உலகம் முழுவதும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர ஆய்வுகள் நடந்து வரும் வேளையில், நம்முடைய உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை சரிசெய்வதன் மூலம் அதை வராமல் தடுக்க முடியும். ஜோதிடம் கூறும் நல்வாழ்வு, ஆயுர்வேதம் காட்டும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில், ஆயுர்வேதத்தில் பல தீர்வுகளும் உணவுமுறைகளும் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு அற்புதமான உணவு தான் ராகி நெல்லிக்காய் கஞ்சி. இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடலைத் தூய்மையாக்கி, வாத, பித்த, கப தோஷங்களை சமநிலைப்படுத்த உதவும். தமிழ் மண்ணின் பாரம்பரிய அறிவுடன், முருகன் அருளால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கஞ்சியின் செய்முறை மற்றும் பயன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ராகி நெல்லிக்காய் கஞ்சி: தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி - 1 ஸ்பூன்
- பசும்பால் - 1 கப்
- மாதுளை முத்துக்கள் - 2 டேபிள் ஸ்பூன்
- பேரிச்சை பழம் - நறுக்கியது
- ஊறவைத்த சியா விதை - 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
- லவங்கப்பட்டை பொடி - கால் ஸ்பூன்
- மிளகுப் பொடி - கால் ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை - 1 ஸ்பூன்
- பாதாம் (அ) வால்நட் - நறுக்கியது
செய்முறை
- முதலில் ராகி மாவை ஒரு கடாயில் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பசும்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
- ராகி வறுத்து வைத்திருக்கும் கடாயில் கொஞ்சம் கொஞ்சமாக பசும்பாலை சேர்த்துக் கிளறி விடுங்கள். அது கட்டிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கலாம். ஆனால் குறைந்த தீயில் வைத்து செய்ய வேண்டும்.
- கெட்டியாகி வரும்போது நெல்லிக்காய் தூள், மஞ்சள் தூள், லவங்கப்பட்டை பொடி, மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். 2-3 நிமிடங்கள் வேகவிடுங்கள். தேவைப்பட்டால் இன்னும் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- அடுத்ததாக அதில் நறுக்கிய பேரிச்சம் பழம் மற்றும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொண்டு நன்கு கிளறிவிடுங்கள். அது கரைந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.
- இறுதியாக, ராகி நெல்லி கஞ்சி ஒரு பௌலில் ஊற்றி மேலே மாதுளை முத்துக்கள், ஊறவைத்த சியா விதை, நறுக்கிய பாதாம், வால்நட் சேர்த்து பருக வேண்டியது தான்.
முக்கிய உட்பொருட்களின் ஆரோக்கிய நன்மைகள்
ராகி (கேழ்வரகு) மாவு
ராகி மாவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இரத்த சோகையைத் தடுத்து ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கும். ராகியில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்தி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பாலிபினால்கள் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை.
நெல்லிக்காய் பொடி
நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளின் பவர்ஹவுஸ் ஆகும். இது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களைச் சமன் செய்து, குறிப்பாக அதிக பித்தத்தைக் கட்டுப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதில் உள்ள பினாலிக் மூலக்கூறு புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்டது, கல்லீரலைத் தூய்மைப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
பசும்பால்
ஆயுர்வேதத்தின்படி, பசும்பால் உடலின் உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது. எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைந்தது. சுத்தமான நாட்டுப் பசும்பாலில் உள்ள லினோலிக் அமிலத்தில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மற்ற உட்பொருள்களின் பயன்கள்
- மாதுளை விதை: இதய ஆரோக்கியத்துக்கும் இரத்தத்தில் திசுக்கள் மற்றும் பிளாஸ்மா உற்பத்தியை அதிகரிக்க உதவக்கூடியது.
- சியா விதை: நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. உடலை ஹைட்ரேட்டிங்காக வைத்து செரிமான ஆற்றலை அதிகரிக்கும். மூளையின் செயல்பாட்டிற்கும் நல்லது.
- மஞ்சள்: கிருமி நாசினி, அழற்சி எதிர்ப்பு, ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்டது. இதிலுள்ள குர்குமின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும்.
- லவங்கப்பட்டை பொடி: செரிமானத்தை மேம்படுத்தி, கபம் சேராமல் தடுக்கும். மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. சினமால்டிஹைடு புற்றுநோய் செல் வளர்ச்சியை மெதுவாக்கும்.
- மிளகுப் பொடி: வாதத்தையும் கபத்தையும் சீர் செய்யும். மஞ்சளோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது பைப்பரின் குர்குமினை வேகமாக உறிஞ்சி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும்.
- வெல்லம்: இரத்த சோகையைத் தீர்த்து, வாதத்தைக் குறைக்கும்.
- பாதாம் (ம) வால்நட்ஸ்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ் வகைகள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்தன்மை ஆகியவற்றுக்கு சமயம் தமிழ் பொறுப்பாகாது.