Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சித்ரா பவுர்ணமி: சித்ரகுப்தர் வழிபாடு மற்றும் தானங்களின் முக்கியத்துவம்

நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை குறித்து வைக்கும் சித்ரகுப்தனுடைய பிறந்த நாள் தான் சித்ரா பவுர்ணமி தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் செய்யப்படும் எளிய வழிபாடுகளும், தானங்களும் வாழ்வில் மகிழ்ச்சியையும், நன்மைகளையும் அள்ளித் தரும். ஜோதிடம் ரீதியாகவும், இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்தது.

சித்ரா பவுர்ணமியின் முக்கிய அம்சங்கள்

  • வீட்டிலேயே எளிய சித்ரகுப்த வழிபாடுகள் மூலம் அருள் பெறலாம்.
  • நிலா வெளிச்சத்தில் குடும்பத்தோடு பிரசாதம் உண்பது மகிழ்ச்சி தரும்.
  • சூரிய மற்றும் சந்திர பகவானின் சக்திகள் பூமிக்கு அதிகமாகக் கிடைக்கும் புனித நாள்.
  • தாகம் தணிக்கும் தானங்கள், அன்னதானம், கல்வி தானம் செய்வது சிறப்பு.
  • சித்ரகுப்தரை வேண்டி நோட்டு, பென்சில் தானம் செய்வது பரம்பரைக்கே புண்ணியம் சேர்க்கும்.

இந்த சித்ரா பவுர்ணமி தின வழிபாட்டை சுலபமாக அவரவர் வீட்டிலேயே செய்யதாலும் சித்ரகுப்தரின் அருள் கிடைக்கும். உங்களால் முடிந்த பிரசாதத்தை சித்ரகுப்தனுக்கு படைத்து, உங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து அந்த பிரசாதத்தை நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்ணுவது குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், நன்மையும் கொடுக்கும்.

சித்திரை மாதம் என்றாலே சூரிய பகவான் உக்கிரமாகத் தான் இருப்பார். அதே போல இந்த சித்திரை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் சந்திரபகவானும் பிரகாசத்தோடு தான் காட்சி தருவார். இந்த உலகம் இயங்குவதற்கு முழு முதல் காரணமாக இருக்கும் சூரிய பகவான் சந்திர பகவான் இவர்கள் இருவரின் சக்தியும் இந்த பூமிக்கு அதிகமாக கிடைக்கப்படும் சித்திரை மாத பவுர்ணமி வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

சித்ரா பவுர்ணமி தானங்களின் பலன்கள்

சித்திரை மாதம் என்பதால் கட்டாயமாக சூரியனின் தாக்கம் தற்போது அதிகமாக தான் இருந்து வருகின்றது. உங்களால் முடிந்த அளவு தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர், பழ வகைகள், குளிர்பானங்கள், நீர்மோர் போன்ற பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுக்கலாம். முடியாதவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ, உங்கள் வீட்டு வெளிப்பக்கத்திலோ சிறிய பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீரை வையுங்கள். அந்த தண்ணீரை தாகத்திற்காக கஷ்டப்படும் வாயில்லா ஜீவன்கள் குடித்தாலே உங்களுக்கு புண்ணியம் சேரும். அடுத்ததாக சித்ரா பவுர்ணமி அன்று பசியோடு இருக்கும் யாருக்காவது ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது நன்மையை சேர்க்கும்.

சித்திரகுப்தனுடைய வழிபாட்டில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று நோட்டுப் புத்தகமும், ஒரு பேனா அல்லது பென்சில் தான். இதுநாள் வரை நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் செய்த புண்ணிய கணக்குகளை மட்டும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்த பாவ கணக்குகளுக்கான தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் என்று சித்திரகுப்தனை வேண்டிக் கொண்டு படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நோட்டு, ஒரு பென்சிலை தானமாகக் கொடுப்பது நம்முடைய பரம்பரைக்கே புண்ணியத்தை சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வசதிக்கு ஏற்ப எத்தனை குழந்தைகளுக்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம். சித்ரா பெளர்ணமி அன்று அன்னதானம், தண்ணீர் தானம் போன்ற தானங்கள் செய்ய முடியாவிட்டாலும், இந்த ஒரு தானத்தை செய்வது சிறப்பு. சித்ரா பவுர்ணமி நாளில் நீங்கள் செய்யக்கூடிய இந்த ஒரு தானம், உங்களது ஏழு ஏழு தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்க்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சித்ரா பவுர்ணமி என்பது நம் பாவ புண்ணிய கணக்குகளை குறித்து வைக்கும் சித்ரகுப்த பகவானின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத பவுர்ணமி திதியில் இந்த விழா வருகிறது.

உங்களால் முடிந்த பிரசாதத்தை வீட்டில் படைத்து, குடும்பத்துடன் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்ணலாம். படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் தானம் செய்வது மிக முக்கியமானது.

தாகம் தணிக்க தண்ணீர், பழ வகைகள், குளிர்பானங்கள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வதும், படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு-பென்சில் தானம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.

சித்ரகுப்தனை வேண்டி தானங்கள் செய்வதன் மூலம் நாம் செய்த பாவ கணக்குகள் குறைந்து, புண்ணிய கணக்குகள் அதிகரிக்கும். குறிப்பாக, கல்வி தானம் செய்வது ஏழு தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.

Our Other Services