எண் கணிதத்தின் (Numerology) அடிப்படையில், எண் 1ல் பிறந்தவர்களின் பலம், பலவீனம், குணம் மற்றும் அவர்களின் வேலை, தொழில், குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தில் எண் 1ன் முக்கியத்துவத்தை அறிவோம்.
எண் 1 எண் கணிதம் - ஒரு அறிமுகம்
எண் கணிதத்தின்படி, 1 முதல் 9 வரையிலான ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்துவமான குண நலன்கள் உண்டு. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கமும், அதற்குரிய குண நலன்களும் இருக்கும். குறிப்பாக, 1 அல்லது 10 (1+0=1), 19 (1+9=1), 28 (2+8=1) ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த 1 என்ற எண்ணால் கிடைக்கக்கூடிய நேர்மறையான ஆற்றல், வலிமை ஆகியவை அதிகமாக இருக்கும். இவர்கள் சூரிய பகவானின் அருள் ஆசி பெற்றவர்கள். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி ஆவார். இந்த தமிழ் எண் கணித வழிகாட்டி உங்கள் வாழ்க்கைப் பாதையை அறிய உதவும்.
எண் 1ல் பிறந்தவர்களின் இயல்பு மற்றும் குணங்கள்
சூரியன் எப்படி நவகிரகங்களின் தலைவனாக வழிநடத்துகிறாரோ, அதேபோல எண் 1ல் பிறந்தவர்கள் சிறப்பான ஆளுமைத் திறன் கொண்டவர்கள். இவர்கள் உறுதியான மன நிலை, கட்டளையிடும் திறன் கொண்டவர்கள். இவர்களிடம் சிறப்பான கட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவப் பண்புகள் நிறைந்திருக்கும். சிறப்பான தன்னம்பிக்கையுடன் எந்த வேலையையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற மனநிலையில் இருப்பார்கள். சூரியனின் தாக்கத்தால் மக்களை ஆள முயல்வார்கள். இவர்களின் துணிச்சல் மற்றும் தலைமைப்பண்பு ஜோதிடம் கூறும் பலன்களில் முக்கியமான ஒன்று.
வேலை மற்றும் தொழில்
இவர்களின் தலைமைத்துவம் காரணமாக இவர்கள் பிறரிடம் அடிபணிந்து, கட்டளைக்கு பணிந்து செயல்படுவது கடினம். இவர்கள் தனக்கென ஒரு சொந்தத் தொழில் அல்லது வியாபாரத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் ராஜாவைப் போல இருக்க நினைப்பார்கள். அதற்காக எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். 1ம் எண்ணில் பிறந்தவர்களிடம் மிகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனை இருக்கும். இவர்களிடம் வலிமையான, தன்னம்பிக்கை நிறைந்த, தொழில் கவனமும், கடின உழைப்பும் இருக்கும். தங்கள் வாழ்க்கையை எப்போதும் தெளிவாக வைத்திருப்பார்கள். எண் கணிதம் இவர்களுக்கு அரசுத் துறை, அரசியல் போன்ற துறைகளை பரிந்துரைக்கிறது.
தொழில் எப்படி அமையும்:
- கடின உழைப்பாளர்கள்: இவர்கள் தங்களின் தொழிலை முன்னேற்றுவதற்காக முடிந்தவரை அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.
- தலைமைப் பண்பு: இவர்கள் நல்ல தலைவராகவும், அரசியல்வாதியாகவும், அரசுத் துறையில் பெரிய அதிகாரியாக வர வாய்ப்புள்ளது.
- தொழிலதிபர்கள்: சிறந்த தொழிலதிபர்களாக வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்
எண் 1ல் பிறந்தவர்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு ஆகிய நிறங்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.