Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஓம் நம சிவாய மந்திரத்தின் அற்புத பலன்கள்

சிவ மந்திரங்களில் மிக பழமையானது, முதன்மையானதும், எளிமையானதுமாக சொல்லப்படுவது "ஓம் நம சிவாய" என்னும் மந்திரமாகும். சிவ பெருமானே உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும். "சிவன்" என்ற சொல்லுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்று பொருள். இதனால் இன்பம் அளிப்பவனை வணங்குகிறேன் என்றும் இந்த மந்திரத்திற்கு பொருள் கொள்ளலாம். சிவ பெருமானின் ஆசீர்வாதத்தையும், அளவில்லாத நன்மைகளையும் வழங்கும் இந்த சக்தி வாய்ந்த தமிழ் மந்திரம், ஆன்மாவையும், மனதை சுத்தம் செய்வதுடன் தியான நிலையை எளிதில் அடைவதற்கும் உதவும். தினமும் ஒரு மணி நேரம் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வந்தால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களை இங்கே காணலாம்.

தினமும் ஒரு மணி நேரம் ஓம் நம சிவாய மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்

வேதங்களில் சிறப்பு பெற்ற "ஓம் நம சிவாய" மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் விடாமல் சொல்லி வந்தால், பின்வரும் ஜோதிட மற்றும் ஆன்மீக பலன்களை பெறலாம்:

  • நீங்கள் மௌன விரதம் இருந்ததாக கருதப்படும்.
  • தினமும் ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு விருப்பமானது போல் அமைதியாக வாழ்ந்ததாக அர்த்தம்.
  • ஒரு மணி நேரம் ஹரிச்சந்திரன் போல் உண்மையை பேசியதாகிறது.
  • ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு அருகிலேயே இருந்ததற்கு சமமாகிறது.
  • ஒரு மணி நேரம் பூஜை செய்ததற்கு சமம்.
  • தினமும் ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்வதற்கான பரிகாரத்தை செய்ததாகிறது.
  • ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது .
  • ஒரு மணி நேரம் வேதம் ஓதிய பலன் கிடைக்கும்.
  • ஒரு மணி நேரம் பெரியோர்களின் ஆன்மிக பேச்சு கேட்டதாகிறது.
  • ஒரு மணி நேரம் நீங்கள் தூய்மையான பக்தியில் இருந்ததற்கு சமம்.
  • ஒரு மணி நேரம் நீங்கள் மஹான்களால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை வென்றவர்கள் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் சமாதி நிலையில் உள்ளவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் நேர்மறையாக ஆக இருக்கிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் ஈசனுடன் நீங்கள் கை கோர்த்து இருக்கிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை ஈசன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
  • ஒரு மணி நேரம் மஹான்கள் வாயில் வந்த நாமத்தை நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
  • இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
  • ஒரு மணி நேரம் யாகம் செய்தவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் நீங்கள் கங்கை மற்றும் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் காவிரியில் குளித்தவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் பிருந்தாவன மண்ணில் உருண்டு புரண்டவர் ஆகிறீர்கள்.
  • ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிக்கிறீர்கள்.

இந்த மந்திரத்திற்கு மேல் நாமம் வேறு இல்லை, இறைவன் வேறு இல்லை என வேதங்கள் சொல்கின்றன. பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே இறைவன் திரு நாமம் சொல்ல முடியும் என்பார்கள். இந்த மந்திரத்தை எவர் ஒருவரால் ஒரு மணி நேரம் தொடர்ந்து சொல்ல முடிகிறதோ அவர்கள் மகா புண்ணியம் செய்தவர்கள் என சொல்லப்படுகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

"ஓம் நம சிவாய" மந்திரத்தின் பொருள் "சிவ பெருமானே உன்னை வணங்குகிறேன்" என்பதாகும். "சிவன்" என்பதற்கு "ஆனந்தம் அளிப்பவன்" என்றும் பொருள் உண்டு. இந்த மந்திரம் ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை எழுதி வந்தால் துன்பங்கள் விலகும் என கூறப்படுகிறது. மேலும், 108 என்ற எண்ணிக்கையில் இல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் தொடர்ந்து சொல்லி வந்தால் எண்ணற்ற புண்ணிய பலன்கள் கிடைக்கும் என வேதங்கள் கூறுகின்றன.

இந்த மந்திரம் ஆன்மாவையும், மனதையும் சுத்தம் செய்யும், தியான நிலையை எளிதில் அடைய உதவும், பாவங்களைப் போக்கும், இறைவனுக்கு அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை தரும், நேர்மறையான எண்ணங்களை உண்டாக்கும், மேலும் கோடி கோடியான புண்ணியத்தை சம்பாதிக்கும் ஜோதிட நன்மைகளைத் தரும்.

Our Other Services