பாரம்பரிய தமிழ் மருத்துவ அறிவின்படி, கிராம்பு டீ (Clove Tea) பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது ஒரு நறுமணமிக்க பானம் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை மருந்தாகவும் உள்ளது. இந்த கட்டுரையில், கிராம்பு டீ குடிப்பதால் ஏற்படும் அற்புதமான ஆரோக்கிய மாற்றங்களை விரிவாகக் காண்போம்.
கிராம்பு டீயின் முக்கியப் பயன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் கொண்டது.
- செரிமான மேம்பாடு: அஜீரணம், வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு.
- ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
- வாய் ஆரோக்கியம்: பல் வலி, ஈறு தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும்.
- சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணம்: இருமல், சளி, மூக்கடைப்பு போன்றவற்றை நீக்கும்.
- கல்லீரல் பாதுகாப்பு: நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
- எலும்பு உறுதி: மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தும்.
- புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: யூஜெனால் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
கிராம்பு டீ - விரிவான ஆரோக்கிய நன்மைகள்
ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தவை
கிராம்பில் ஆற்றல் வாய்ந்த வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள ப்ரீ - ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுவதோடு உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கிறது. இன்ஃபிளமேஷன்கள் குறையும்போது உடலில் இயற்கையாகவே நோய்த் தொற்று ஏற்படுவது குறையும்.
செரிமான ஆற்றலை மேம்படுத்தும்
செரிமானக் கோளாறுகளால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த கிராம்பு டீ மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். அடிக்கடி வயிறு உப்பசம் ஏற்படுவது, கடுமையான வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த கிராம்பு டீ குடிக்கலாம். கிராம்பு டீ செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து ஜீரணத்தைத் தூண்டும். உணவை குடல் உடைக்கும்போது வெளிவரும் அமிலம் மற்றும் வாயுக்களையும் இது கட்டுப்படுத்தும்.
நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்
கிராம்பில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இவை பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்களை அழிப்பதோடு உடலை காய்ச்சல், சளி போன்றவற்றில் இருந்து எதிர்த்துப் போராட உதவுகிறது.
சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணம் தரும்
இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு இந்த கிராம்பு டீ அதிலிருந்து நிவாரணம் தரும். நுரையீரலில் காற்றின் சுற்றுப் பாதைகளைச் சுத்தம் செய்யும். அதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலி போன்றவற்றைக் குறைத்து சளியைத் தளர்த்தும்.
வாய் ஆரோக்கியத்துக்கு நல்லது
கிராம்பு வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு அற்புதமான தீர்வு. குறிப்பாக பல் வலி, சொத்தைப் பல் போன்றவற்றுக்கு காலங்காலமாக பயன்படுத்தப்படும் வீட்டு வைத்தியம் இந்த கிராம்பும் கிராம்பு எண்ணெயும் தான். வாயில் ஏற்படும் துர்நாற்றம், பல் துவாரங்கள், ஈறு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் தொடர்ந்து கிராம்பு டீயை எடுத்து வர அதிலுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளால் அதற்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க
ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க கிராம்பு டீ குடிக்கலாம். உணவுக்குப் பிறகு ஒரு கப் கிராம்பு டீ எடுத்துக் கொள்வதன் மூலம் உணவால் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவி செய்யும். கிராம்பு டீ குடிக்கும்போது அதிலுள்ள இன்சுலின் எதிர்ப்பு பண்புகள் அதிகப்படியான இன்சுலின் சுரந்து வீணாவதைக் கட்டுப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை மிக மெதுவாகக் கலப்பதற்கு உதவி செய்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்
உடற்கழிவுகளை வெளியேற்ற இரவு பகலாக நம்முடைய கல்லீரல் வேலை செய்கிறது. அந்த கல்லீரலில் தேங்கும் கழிவுகளை முறையாக வெளியேற்ற உதவுதோடு அதை டீடாக்ஸ் செய்து அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் தன்மை கிராம்புக்கு உண்டு. கிராம்பில் உள்ள யூஜெனால் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் மூலக்கூறாக இருக்கிறது. செல்லுலார் சேதத்தையும் தடுக்கும்.
எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும்
கிராம்பு டீயில் உள்ள மாங்கனீஸ் உள்ளிட்ட மினரல்கள் எலும்புகளை உறுதியாக்க உதவி செய்யும். தொடர்ச்சியாக கிராம்பு டீயை எடுத்துக் கொண்டு வரும்போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். வயதாகும் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டது
கிராம்பில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிற மினரல்கள் உடலில் செல் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் கிராம்பில் உள்ள யூஜெனால் என்னும் சேர்மம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
கிராம்பு டீ எப்படி தயாரிக்க வேண்டும்?
கிராம்பு டீ தயாரிப்பது மிக எளிது. நேரமும் மிகக் குறைவாகவே செலவாகும். ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். 4-5 கிராம்பை லேசாகத் தட்டிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு நன்கு கொதிக்க விடுங்கள். கிராம்பின் சாறு முழுக்க அதில் இறங்கியதும் இறக்கி வடிகட்டினால் கிராம்பு டீ தயார். இதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தால் சூப்பரான கிராம்பு டீ ரெடி. சூடான நிலையில் குடிக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இறுதியாக, கிராம்பு டீயை உங்களுடைய தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்கண்ட பயன்களைப் பெற முடியும்.