ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியினரும் தனித்துவமான குணநலன்களைக் கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் அன்பானவர்களாகவும், ஒத்துழைப்புடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், சிலரோ தங்கள் செயல்கள் மற்றும் பேச்சால் மிகவும் கொடியவர்களாகவும், தீய எண்ணம் கொண்டவர்களாகவும், பிறரை ஏமாற்றக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய மோசமான மனம் கொண்ட ராசிகளைப் பற்றி இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
மோசமான மனம் கொண்ட ராசிகள்: ஒரு கண்ணோட்டம்
மனித வாழ்க்கையில் நன்மை, தீமை, நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உண்டு. சிலர் தனக்கு மட்டுமில்லாமல், பிறருக்கும் நன்மை நினைக்கக்கூடியவர்கள் அல்லது தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும், பிறருக்கு தீமை நடந்து விடக்கூடாது என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆனால், சில ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களின் வார்த்தைகள் மற்றும் புத்திசாலித்தனமான திட்டங்களால் பிறரை ஏமாற்ற அல்லது பிறரின் லாபத்தை எடுத்துக் கொள்ள நினைப்பார்கள். பிறரின் லாபத்தைக் கண்டு பொறாமைப்படக்கூடிய, ஏமாற்றும் மனநிலை கொண்ட நபர்களாகவும், பிறரின் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய தீய ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
1. மிதுனம் (Gemini)
மிதுன ராசியினர் தங்களின் ராசி அடையாளத்தைப் போலவே, இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனித்துவமான பேச்சும், தங்கள் பேச்சில் இனிமையாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதனால், தங்களின் எதிரில் உள்ள நபர்களை எளிதில் ஈர்த்து, அதன் மூலம் தங்களுக்குத் தேவையான காரியங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரையும் எப்படி ஏமாற்றலாம் என்பதை அறிந்து செயல்படுவார்கள். ஜோதிடத்தின்படி, இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
2. விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசியினர் சற்று மர்மமானவர்கள். இவர்கள் பேசுவதில் வல்லவர்களாகவும், இவர்களின் செயல்பாடுகள் பிறரால் எளிதில் அறிந்து கொள்ள இயலாதவையாகவும் இருக்கும். இவர்கள் தங்களின் வார்த்தை வலையில் பிறரைப் பிடித்து விடுவார்கள். தங்களின் புத்திசாலித்தனத்தால் பிறரின் செயல்களை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். பிறர் தங்களுக்குச் சாதகமான செயலை செய்யாவிட்டால், அவர்களைப் பயமுறுத்தும் வகையில் பேசுதல், செயல்படுதல் என இவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இது மோசமான ராசிகளில் ஒன்றாக இவர்களைக் காட்டுகிறது.
3. மீனம் (Pisces)
ஜோதிடத்தின்படி கடைசியாக வரக்கூடிய ராசி மீனம். இவர்களிடம் தனித்துவமான குணங்கள் இருக்கும். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், பிறர் மீது அன்பும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம், இவர்கள் தங்களின் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பார்கள். தன் செல்வாக்கைப் பிறர் மீது பிரயோகிப்பார்கள். இதன் மூலம் தங்களின் பக்கம் பிறரை இழுத்துக் கொள்வர் மற்றும் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். இவர்களிடம் பண மோகம் அதிகமாக இருக்கும். இந்த மீன ராசியின் இந்த குணங்கள் சில சமயங்களில் எதிர்மறையாக மாறலாம்.