ஆலிவ் ஆயில் (Olive Oil) ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த ஒரு இயற்கையான எண்ணெய். தலைமுடி வளர்ச்சிக்கு இது மிக அற்புதமான பலன்களை அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயை சரியான முறையில் பயன்படுத்தினால், தலைமுடியின் வேர்கள் முதல் நுனி வரை வலிமை பெற்று, உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முடி வேகமாக வளரும்.
ஆலிவ் ஆயில் மசாஜ் மூலம் முடி வளர்ச்சி
வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்வது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், அதன்மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டும்.
செய்முறை:
- 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஒரு சிறிய பௌலில் ஊற்றி டபுள் பாயில் முறையில் வெதுவெதுப்பாக சூடு செய்யவும்.
- கை பொறுக்கும் சூடு வந்ததும், விரல் நுனிகளில் தொட்டு உச்சந்தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும்.
- இந்த எளிய மசாஜ் முறை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வலுவான முடி வளர்ச்சிக்கு ஓவர்நைட் ட்ரீட்மெண்ட்
வழுக்கையாகவும், முடி மிகத் தின்னாகவும் இருப்பவர்களுக்கு இந்த ஓவர்நைட் ட்ரீட்மெண்ட் மிகச்சிறப்பாக வேலை செய்யும்.
- ஆலிவ் ஆயிலை தலையில் அப்ளை செய்து ஷவர் கேப் போட்டு கவர் செய்யவும்.
- காலையில் எழுந்ததும் மென்மையான ஹெர்பல் ஷாம்பு போட்டு அலசவும். முடி பளபளவென ஜொலிக்கும்.
- வாரத்தில் இரண்டு நாள் இப்படி செய்வதன் மூலம் முடி வேகமாக வளரும்.
ஆலிவ் ஆயில் - முட்டை ஹேர்மாஸ்க்
ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்பு அமிலங்களும், முட்டையில் உள்ள புரதங்களும் இணைந்து முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்.
- முட்டையின் மஞ்சள் கரு வாசனை பிடிக்கவில்லை என்றால் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தலாம்.
- இதை ஹேர்பேக்காக போட்டு அரை மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பு கொண்டு அலசவும்.
தேங்காய் எண்ணெய் மிக்ஸ்
ஆலிவ் ஆயிலை நேரடியாக பயன்படுத்துவதை விட தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துவது இன்னும் நல்லது. இரண்டையும் சம அளவில் எடுத்து, ஒரு பௌலில் ஊற்றி தலை பொறுக்கும் சூடு வரும் வரை சூடு செய்யவும்.
அதை உச்சந்தலை முதல் நுனி வரை அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். இந்த கலவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கும்.
வறண்ட முடிக்கு ஆலிவ் ஆயில் - கற்றாழை மிக்ஸ்
வறண்ட முடி (dry and frizzy hair) இருப்பவர்களுக்கு இந்த முறை மிகச் சிறந்தது. இது முடிக்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கும்.
- ஒரு பௌலில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை உச்சந்தலை முதல் நுனி முடி வரை அப்ளை செய்யவும்.
- வாரத்தில் 2-3 முறை இதை செய்வதன் மூலம் முடி ஸ்மூத்தா, ஹைட்ரேட்டிங்கா, நல்லா வேகமா வளரும்.
குளிக்கும் முன் ஆலிவ் ஆயில் பயன்பாடு
குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து ஊறவிட்டு, பின் வழக்கம்போல குளித்து வாருங்கள். இது முதலில் முடி உடைவதையும் உதிர்வதையும் குறைக்கும்.
ஆரோக்கியமான உச்சந்தலைக்கு ஸ்கால்ப் எக்ஸ்ஃபோலியேட்
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க எக்ஸ்ஃபோலியேட் செய்வது போல, உச்சந்தலையையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். இதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
- ஒரு பௌலில் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டு, அதோடு சிறிது சர்க்கரை சேர்த்து உச்சந்தலையில் மெதுவாக ஸ்கிரப் செய்யவும்.
- இப்படி மாதத்திற்கு 1-2 முறை செய்யலாம். இது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
மேற்கண்ட பல வழிகளில் ஆலிவ் ஆயிலை உங்கள் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். இதன்மூலம் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டி, அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். முடி சார்ந்த இந்த குறிப்புகள் ஜோதிடம் மற்றும் முருகன் ஆலயங்கள் பற்றிய தகவல்களுடன் தமிழ் சமூகத்திற்கு உபயோகமாக அமையும்.