு சூப்பர் ஹோம் ரெமிடி என்று சொல்லலாம். இது மாதவிடாய்க்கு முன் தோன்றும் அறிகுறிகள் மற்றும் வலிகளையும் கூட கட்டுப்படுத்தும். உங்களுடைய மாதவிடாயை தள்ளிப் போட வேண்டும் என்று நினைத்தால், ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து காலை, இரவு என இரண்டு வேளையும் குடித்து வர வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இதை குடிக்க ஆரம்பித்து விடுங்கள். பிசிஓடி (PCOD) பிரச்சினை உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும்போது இன்சுலின் அளவு குறைந்து ரத்தம் உறைதலை ஏற்படுத்தும், அதனால் மாதவிடாய் உதிரப் போக்கு குறையும் என்று சொல்லப்படுகிறது. அது ரத்தப்போக்கை குறைக்குமே தவிர முழுவதும் நிறுத்தாது. அதனால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்து குடிக்க ஆரம்பித்தால் போதும்.
3. வாட்டர்மெலன்
இது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆம், வாட்டர்மெலன் உங்கள் அடிவயிற்றுப் பகுதியை இதமாக வைத்திருக்க உதவி செய்யும். அதோடு அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இந்த ஜூஸியான, சுவையான பழம் உங்கள் மாதவிடாயை தள்ளிப்போட உதவி செய்யும். உங்கள் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு 7-8 நாட்கள் முன்பிருந்தே தினமும் ஒரு கப் அளவுக்கு ஃபிரஷ்ஷான வாட்டர்மெலன் சாப்பிடுங்கள். அதேசமயம் இந்த காலகட்டத்தில் காரமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். அது உங்கள் மாதவிடாயைத் தூண்டுவதோடு உதிரப்போக்கையும் அதிகரிக்கும்.
4. ஜெலட்டின் வாட்டர்
ஜெலட்டின் பவுடர் கடைகளில் அல்லது மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும். அதை வாங்கி நீரில் கலந்து குடிக்கலாம். இது உங்கள் மாதவிடாயைத் தள்ளிப் போட மிக அற்புதமான வேலை செய்யும். மாதவிடாய் சுழற்சி நாளுக்கு 4-5 நாளுக்கு முன்பிருந்து தினமும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் ஒரு கிளாஸ் அளவு இந்த ஜெலட்டின் வாட்டரை குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடிக்காதீர்கள். அது அஜீரணம் மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தும்.
5. லெமன் ஜூஸ்
மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு காலங்காலமாக பின்பற்றப்படும் ஒரு வீட்டு வைத்தியம் தான் இந்த லெமன் ஜூஸ். மிதமான அளவில் எலுமிச்சை சாறை எடுத்துக் கொண்டு வரும்போது மாதவிடாய் தள்ளிப் போகும் என்று சில ஆய்வுகளில் கூட கூறப்பட்டு இருக்கிறது. இரண்டு ஸ்பூன் லெமன் ஜூஸை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிச்சிட்டு வாங்க. சர்க்கரை சேர்க்கக் கூடாது. இதை ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.
6. கடலைப்பருப்பு சூப்
சூப் குடிச்சா மாதவிடாய் தள்ளிப் போகும்னு புதுசா கேள்விப்படறீங்களா? இது நம்ம பாட்டி காலத்து வைத்தியம். கடலைப்பருப்பை வேகவைத்தோ அல்லது பொடி செய்தோ 2 ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு வழக்கமாக பருப்பு சூப் செய்வது போல செய்து சாப்பிட வேண்டும். மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே இதை குடிச்சிட்டு வாங்க. அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அது வயிற்று வலி மற்றும் வயிறு உப்பசத்தை உண்டாக்கலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை 2 ஸ்பூன் பருப்புக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
இறுதியாக, மேற்கண்ட இந்த 6 வீட்டு வைத்தியங்களுமே மிக மிக எளிமையானவை தான். சுவையான உணவுகளும் கூட. இவற்றில் உங்களுக்கு சௌகரியமானவற்றை முயற்சி செய்து பாருங்கள். எதையும் அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு ஜோதிடம்360 பொறுப்பாகாது. எந்தவொரு மருத்துவ ஆலோசனையும் பெறுவதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஆம், இங்கு பரிந்துரைக்கப்படும் இயற்கை வழிகள் மிதமான அளவில் எடுத்துக்கொள்ளப்படும்போது பொதுவாக பாதுகாப்பானவை. எனினும், ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த வைத்தியங்கள் பொதுவாக பக்கவிளைவுகள் அற்றவை என்று கூறப்பட்டாலும், அதிக அளவில் எடுத்துக்கொள்வது அஜீரணம், வயிறு உப்பசம் போன்ற சிறிய உபாதைகளை ஏற்படுத்தலாம். மிதமான அளவில் பயன்படுத்துவதே நல்லது.
பெரும்பாலான வைத்தியங்களுக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு 7-10 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்க வேண்டும். ஒவ்வொரு வைத்தியத்திற்கும் உள்ள குறிப்பிட்ட காலஅளவை கவனமாகப் பார்க்கவும்.