பெயர், புகழ், செல்வம், அந்தஸ்து, சமூகத்தில் உயர்ந்த நிலை ஆகியவற்றை பெற வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது? இந்த உலகில் அனைவரும் நினைக்கும் அனைத்தையும் பெறுவது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நமது முன்னோர்கள் மற்றும் ஜோதிட வல்லுநர்கள் வழிகாட்டிய சில தெய்வீகமான பழக்கவழக்கங்கள் (தினசரி வாழ்க்கையில் கடைபிடித்து வந்தால்), வெற்றிகளையும், அதிர்ஷ்டத்தையும் உங்களுக்கு எளிதில் ஈட்டித் தர முடியும். இவை பெயர், புகழ், செல்வ வளம், மற்றும் சிறந்த சமூக அந்தஸ்து என நீங்கள் நினைக்கும் அனைத்தையும் பெற்றுத் தரும் என சொல்லப்படுகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு சிறப்பு இருப்பது போல், அந்தந்த நாளுக்கு என்று ஒரு தனித்துவமான தெய்வீக ஆற்றலும், வசிய சக்தியும் உண்டு. தமிழ் மரபில் குறிப்பிடப்படும் இந்த எளிய விஷயங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலம், உங்களுக்கு சாதகமான பலன்களைப் பெற்று, வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை நீங்கள் காண முடியும். எந்த கிழமையில் என்ன செய்தால் வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவை உங்கள் வசமாகி, நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பதை விரிவாக இங்கே காணலாம்.
எந்த கிழமையில் என்ன செய்தால் பெயர், புகழ், செல்வம் சேரும்?
வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவை உங்கள் வசமாகி, நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்க, ஒவ்வொரு கிழமைக்கும் உரிய சிறப்பு வாய்ந்த இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள்:
- ஞாயிறு வெளியே செல்லும் முன் ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியாகும்.
- திங்கள் வீட்டின் நுழைவு வாயில் முன் நீள்வட்ட கண்ணாடி வைத்து, வெளியே செல்லும் முன் முகத்தை பார்த்து விட்டு செல்லுங்கள். அந்த நாள் சிறப்பானதாக மாறும்.
- செவ்வாய் அனுமனுக்கு உரிய நாள் என்பதால் காலையில் அனுமன் மந்திரம் சொல்லி சர்க்கரை அல்லது வெல்லம் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள். சக்தி, அதிர்ஷ்டம் கூடும்.
- புதன் முக்கிய வேலையை செய்வதற்கு முன் புதினா அல்லது கொத்தமல்லி சாப்பிடுங்கள். புதன் கிழமை உங்களுக்கு மாற்றம் தரும் நாளாக அமையும்.
- வியாழன் வெளியே செல்லும் முன் சீரகம் அல்லது கடுகு வாயில் போடுங்கள் அன்றைய நாள் நல்லதே நடக்கும்.
- வெள்ளி முக்கிய வேலையை செய்வதற்கு முன் அல்லது முக்கிய வேலையாக வெளியில் செல்வதற்கு முன் தயிர் சாப்பிடுங்கள். மன அமைதி, வெற்றி நிச்சயம் ஏற்படும்.
- சனி இஞ்சியுடன் நெய் சேர்த்து சாப்பிடுங்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும்.
இவற்றை தினமும் நம்பிக்கையுடன் செய்தால், பெயர், செல்வம், புகழ் அனைத்தும் உங்களைத் தேடி வரும். வெற்றிலை, கண்ணாடி, தயிர், நெய் இவை அனைத்துமே மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாகும். இவற்றை முறையாக தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தினால் மகாலட்சுமியின் அருளும், செல்வ வசியமும் ஏற்படும். ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இந்த பழக்கவழக்கங்கள் தமிழ் கலாச்சாரத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.