Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

அனுமன் அருள் பெறும் ராசிகள்: வாழ்வில் தெளிவும், வலிமையும் பெற

மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக வருபவர் அனுமன். இவர் பக்தி, சொல் மற்றும் செயலின் செல்வராக திகழக்கூடியவர். அனுமன் இல்லாமல் ராமாயணம் என்ற இதிகாசம் நிறைவடைந்து இருக்காது என்று சொல்லலாம். ராமனின் அனுகூலத்தை அனுமனை வழிபடுவதன் மூலமே பெற்றிடலாம் என்று ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஜோதிட ரீதியாக, அப்படிப்பட்ட அனுமனின் ஆசீர்வாதம் பெற்று வாழ்வில் தெளிவும், உடல் வலிமையும் பெறும் ராசிகள் யார் என இந்த தொகுப்பில் அறிவோம்.

மேஷ ராசி - அனுமனின் ஆசி பெறும் பலம் மற்றும் செயல் தெளிவு

அனுமனுக்குரிய அனைத்து அம்சங்களும் செவ்வாயிடம் நிறைந்து இருக்கிறது. ராமனின் படையில் அனுமன் ஒரு தளபதியாக செயல்பட்டது போல, தேவர்களுக்கு படை தளபதியாக நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் உள்ளார். செவ்வாய் பகவான் ஒருவருக்கு வலிமை, ஆற்றல், வேகம் ஆகியவற்றை தரக்கூடியவர். ஒரு செயலை செய்து முடிக்கக் கூடிய உத்வேகத்தைத் தரக்கூடியவர். இதன் காரணமாக மேஷ ராசினர் செவ்வாய்க்கிழமை தோறும், ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வர அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள எல்லா தொல்லைகளும் தீரும். அவர்களின் சொல் செயலில் வலிமை அதிகரிக்கும். மேலும் பணப் பிரச்சினைகளும் தீரும்.

கடக ராசி - தடை நீங்கி தன்னம்பிக்கை பெற

அனுமன் தன் நெஞ்சில் சுமக்கக்கூடிய ராமபிரான் கடக லக்னத்தில் பிறந்தவர். இதன் காரணமாக கடக ராசி சேர்ந்தவர்கள், ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகள், கஷ்டங்கள் நீங்கி முன்னேற்றம் அடையலாம். வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். தொடர்ந்து ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேலை, தொழிலில் முன்னேற்றமும், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளும் பிறக்கும்.

விருச்சிக ராசி - நிதி ஆதாயங்களும், முன்னேற்றமும்

செவ்வாய் பகவானின் அருளை பெற்ற மற்றொரு ராசி விருச்சிகம். இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு அனுமனின் அருள் எப்போதும் நிறைந்திருக்கும். இவர்களின் வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைய தொடர்ந்து ராமபிரானையும், அனுமனையும் வழிபாடு செய்துவர நல்ல முன்னேற்றத்தை அடையலாம். உங்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமை தோறும் அனுமனை வழிபாடு செய்துவர, பகலவனை கண்ட பனி போல விலகும்.

மகர ராசி - தொல்லைகளில் இருந்து விடுதலை பெற

மகர ராசி சேர்ந்தவர்கள் குரு பகவானின் அருள் பெற்றவர்கள். இவர்கள் ஆஞ்சநேயரின் ஆசி நிறைந்தவர்கள். இவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாக உணரும்போது எல்லாம் அனுமனை வழிபட்டாலே போதும். இவர்கள் எல்லா விதமான தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள். தங்களின் வாழ்க்கையில் மேன்மையான முடிவுகளை பெற அனுமனை தியானம் செய்வது அவசியம்.

அனுமன் வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்

  • செவ்வாய்க்கிழமை விரதம்: செவ்வாய்க்கிழமை தோறும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவதோடு, பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவும்.
  • குரங்குகளுக்கு உணவு: செவ்வாய்க்கிழமைகளில் குரங்குகளுக்கு வெல்லம், உளுத்தம் பருப்பு, வாழைப்பழம் அல்லது வேர்க்கடலை கொடுக்கலாம்.
  • பாராயணம்: தினமும் அனுமான் சாலிசா பாராயணம் செய்வதோடு, செவ்வாய்க்கிழமைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும்.
  • தானம்: ஆஞ்சநேயரை வணங்கி ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதும், உதவிகள் செய்வதும் நல்லது.
  • துளசி மாலை: அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

செவ்வாய்க்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது மிகவும் உகந்தது. அன்று அசைவம் தவிர்த்து, பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கலாம். இது அனுமன் அருளை விரைவில் பெற உதவும்.

அனுமன் வழிபாட்டின் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, தெளிவு, உடல் வலிமை, தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயங்கள் பெருகும். இது ஒருவரின் வாழ்க்கையை வளமாக்கும்.

Our Other Services