Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சாணக்கிய நீதி: இந்த 5 பேரிடம் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் பகிராதீர்கள்

கிமு 300 காலகட்டத்தில் வாழ்ந்த மாபெரும் ஞானி சாணக்கியர், ஆசிரியர், எழுத்தாளர், தத்துவவாதி என பல பரிணாமங்களைக் கொண்டவர். குடும்பம், வேலை, தொழில், தனிப்பட்ட உறவுகள் என பலவற்றிலும் அவர் வழங்கிய நீதி மொழிகள் இன்றும் நமக்குப் பயனுள்ளவை. ஜோதிட சாஸ்திரத்தைப் போலவே, சாணக்கியரின் இந்த நீதி நெறிகளும் உங்கள் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும். இந்த சிறப்புப் பதிவில், உங்கள் வாழ்க்கையில் உள்ள சோகங்களையும், ரகசியங்களையும் ஒருபோதும் யாரிடம் பகிரக்கூடாது என சாணக்கியர் அறிவுறுத்துவதைப் பார்ப்போம்.

பிரச்சனைகளைப் பகிர்வதால் கூடுதல் பிரச்னைதான் ஏற்படும்!

சிலர் நம்முடைய மனக்குறையைச் சிலரிடம் பகிர்ந்து கொண்டால், மனதிற்கு ஆறுதலும், கவலை குறைந்து மகிழ்ச்சியும் ஏற்படும் என நம்புகின்றனர். இது உண்மைதான். இருப்பினும், உங்களின் பிரச்னைகள், மன வருத்தங்களை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 5 வகையான நபர்களிடம் பகிர்வதால் உங்களின் பிரச்னை மேலும் வளரத்தான் செய்யும். பிரச்சனைகள் அதிகரித்து உங்கள் தூக்கம் தொலைய வாய்ப்புள்ளது. சரி, யாரிடம் எல்லாம் மனக்குறையைப் பகிரக்கூடாது என பார்ப்போம்:

1. அனைவரிடமும் நண்பராக இருப்பவர்கள்

ஒரு இடத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், நம்மிடம் மட்டுமில்லாமல், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நண்பராக இருக்கக்கூடிய நபர்களிடம் உங்களின் மன வருத்தங்கள், கவலைகள், ரகசியங்களை பகிரவே கூடாது. ஏனெனில், அனைவரிடமும் நட்புடன் இருக்க வேண்டும், நட்பை வளர்க்க வேண்டும் என நினைத்து, எது சரி, எது தவறு என யோசிக்காமல், சில சமயங்களில் உங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

2. எல்லாவற்றையும் கேலி செய்பவர்கள்

வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழ்வது உங்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காகப் பிறரை கேலி செய்துதான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தவறு. மற்றவர்களை நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்பவர்களுடனான நட்பை நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையேல், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். ஏனெனில், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு உங்களின் மன வருத்தம், ரகசியங்களை இந்த நபர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவர்கள் உங்களின் வருத்தத்தைப் பற்றி மற்றவர்களிடம் கூறி கேலி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும் பதற்றமும் மற்றும் வேதனைதான் அதிகரிக்கும்.

3. சுயநலவாதிகள் (தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டவர்கள்)

சுயநலமாக யோசிப்பவர்கள், கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள், தங்களின் பிரச்னை, துன்பம் என தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இதன் காரணமாக, உங்களின் ரகசியத்தை இவர்களிடம் பகிரும் போது, உங்களின் துன்பங்களைக் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல், பிறரிடம் பகிரவோ, உங்களின் ரகசியங்களை வைத்து மிரட்டி, பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள்.

4. சிந்திக்காமல் அதிகம் பேசுபவர்கள்

ஒரு சிலர் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் அதிகமாக பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு எதையாவது பற்றி பேச விஷயம் கிடைக்காத போது, நீங்கள் கூறிய ரகசியங்கள், மன கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பிரச்னையான என்ன, பிறரின் மனவருத்தம் என்ன என்ற எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காமல், நீங்கள் கூறியதை பிறரிடம் வெளிப்படுத்துவதோடு, கூடுதலாக எதையாவது சேர்த்தும் சொல்ல தயங்க மாட்டார்கள். அத்தகையவர்கள் பொய்யானவர்கள். நம்பகமானவர்களாகக் கருத முடியாது என்பதால் உங்களின் பிரச்சனைகளை அவர்களிடம் சொல்லக்கூடாது.

5. பொறாமை மற்றும் எரிச்சல் கொண்டவர்கள்

ஒரு சிலர் எப்போதும் உங்கள் மீது அல்லது பிறர் மீது பொறாமை அல்லது வயிற்றெரிச்சல் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாத மன உணர்வால் சூழப்பட்டிருப்பார்கள். அதனால் பிறர் நல்ல சூழலில் இருப்பின் அவர்கள் மீது பொறாமை, எரிச்சல் மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உங்களின் மன வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது, உங்களைப் பற்றி கவலைப்படாவிட்டாலும், உங்களின் நிலை குறித்து மகிழ்ச்சி அடைபவர்களாக இருப்பார்கள். உங்களின் நிலையை மேலும் இறக்க சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

சாணக்கியரின் இந்த வாழ்க்கை பாடங்கள், உங்கள் தனிப்பட்ட உறவுகளையும், மன அமைதியையும் பாதுகாக்க மிகவும் அவசியமானவை. சரியானவர்களிடம் மட்டுமே உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து, தேவையற்ற சிக்கல்களையும், மன உளைச்சலையும் தவிருங்கள். இது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்க உதவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கிமு 300 காலகட்டத்தில் வாழ்ந்த சாணக்கியர் எழுதிய அரசியல், பொருளாதாரம், தனிமனித ஒழுக்கம் குறித்த பொன்மொழிகளின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும். இது தனிமனித வளர்ச்சிக்கும், சமூக வாழ்விற்கும் வழிகாட்டும் பொன்னான கருத்துக்களைக் கொண்டுள்ளது.

Our Other Services