முருகனுக்கு உகந்த சஷ்டி திதி, வழிபாடு செய்வதற்கும், விரதம் இருந்து அருள் பெறுவதற்கும் மிகவும் விசேஷமானதாகும். திதிகளில் ஆறாவது திதியாக வரும் சஷ்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் நன்மைகளை தரக் கூடியதாகும்.
சஷ்டி விரதம்: முக்கியத்துவம் மற்றும் பலன்கள்
அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஆறாவது திதியே சஷ்டி திதியாகும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை காரணமாக இந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் பூமியில் மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. சஷ்டி திதியில் விரதம் இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
இந்த உன்னதமான சஷ்டி விரதம், முருகப் பெருமானின் அருளைப் பெற சிறந்த வழியாகும். ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகளின்படி, சஷ்டி திதியில் செய்யும் வழிபாடுகள் தனிச்சிறப்பு மிக்கவை. மாதம் தோறும் வரும் சஷ்டி தினத்தில் விரதம் மேற்கொள்வதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது தமிழ் மக்களின் ஆழமான நம்பிக்கை.
சஷ்டி விரதத்தின் முக்கிய பலன்கள்:
- திருமணப் பேறு மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த முருகன் விரதம் மிகவும் பலனளிக்கும்.
- வேலை வாய்ப்புகள் அமையும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகள் அண்டாது.
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
- கன்னிப் பெண்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும்.
- எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும், சகல வளங்களும் பெருகும்.
சஷ்டி விரத முறை மற்றும் வழிபாடுகள்
சஷ்டி திதியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. விரதம் இருக்க முடியாதவர்கள் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முருகப் பெருமானை மனதார வேண்டி, அவரைப் போற்றி துதிக்கும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறந்தது.
விரத வழிமுறை:
- காலை முதல் மாலை வரை தண்ணீரைத் தவிர வேறு உணவு எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.
- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விரதத்தை மேற்கொள்ளலாம். அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.
- தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கட்டாயம் வைக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் வையுங்கள். தேங்காய் உடைத்து இருபுறமும் வைக்க வேண்டும்.
- முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அவருக்கு இஷ்ட நைவேத்தியமாக அவல் உணவுகள் வைக்கலாம்.
- முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
- கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து தீய சக்திகளை விரட்டி அடிக்கும்.
- வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்துவிட்டு, மாலையில் மீண்டும் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
- காலையில் அல்லது மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வரலாம்.
ஒவ்வொரு சஷ்டி அன்றும் இப்படி விரதம் இருந்து வழிபட்டு வர எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
சஷ்டி என்பது திதிகளில் ஆறாவது திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஆறாவது நாள் இது. முருகனுக்கு உகந்த இந்த திதியில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷம்.
திருமணப் பேறு, குழந்தைப்பேறு, வேலை வாய்ப்புகள், உடல் மற்றும் மன ஆரோக்கியம், எதிரிகள் தொல்லை நீங்குதல் போன்ற பலன்களை விரும்பும் அனைவரும் சஷ்டi விரதத்தை மேற்கொள்ளலாம். கன்னிப் பெண்கள் நல்ல மண வாழ்வு பெறவும் இந்த விரதம் சிறந்தது.
முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் அல்லது வீட்டில் இருந்தபடியே கந்த சஷ்டி கவசம் படித்து, முருகப் பெருமானை மனதார வேண்டி வழிபடலாம்.