தோலின் நிறம் மாறுவதற்கும், கருமையாவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஹைப்பர்பிக்மென்டேஷன் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக சருமத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கும். சரும செல்களை புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் அல்லது கருமையான செல்களை புதிய செல்கள் மூலம் மாற்றவும் வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. அப்படி ஹைப்பர் பிக்மென்டேஷன் குறைய அதிமதுரம் எப்படி உதவுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
ஹைப்பர் பிக்மென்டேஷன் என்றால் என்ன?
சருமத்தின் நிறம், அதில் உள்ள மெலனின் என்ற நிறமியைப் பொறுத்தது. UV கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, சரும செல்கள் மெலனினை உருவாக்குகின்றன. சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக மெலனின் உற்பத்தி ஆகலாம். இதனால் அந்த இடம் கருமையாகலாம். இதுவே ஹைப்பர்பிக்மென்டேஷன் (Hyperpigmentation) என்று அழைக்கப்படுகிறது.
அதிமதுரம் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு எப்படி உதவுகிறது?
அதிமதுரம் ஒரு சிறந்த நிறமி குறைப்பான் மற்றும் இயற்கையான ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும். இது மெலஸ்மா, முகப்பருவால் ஏற்படும் தழும்புகள் மற்றும் பொதுவான நிறமி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதிமதுரம் மெலனின் உற்பத்தியை குறைத்து சருமத்தை வெண்மையாக்குகிறது. இதன் வேரில் உள்ள லிகுரிடின் (Liquiritin) என்ற மூலப்பொருள் கருமையான நிறமிகளின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சருமத்தில் ஏற்படும் கருமையைப் போக்கி, சருமத்தை வெண்மையாக்குகிறது.
இதை வைட்டமின் C மற்றும் அசெலிக் அமிலத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும், இது பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டதால், முகப்பருவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அதிமதுரம் சரும நிறத்தை மேம்படுத்துமா?
Journal of Cutaneous and Aesthetic SurgeryTrusted Source -ல் வெளியான ஒரு ஆய்வில், அதிமதுரத்தில் உள்ள முக்கிய மூலப்பொருள் கிளாபிரிடின் (glabridin) UVB கதிர்களால் ஏற்படும் நிறமியில் இருந்து சருமத்தை பாதுகாப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை. கடைகளில் அதிமதுரம் சேர்க்கப்பட்ட க்ரீம்கள் கிடைக்கின்றன.
அதிமதுரத்தை தனித்து பயன்படுத்தலாமா?
அதிமதுரம் இயற்கையான மூலிகைப் பொருள். இதை தனித்து பயன்படுத்தாமல் கிளைகோலிக் அமிலம், பீட்டா அர்புடின், பெர்ரி சாறுகள், சோயா மற்றும் கிரீன் டீ போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். சரியான முறையில் பயன்படுத்தினால் இரண்டு வாரங்களில் சருமம் வெண்மையாவதை காணலாம். நான்கு முதல் எட்டு வாரங்களில் முழுமையான பலன் கிடைக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு அதிமதுரம் எப்படி பயன்படுத்துவது?
- மெலஸ்மா: இந்த தோல் நிறமி பிரச்சனையை யுவி கதிர்கள் மற்றும் மரபியல் காரணமாக சொல்லப்படுகிறது. இதை ஆர்கன் எண்ணெய், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல், அஸ்கார்பிக் அமிலம் போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
- முகப்பரு தழும்புகள்: அதிமதுரம் பொடியுடன் சிட்டிகை மஞ்சள் சேர்த்து முகத்துக்கு ஃபேஸ் பேக் போடலாம். இது சருமத்தை பொலிவாக வைத்திருக்க செய்யும்.
- கரும்புள்ளிகள்: அதிமதுர பொடியை எடுத்து அதனுடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து குழைத்து முகத்துக்கு ஃபேஸ் பேக் போடுங்கள். கரும்புள்ளி குறைய வாரம் ஒரு முறை இதை செய்யுங்கள். இதை ஹைப்பர் பிக்மெண்டேஷனுக்கு சேர்த்து பயன்படுத்தலாம்.
- அதிமதுரம் டோனர்: அதிமதுர வேர் சாறு கலந்த டோனர் கடைகளில் கிடைக்கும். அதை பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஈரப்பதமாக இருக்கும். அதிமதுரம் சாற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து டோனராக பயன்படுத்தலாம்.
அதிமதுரம் பொடி எப்போது பயன்படுத்தலாம்?
இதை காலை, இரவு சரும பராமரிப்பில் பயன்படுத்தலாம். தனித்து அல்லது மற்ற பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். எனினும் இது இலேசாக எரிச்சல் தன்மை உடன் இருக்கும். பெரும்பாலும் இது ஒவ்வாமை குறைவு என்றாலும் ஒவ்வாமை உண்டு செய்யுமா என்பதை அறிய பேட்ச் டெஸ்ட் செய்து சரிபார்க்கவும். மேலும் நீண்ட காலம் இதை பயன்படுத்த வேண்டாம்.