தனத்ரயோதசி என்றும் அழைக்கப்படும் தந்தேராஸ், கார்த்திகை மாதத்தில் தேய்பிறையில் வரும் 13 வது நாளான திரயோதசி அன்று கொண்டாடப்படும் ஒரு புனிதமான இந்து பண்டிகையாகும். 2023 ஆம் ஆண்டில், நவம்பர் 10 ஆம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்பட்டது, இது ஐந்து நாள் தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஜோதிடம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இந்த புனிதமான நாளில் குறிப்பிட்ட பொருட்களை வாங்குவது வீட்டில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. தந்தேராஸ் அன்று உங்கள் வீட்டிற்கு செல்வம் மற்றும் சுபிக்ஷத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து மங்களகரமான பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தந்தேராஸ் அன்று வாங்க வேண்டிய முக்கியப் பொருட்கள்
- தங்கம் மற்றும் நகைகள்: தந்தேராஸ் நாளில் வாங்குவதற்கு மிகவும் பிரபலமான பொருள் தங்கம். இது செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.
- வெள்ளி பொருட்கள்: தூய்மையின் அடையாளமான வெள்ளிப் பொருட்கள், வீட்டுக்கு செல்வத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்.
- சமையலறை பாத்திரங்கள்: புதிய சமையலறை பாத்திரங்கள் வாங்குவது லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுத் தரும்.
- புதிய வீட்டு உபகரணங்கள்: தீபாவளி பண்டிகையை ஒட்டி வீட்டு உபகரணப் பொருட்களை வாங்குவது சுபமானது.
- எண்ணெய், தீப விளக்குகள்: புதிய விளக்குகளின் ஒளி வீட்டிற்குள் இருக்கும் இருள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கும்.
தந்தேராஸ் அன்று வாங்க வேண்டிய பொருட்கள் விரிவாக
தங்கம் மற்றும் நகைகள்
மங்களகரமான தந்தேராஸ் நாளில் வாங்குவதற்கு மிகவும் பிரபலமான பொருள் தங்கம் மற்றும் நகைகள். இந்த நாளில் தங்கம் வாங்குவது செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது. பலர் தங்க நாணயங்கள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது செல்வம் மற்றும் நிதி ஆதாயங்களில் முதலீடு செய்வது வழக்கம். தீபாவளி பண்டிகை சமயத்தில் தமிழ் மக்கள் இடையே இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.
வெள்ளி பொருட்கள்
தந்தேராஸில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் மற்றொரு விலைமதிப்பற்ற உலோகம் வெள்ளி. இந்த அற்புத நாளில் வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் அல்லது அலங்காரப் பொருட்களை வாங்குவதால் உங்கள் வீட்டில் செல்வத்தையும், செழிப்பையும் கொண்டு வரும். வெள்ளி என்பது தூய்மையின் சின்னமாக கருதப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வைத்து வீட்டில் லட்சுமி பூஜை செய்யலாம்.
சமையலறை பாத்திரங்கள்
தந்தேராஸ் தினத்தில் நாம் வீட்டிற்காக புதிய சமையலறை பாத்திரங்களை வாங்குவது நல்லது. இதனால் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியின் நல்லருள் பெற்றிடலாம். இது புதிய தொடக்கங்கள் மற்றும் செழிப்பான குடும்ப வாழ்க்கையின் அடையாளமாக அமைகிறது.
புதிய வீட்டு உபகரணங்கள்
தீபாவளி பண்டிகையானது தற்போது ஒரு வணிகம் செய்வதற்கான முக்கிய காலமாக கருதப்படுகிறது. அனைவரும் தங்களின் வீடுகளுக்கு ஒரு முக்கிய பொருளை வாங்க நினைத்தால் அது தீபாவளி பண்டிகையை ஒட்டி வாங்குவது வழக்கமாக மக்களும் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த தந்தேராஸ் தினத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக் உபகரணப் பொருட்களை வாங்குவது நல்லது.
எண்ணெய், தீப விளக்குகள்
எண்ணெய் விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றுவது தீபாவளியின் முக்கிய நிகழ்வாகும். இந்த தந்தேராஸ் தினத்தில் நீங்கள் வாங்கக்கூடிய புதிய விளக்குகளின் ஒளியானது லட்சுமி தேவியின் அருளை பெற்றுத் தரும். இதன் மூலம் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் இருள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றும் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த தினத்தில் உங்கள் வீட்டை ஒளிரச் செய்வதற்கு அழகாக வடிவமைக்கப்பட்ட எண்ணெய் விளக்குகள் மற்றும் தீபங்களை நீங்கள் வாங்கலாம்.