உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் குடலின் ஆரோக்கியம் அத்தியாவசியம். செரிமானத்தை சீராக்கி, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் கழிவுகள் வெளியேற்றத்தில் முக்கியப் பங்காற்றும் குடலை பாதுகாப்பது அவசியம். இயற்கையான வழியில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டாக்டர் உஷாநந்தினி பரிந்துரைக்கும் கற்றாழை மோரின் அற்புத நன்மைகளை இங்கு காண்போம்.
குடல் ஆரோக்கியம் ஏன் அவசியம்?
சித்த மருத்துவத்தில் அகஸ்தியர் கூற்றுப்படி, உடல் ஆரோக்கியமாக இருக்க வயிறு மற்றும் அதைச் சார்ந்த குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். இது உண்ணும் உணவுகளில் இருந்து முழுமையான சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. மேலும், நாள்பட்ட நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், அவை ரத்தத்தில் முழுமையாகச் சேர குடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அத்தகைய ஆரோக்கியத்தை வழங்கும் பானங்களில் சோற்று கற்றாழை மோர் முக்கியமானது. தமிழ் மருத்துவத்தின் சிறப்பை இது எடுத்துரைக்கிறது.
சோற்றுக்கற்றாழை மோர் ரெசிபி
கற்றாழையை வீட்டிலேயே வளர்ப்பது அதிகரித்துவிட்டது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய இது, சிறு தொட்டியிலும் நன்றாக வளரும். கற்றாழை மடல்களை எடுத்து, அதன் தோலைச் சீவி, உள்ளிருக்கும் நுங்கு போன்ற ஜெல் பகுதியை தண்ணீரில் நன்றாக 7 முறை அலசி கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டம்ளர் மோர் சேர்த்து நன்றாக ப்ளெண்டரில் அரைத்துவிடவும் என்கிறார் டாக்டர் உஷாநந்தினி.
கற்றாழை மோர் எப்போது குடிக்க வேண்டும்?
இந்த கற்றாழை மோர் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். வாரம் ஒருமுறை எடுத்துவருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கோடை காலங்களில் கற்றாழை ஜூஸ் மிக பிரபலம். நீரிழிவு நோயாளிகள், பிபி போன்ற பிரச்சனை கொண்டவர்களும் நோய் நிர்வகிக்க கற்றாழை பானம் சேர்த்துவரும் நிலையில் இவை குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் டாக்டர் உஷாநந்தினி.
கற்றாழை மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
குடல் புண் அல்லது இரைப்பை புண் ஆற்றும்
குடல் புண் என்பது வயிற்றின் புறணி வழியாக அரிக்கும் திறந்த புண் ஆகும். இவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், அசெளகரியம் போன்ற பாதிப்புகள் இருக்கும். சிகிச்சையளிக்கப்படாத போது இவை தீவிரமாகலாம். இந்நிலையில் இயற்கையான முறையில் புண் ஆற்ற கற்றாழை மோர் உதவும் என்கிறார் டாக்டர் உஷாநந்தினி. குடல் புண் உபாதை இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கற்றாழை மோர் பானம் குடிப்பது நல்ல தீர்வாக இருக்கும்.
குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை தடுக்கும்
கற்றாழை மோர் 90% தண்ணீரால் ஆனது. இது குடலை சுத்தம் செய்யவும், கழிவுகள் தேங்குவதைத் தடுக்கவும் உதவும். நாள் பட்ட மலச்சிக்கல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் கற்றாழையுடன் மோர் சேர்த்து தொடர்ந்து குடித்து வரும் போது இது இயற்கையான முறையில் நல்ல தீர்வாக இருக்கும். இதனுடன் சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால் மலச்சிக்கல் முழுமையாக சரியாகும்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறிக்கு (Irritable bowel syndrome) தீர்வு
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி என்பது வயிறு மற்றும் குடல் பகுதிகளை பாதிக்கும் பிரச்சனை. இதனால் தசைப்பிடிப்பு, வயிற்று வலி, வாயு, வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்ற உபாதைகள் இருக்கும். இவர்களுக்கு கற்றாழை மோர் நல்ல தீர்வாக இருக்கும். கற்றாழை மோர் குடிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இந்த பானம் உதவும் என்கிறார் டாக்டர் உஷாநந்தினி.
கற்றாழை செரிமான பிரச்சனைகளுக்கு உதவுமா?
கற்றாழையில் ஆந்த்ராகுயினோன் கிளைகோசைடுகள் உள்ளன. இவை மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்கலாம் என்கிறது பழைய ஆய்வுகள். இதன் பாதுகாப்பு குறித்து நிருபனம் இல்லை என்பதால் 2002ல், FDA கற்றாழை மலமிளக்கிகளை அங்கீகரிக்கவில்லை. சில ஆய்வுகள், கற்றாழை சிரப் GERD அறிகுறிகளை குறைக்கலாம் என்கிறது. சில ஆய்வுகள் கற்றாழை IBSக்கு உதவும் என்று தெரிவிக்கிறது. கற்றாழை பாதுகாப்பு மற்றும் அளவு குறித்த ஆய்வுகள் இன்னும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
மோர் குடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தும்?
மோரில் லாக்டிக் அமிலம் மற்றும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகின்றன. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மோரில் இருக்கும் புரோபயாடிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முக்கிய நன்மைகள்
- குடல் புண் மற்றும் இரைப்பை புண்களை ஆற்றும்.
- மலச்சிக்கலைத் தடுத்து, குடலைச் சுத்தப்படுத்தும்.
- எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) அறிகுறிகளைக் குறைக்கும்.
- செரிமானத்தை மேம்படுத்தும்.
- உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உடல் ஆரோக்கியம் சீராக இருந்தால், தமிழ் மொழியின் பெருமைகளையும், ஜோதிடம் போன்ற பாரம்பரியக் கலைகளையும் கற்றுக்கொள்ளவும், முருகன் ஆலயங்கள் மற்றும் ஆறுபடை வீடுகள் போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று வரவும் மனமும் உடலும் வலுவாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கான இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.