ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனிப்பட்ட பலன்களும் பலவீனங்களும் உண்டு. சில ராசியினர் இயற்கையாகவே பொருளாதார ரீதியாக வசதியானவர்களாகவும், சிலர் கடின உழைப்புக்குப் பின்னரும் செல்வம் சேர்க்க இயலாதவர்களாகவும் உள்ளனர். இந்த பதிவில், எந்தெந்த ராசியினருக்கு செல்வம் சேரவும், கோடீஸ்வரனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை ஜோதிட ரீதியாக விரிவாக தெரிந்து கொள்வோம்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் தன்னுடைய ஜாதகத்தின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை அமையும். சிலருக்கு பெரிய அளவில் பொருளாதார வசதி இல்லாவிட்டாலும், மனக்குறையின்றி மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆனால் சிலரிடம் பணம், பொருள் நிறைந்திருந்தாலும் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது. இந்த வகையில், எந்தெந்த ராசியினருக்கு பணம், பொருள், மன அமைதி ஆகியவற்றுடன் கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு காண்போம்.
கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள்:
மேஷ ராசி:
ஜோதிடத்தின்படி, செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியினர் ஒரு செயலையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் நிறைந்தவர்கள். இவர்களிடம் பணம் சம்பாதிக்கும் திறன், செல்வாக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் எடுக்கும் முயற்சி, திட்டமிடலில் 100 சதவீதம் வெற்றியை காண இயலும். கடின உழைப்பு நிறைந்த இவர்களுக்கு, தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். முகேஷ் அம்பானி போன்ற பணக்காரர்கள் இந்த ராசியைச் சேர்ந்தவர்களே. தவிர்க்க வேண்டியவை: கோபம் மற்றும் சோம்பேறித்தனத்தை தவிர்த்தால், இவர்களின் வெற்றி தடைப்படாது.
கடக ராசி:
சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசியினர், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒருபோதும் பணப்பற்றாக்குறையைக் காண மாட்டார்கள். இவர்களிடம் சந்திரன் அருள் நிறைந்திருப்பதால் வாழ்க்கையில் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். இவர்கள் தொடங்கக்கூடிய எந்த ஒரு தொழிலும் விடாமுயற்சிகள் மூலம் சிறப்பான லாபத்தை ஈட்ட முடியும். தங்கள் துறையில் முன்னேற்றம் அடைவார்கள். வேலை, வியாபாரம் என எதிலும் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுமையாக சமாளித்து வெற்றி பெறுவார்கள். இதன் காரணமாக இவர்களிடம் பணம், மரியாதை அதிகரிக்கும். உலகின் மிக பெரிய பணக்காரரான எலான் மாஸ்க் கடக ராசியை சேர்ந்தவர்.
சிம்ம ராசி:
நவகிரக தலைவன் சூரிய பகவான் ஆளக்கூடிய சிம்ம ராசியினர், தங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் சிறப்பான ஆளுமை திறனுடன் செயல்படுவார்கள். வாழ்க்கையிலும், பணியிடத்திலும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் எந்த வேலையிலும் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக தங்கள் வேலைகளை சரியான நேரத்தில், சிறப்பாக செய்து முடிப்பார்கள். வேலையில் எளிதாக உயர் பதவிகளை அடைவார்கள். சம்பாதிப்பதில் மட்டுமின்றி, தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபத்தை பெறுவார்கள். சமூகத்தில் இவர்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதன் மூலம் இவர்கள் பணத்தை ஈட்டவும், தங்கள் துறையில் எளிதாக முன்னேறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு நாள் இவர்கள் கோடீஸ்வரன் ஆவது உறுதி. இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான HCL டெக்னாலஜி நிறுவனத் தலைவர் சிவன் நாடார் சிம்ம ராசியை சேர்ந்தவர்.
விருச்சிக ராசி:
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய விருச்சிக ராசியினர், பணம் சம்பாதிப்பதில் மிகவும் திறமையாக செயல்படுவார்கள். இவர்கள் தொடங்கக்கூடிய தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியை அடைவார்கள். செய்யக்கூடிய வேலையில் விரைவான வளர்ச்சியையும், தனிப்பட்ட திறமையால் முன்னேற்றத்தையும் பெறுவார்கள். ஒரு வேலை குறித்து வீண் விவாதங்களில் ஈடுபடுவதை விட, தங்கள் வேலையில் கவனம் செலுத்துவார்கள். எந்த ஒரு வேலை செய்தாலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, வெற்றி பெறும் வரை ஓய மாட்டார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விருச்சிக ராசியை சேர்ந்தவர்.
கும்ப ராசி:
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசியினர், நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைப் பெறுவது போல, அதிர்ஷ்டம் மற்றும் பண பலனை பெறுவதிலும் பின் தங்குவதில்லை. கும்ப ராசி நேயர்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க கூடிய ஞானம், திறமை நிறைந்தவர்கள். இவர்கள் தங்களின் வாழ்க்கையில் சோதனை ரீதியாக எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்தாலும் அதில் சந்தேகம் இல்லாமல் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். முயற்சி செய்வதை கைவிடாமல் இருக்க வேண்டும். அதானி குடும்பத்தின் உரிமையாளர் கௌதம் அதானி கும்பராசியை சேர்ந்தவர். இவர்களுக்கு கோடீஸ்வர யோகம் நிச்சயம் உண்டு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் வரும் வாய்ப்புள்ளது. இந்த ராசியினர் தங்கள் விடாமுயற்சி மற்றும் திறமையால் நிச்சயம் செல்வ செழிப்பை அடைவார்கள்.
முகேஷ் அம்பானி மேஷ ராசியினர், எலான் மாஸ்க் கடக ராசியினர், சிவன் நாடார் சிம்ம ராசியினர், பில்கேட்ஸ் விருச்சிக ராசியினர், கௌதம் அதானி கும்ப ராசியினர்.
குறிப்பு: இந்த ஜோதிட பலன்கள் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகவும்.