Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வெங்காய சாறு: நீரிழிவு மற்றும் கொலஸ்டிராலுக்கு ஒரு இயற்கை மருந்து

வெங்காயம் இல்லாத சமையலறையே பெரும்பாலும் இருக்காது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒன்று வெங்காயம். இதை சமையலில் வெறும் சுவையைக் கொடுக்கக் கூடியது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இன்றைக்கு வீட்டுக்கு ஒருவராவது நீரிழிவு நோயாளிகளும் கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு பிரச்சினையையும் வெங்காயம் சரிசெய்யும். அதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய நல்ல மாற்றங்கள் உடம்புக்குள் நடக்கும். அது என்னவென்று தான் பார்க்கப் போகிறோம் வாருங்கள்.

வெங்காயம் கொலஸ்டிராலைக் குறைக்குமா?

ஆம். வெங்காய சாறு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் சின்ன வெங்காயத்துக்கு ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் இருப்பதாகக் கூறப்படுகிறது. PubMed மற்றும் Food Science And Nutrition இரண்டும் சேர்ந்து மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெங்காய சாறு தொடர்ந்து எடுத்துக் கொண்ட கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு எச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்டிரால் அதிகரித்திருப்பதோடு எல்டிஎல் (LDL Cholesterol) என்னும் கெட்ட கொலஸ்டிரால் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஜீரணத்தை மேம்படுத்தும்

வெங்காயத்தில் இருக்கும் ப்ரீ பயாடிக் பண்புகள் உடலில் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச உதவி செய்வதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குடலில் ஜீரணத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்து ஜீரணத்தை மேம்படுத்தும். இதனால் வளர்சிதை மாற்றமும் மேம்படும். பொதுவாக நீரிழிவு என்பது வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினை. இதை சரிசெய்ய ஜீரண மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்க வேண்டியது முக்கியம். அதைத்தான் இந்த வெங்காயம் செய்கிறது.

நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்

வெங்காய சாறில் நிறைய ஆக்சிஜனேற்றப் பண்புகளும் வைட்டமின் சி - யும் அதிகமாக இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சரும எரிச்சல், ஸ்கின் அழற்சி ஆகியவற்றைத் தடுக்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த மருந்து

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படும். சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கட்டுப்படுத்தவே முடியாத அளவு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதை ஹைபர் கிளைசீமியா என்று அழைப்பார்கள். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு வெங்காயச் சாறில் உள்ள அல்லைல் புரோபில் என்னும் பண்பு குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

சின்ன வெங்காயமாக இருந்தால் 5-6, பெரிய வெங்காயம் என்றால் அரை வெங்காயம் எடுத்துக் கொள்ளலாம். இதை தோலுரித்து நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அதோடு ஒரு சிட்டிகை சீரகம், 2 மிளகு, ஒரு சிட்டிகை பிங்க் சால்ட், 4 புதினா இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து கால் டம்ளர் மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வடிகட்டி தினசரி மதிய உணவுக்குப் பிறகு எடுத்துக் கொண்டு வர நல்ல மாற்றம் தெரியும்.

இறுதியாக, மேற்கண்ட இத்தனை நன்மைகளைக் கொண்ட வெங்காயத்தை சாறாக மட்டுமின்றி தினமும் சிறிதளவு பச்சை வெங்காயமாகச் சாப்பிட்டு வந்தாலும் இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக நீரிழிவு மற்றும் கொலஸ்டிரால் உள்ளவர்கள் இந்த எளிமையான விஷயத்தை பின்பற்றலாம்.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டது வெறும் தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆம், வெங்காய சாறு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கும் தன்மை கொண்டது. ஆய்வுகளின்படி, நல்ல கொலஸ்டிரால் அதிகரித்து, கெட்ட கொலஸ்டிரால் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வெங்காயச் சாறு சிறந்த மருந்தாகச் செயல்படும். இதிலுள்ள அல்லைல் புரோபில் பண்பு குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.

வெங்காயம் ஜீரணத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், இதிலுள்ள ஆக்சிஜனேற்றப் பண்புகள் மற்றும் வைட்டமின் சி காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Our Other Services