Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

கல்லீரலை பலப்படுத்தும் திரிபலா பேரிட்சை பழ லட்டு

திரிபலா என்றாலே அதை மருந்தாகப் பார்க்கிறோம். நம்முடைய முன்னோர்கள் உணவையே தான் மருந்தாக சாப்பிட்டார்கள். இந்திய உணவுகள் பெரும்பாலும் மசாலாக்கள் என்கிற பெயரில் மூலிகைகளால் நிறைந்து இருக்கும். அதில் மிக முக்கியமான மூலிகைக் கலவை இந்த திரிபலா. இதை தினசரி எடுத்துக் கொண்டு வரும்போது குடல், கல்லீரல், சருமம் என ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை பயக்கும். கல்லீரலை பலப்படுத்தும் இந்த திரிபலா பேரிட்சை பழ லட்டு செய்யும் முறையை இங்கு காண்போம்.

கல்லீரலை பலப்படுத்தும் திரிபலா பேரிட்சை லட்டு செய்முறை

தேவையான பொருட்கள்

  • விதை நீக்கிய பேரிட்சை பழம் - 1 கப்
  • துருவிய தேங்காய் - அரை கப்
  • பசு நெய் - 3 ஸ்பூன்
  • திரிபலா பவுடர் - 3 ஸ்பூன்
  • ஏலக்காய் பவுடர் - 2 சிட்டிகை
  • சுக்கு பொடி - கால் ஸ்பூன்

செய்முறை

  1. சிறிது வெந்நீரில் பேரிச்சை பழங்களைப் போட்டு 5-10 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். பின்பு அதை எடுத்து கத்தியால் பொடியாக நறுக்கியோ அல்லது நன்கு பிளண்ட் செய்தோ மசித்தோ எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. ஒரு அடிகனமான கடாயில் துருவிய தேங்காயை சேர்த்து அதிலுள்ள ஈரப்பதம் குறைந்து வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அதே கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து மசித்து வைத்திருக்கும் பேரிச்சை பழத்தைச் சேர்த்து நன்கு கிளறி அதன் ஈரப்பதம் குறைந்து சுருண்டு வரும்வரை வதக்குங்கள். அடி பிடிக்காமல் இருக்க அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.
  4. இப்போது எடுத்து வைத்திருக்கும் திரிபலா பொடியை அதில் தூவி விடுங்கள். பொடி முழுவதும் நன்றாக பேரிட்சை பழத்தோடு கலக்கும்படி மிக்ஸ் செய்து கொடுங்கள்.
  5. ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவலில் பாதியையும் அதோடு ஏலக்காய் தூள் மற்றும் சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
  6. இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள். கை பொறுக்கும் சூடு வந்ததும் சிறு சிறு லட்டுகள் போல உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
  7. இந்த உருண்டையை மீதமுள்ள தேங்காய் துருவலில் உருட்டி எடுத்தால் சூப்பர் திரிபலா லட்டு ரெடி.

சாப்பிடும் முறை

இந்த லட்டுவை ஒரு நாளைக்கு ஒரு லட்டு என்கிற வீதத்தில் சாப்பிட்டால் போதும். இதை காலையில் சாப்பிடுவதை விட மதியம் அல்லது இரவு உணவுக்குப் பிறகு இந்த லட்டை எடுத்துக் கொள்வது அதிக பலன்களைக் கொடுக்கும். மாலை நேர ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது மிக நல்லது.

திரிபலா லட்டுவின் ஆரோக்கிய நன்மைகள்

திரிபலா பொடி

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையாகும். இந்த மூன்றிலும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன. இது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும். ஜீரண செயல்பாட்டையும் கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்தி மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை சரிசெய்யும்.

பேரிட்சை பழம்

இயற்கையாகவே அதிக இனிப்பு சுவை கொண்டது. ரீஃபைண்ட் இனிப்புகளுக்கு பதிலாக பேரிட்சை பழத்தை எடுத்துக் கொள்ளலாம். வாதத்தை சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும். பேரிட்சை பழத்தில் இயற்கையான சர்க்கரையும் பொட்டாசியமும் அதிகமாக இருக்கிறது. அதோடு இதிலுள்ள நார்ச்சத்துக்களும் சேர்ந்து நீண்ட நேரம் எனர்ஜியைத் தக்க வைக்கிறது.

உலர் தேங்காய்

இந்த லட்டுவில் இருக்கும் இனிப்பு மற்றும் பிற சுவைகளை சுவை நரம்புகளைத் தூண்டி உமிழ் நீர் சுரக்க உதவி செய்யும். இது வாதத்தை சமநிலைப்படுத்தும். இதில் உள்ள மீடியம் செயின் டிரை கிளிசரைடுகள் ஆரோக்கியமான கொழுப்பை வழங்குவதோடு மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து இன்பிளமேஷன்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

பசு நெய்

அமிலத்தன்மை, காரத்தன்மை இரண்டுமே கொண்டது. இது பித்தத்தை சமநிலைப்படுத்தும். இது நம் உணவில் இருக்கும் பைட்டோகெமிக்கல்ஸ் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும். பசு நெய்யில் இருக்கும் பிட்யூரிக் அமிலம் மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் குடல் ஆரோக்கியத்தையும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

சுக்கு பொடி

சுக்குப் பொடி பித்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும். இது பஞ்ச பூதங்களில் நெருப்பை குறிக்கக் கூடியது. அதனால் ஜீரணத்தை தூண்டும். மூலிகை மருந்துகளில் சுக்கு ஏன் சேர்க்கிறோம் என்றால் இது மூலிகைகளில் இருக்கும் மருத்துவ குணங்களை சரியாக உறிஞ்சி உடலுக்கு கொடுக்கும். இதிலுள்ள ஜிஞ்சரால் எனும் மூலக்கூறு ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்டது.

ஏலக்காய் பொடி

இந்த லட்டுவில் ஏலக்காய் பொடி சேர்ப்பதன் மூலம் வாதம் அதிகரிக்காமல் சமநிலையில் வைத்திருக்க முடியும். சினியோல், டெரிபினைன் ஆகிய மூலக்கூறுகள் இருக்கின்றன. அவை ஜீரண ஆற்றலை மேம்படுத்துவதோடு கல்லீரலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கிறது. சுவாசத்தை புத்துணர்வாக மாற்றுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இறுதியாக, மேற்கண்ட இத்தனை ஆரோக்கியம் நிறைந்த இந்த திரிபலா லட்டு செய்வதற்கு அதிக நேரமும் பிடிக்காது. அதிக பொருள்களும் தேவையில்லை. ஆனால் நோயெதிர்ப்பு மண்டலம் முதல் கல்லீரல் ஆரோக்கியம் வரையிலும் பாதுகாக்கக் கூடியது. இனியாவது ஜங்க் உணவுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை செய்து கொடுங்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை வெறும் தகவல் நோக்கங்களுக்காக. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல் திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையே திரிபலா. இந்த மூன்றிலும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன.

குடல் ஆரோக்கியம், கல்லீரல் செயல்பாடு மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, ஜீரண சக்தி மேம்பாடு ஆகியவை இதன் முக்கிய பயன்கள். இது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும்.

இந்த லட்டுவை ஒரு நாளைக்கு ஒரு லட்டு வீதம், மதியம் அல்லது இரவு உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இது அதிக பலன்களைக் கொடுக்கும்.

Our Other Services