Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

இயற்கையாகவே உள்ளுணர்வு சக்தி கொண்ட ராசிகள்

மனிதராக பிறந்த அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறன், சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதில் சிலருக்கு மட்டும் தான் இயற்கையிலேயே எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் உள்ளுணர்வு பல முக்கியமான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. தமிழ் ஜோதிடம் இந்த சிறப்பு திறன்களை சில ராசிகளுடன் தொடர்புபடுத்துகிறது. கெட்ட விஷயங்கள் நடக்கப் போவதையும் முன்கூட்டியே உணரும் இந்த ராசிகளைப் பற்றி இங்கு விரிவாக அறிவோம்.

உள்ளுணர்வு ராசிகளின் முக்கிய அம்சங்கள்

  • எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும் ஆற்றல்.
  • சரியான நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன்.
  • மறைக்கப்பட்ட ரகசியங்களை அறியும் உள்ளுணர்வு.
  • பிறரின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு.
  • ஆபத்துகளை முறியடிக்கும் வழிகளை கண்டறியும் திறன்.

உள்ளுணர்வுத் திறன் கொண்ட ராசிகள்

மேஷ ராசி

மேஷ ராசியை சேர்ந்தவர்கள் வேகமாகவும், வலிமையுடனும் செயல்படுபவர்கள். இவர்களின் ஆறாம் அறிவான பகுத்தறியக்கூடிய விஷயங்களிலும் சிறப்பாக செயல்படுவார்கள். நுட்பமான விஷயங்களை கோடிட்டு காட்டுவதிலும், ரகசியங்களை அறியக்கூடிய சக்தி பெற்றவர்களாக இருப்பார்கள். பல நேரங்களில் எங்கு தவறு நடந்துள்ளது, எதிர்பார்த்த விஷயங்கள் எப்படி தவறாக போனது போன்றவற்றை உள்ளுணர்வுடன் ஆராய்ந்து அறிவார்கள். இவர்களின் உள்ளுணர்வு சரியான திசையில் பயணிக்க உதவுவதால் இவர்கள் புத்திசாலி என பாராட்டப்படுவார்கள். ஜோதிடப்படி, இவர்களின் வழிகாட்டுதல் பலருக்கு சிறப்பான ஆலோசனையாக அமையும்.

மிதுன ராசி

புத்திக்கூர்மை, சிந்தனையை தரக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய ராசி மிதுனம். இவர்களின் சிந்தனையும், தகவலைக் கடத்தக்கூடிய பேச்சுத் திறனும் சிறப்பாக இருக்கும். தனித்துவமான சில செயல்பாடுகள், பேச்சு இவர்களை தனித்துவமானவராக உணர வைக்கும். பிறர் தன்னிடம் மறைக்கக்கூடிய விஷயங்கள், உண்மைகளை தன் ஆழ்நிலை உணர்வு மூலம் கண்டறியக்கூடிய திறன் பெற்றவர்கள். இவர்களின் வெற்றிக்கு காரணமே இவர்களின் நுண்ணறிவும், மனச்சோர்வடையாமல் சிந்திப்பது, பேசுவதும்தான். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, பிறரின் திறமையைக் கண்டறிவதோடு, தனக்கோ அல்லது பிறருக்கு ஏற்பட இருக்கும் பிரச்னைகளை முன்கூட்டியே உணர்ந்து சொல்லக்கூடியவர்கள்.

கடக ராசி

மனதை ஆளக்கூடிய சந்திரன் ஆளும் ராசி என்பதால், கடக ராசியினர் அடிப்படையிலேயே உணர்ச்சிகரமான நபர்களாகவும், நடக்க உள்ள விஷயங்களை முன்கூட்டியே உணரக்கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றியுள்ள, இவர்களுக்கு நெருக்கமான நபர்கள் மன வேதனை, பதட்டம், எதையோ மறைக்கக்கூடியவராக இருப்பின் அதை எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக குடும்பம் அல்லது தனக்கு பிடித்தமான நபர்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது முடிவெடுப்பதில் தடுமாற்றம் என்றால் அதற்கு உடனே தீர்வு தரக்கூடிய நபர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களின் உள்ளுணர்வு இவர்களை சரியான விதத்தில் வாழ்க்கையை வழிநடத்தக்கூடியதாக அமையும்.

சிம்ம ராசி

ஆத்ம காரகனான சூரிய பகவான் ஆட்சி செய்யும் ராசி சிம்மம். இவர்கள் சமூகத்துடன் சேர்ந்து செயல்படக்கூடியவர்களாகவும், பிறர் மீது நேசமானவர்களாக விவேகமாக இருப்பார்கள். பெரும்பாலும் சரியான தருணத்தை தன் உள்ளுணர்வால் அறிந்து கொள்ளக்கூடியவர்கள். இது இவர்களின் வெற்றிக்கு முக்கியமானதாக அமையும். தன் சிறப்பான முடிவு எடுக்கும் விஷயத்தில் பிறரிடம் தர்க்கத்தில் ஈடுபடுவதை விட, தன் உள்ளுணர்வு அறிவுறுத்தக்கூடிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவார்கள். ஆன்மிகத்துடன் கூடிய அணுகுமுறை இவர்களின் திறமை, வாய்ப்புகளை விரிவாக்க உதவும்.

கும்ப ராசி

கும்ப ராசியை சேர்ந்தவர்கள் முற்போக்கான, படைப்பாற்றல் நிறைந்த நபர்களாக இருப்பார்கள். இவர்களின் புதிய யோசனைகள் மற்றும் சுதந்திரமாக யோசிக்கக்கூடிய சிந்தனை இவர்களுக்கு ஆளுமை, அதிகாரத்தை தரக்கூடியதாக இருக்கும். பெரும்பாலான ஆபத்தான விஷயங்களை, இவர்களின் சரியான செயல் திட்டங்கள் மூலம் முறியடிப்பார்கள். இலக்குடன் செயலடக்கூடிய இவர்கள் அதில் உள்ள சிக்கல்களை நுண்ணறிவு மற்றும் ஆழ்மன உள்ளுணர்வு மூலம் எதிர்கொள்கின்றனர். அமானுஷ்யமான விஷயங்கள், உளவியல் சார்ந்த விஷயங்களை இவர்களின் உள்ளுணர்வு மூலம் ஆராய்ந்து வெற்றி அடைவார்கள். இது மற்றவர்களின் ஆற்றலை புரிந்து கொள்ள உதவுகிறது. ஜோதிட உலகில் இவர்களின் உள்ளுணர்வு பெரும் பங்கு வகிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

உள்ளுணர்வு சக்தி என்பது எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும் அல்லது ஒரு சூழ்நிலையின் உண்மையான தன்மையை பகுத்தறிவின்றி புரிந்துகொள்ளும் ஒரு இயற்கையான திறன் ஆகும். இது ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்டது.

மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், மற்றும் கும்பம் போன்ற ராசிகள் இயற்கையிலேயே அதிக உள்ளுணர்வு சக்தி கொண்டவையாகக் கருதப்படுகின்றன. இவர்கள் தங்கள் உள்ளுணர்வை நம்பி முடிவுகளை எடுப்பார்கள்.

ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட ஆளும் கிரகம் மற்றும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. சில கிரகங்களின் தாக்கம், குறிப்பாக சந்திரன் (கடகம்) மற்றும் புதன் (மிதுனம்), ஒருவரின் உள்ளுணர்வு திறன்களை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இது ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கவும் உதவுகிறது.

Our Other Services