Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வெறும் வயிற்றில் பெருங்காயம்: 6 வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பெருங்காயம் ஒருவகை மரத்தின் பிசினில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதேசமயம் உணவுக்கு வாசனையையும், அதன் சுவையை அதிகரிக்கவும் உதவும். இந்தியப் பாரம்பரியத்தில் சமையலுக்குப் பயன்படுத்தும் பல மசாலாப் பொருள்கள் மருத்துவ குணம் கொண்டவை. அவற்றில் மிக முக்கியமான மசாலாப் பொருள் பெருங்காயம். மிகக் கடுமையான வாசனை வீசக்கூடிய இந்தப் பெருங்காயம் பல உடல் சார்ந்த பிரச்சினைகளைச் சரிசெய்யும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் எடுத்துக் கொள்வதன் ஆரோக்கிய நன்மைகளை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பெருங்காயத்தின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்

  • ஆன்டிபாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்: பெருங்காயத்தில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன. தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தைக் கலந்து குடித்து வரும்போது வயிறு சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் சரிசெய்யும்.
  • செரிமான மேம்பாடு: பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இது அஜீரணத்துக்கு மிகச்சிறந்த அளவில் உதவி செய்யும். வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடிப்பது செரிமானப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை தரும். வாயுத்தொல்லை, வயிறு உப்பசம், மலச்சிக்கல் போன்ற செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
  • இரத்த அழுத்தக் கட்டுப்பாடு: பெருங்காயம் இரத்தம் உறைதலைத் தடுக்கும். அதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் இந்த பெருங்காயத்தைக் குடிக்கும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம்: வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பெருங்காயம் நல்ல தீர்வாக இருக்கும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், இரைப்பையில் ஏதேனும் அழற்சி சார்ந்த பிரச்சினைகள் ஆகிய பிரச்சினைகள் இருந்தாலும், அதனால் வயிற்றில் வாய்வு அதிகரித்தால் அதை வெளியேற்றி ஜீரணத்தை அதிகரிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வயிற்றில் உள்ள புழுக்கள், குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வயிற்று வலியைக் குணப்படுத்த பெருங்காயம் உதவும்.
  • தலைவலி நிவாரணம்: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வரும் என்றால் நீங்கள் தினமும் ஒரு சிட்டிகை அளவாவது பெருங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். தினமும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயம் எடுத்துக் கொண்டே வரும்போது நாள்பட்ட தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
  • சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு: ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள், மூக்கடைப்பு உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளை சரிசெய்ய பெருங்காயம் உதவி செய்கிறது. அதேபோல மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள், சீரற்ற மாதவிடாய் கால இரத்தப்போக்கு ஆகியவற்றைச் சீராக்க வேண்டுமென்றால் அதற்கு பெருங்காயத்தைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொண்டு வர வேண்டும்.

பெருங்காயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

பெருங்காயத்தைப் பல வழிகளில் எடுத்துக் கொள்ள முடியும். பெருங்காயத்தை உணவில் தாளிப்பில் சேர்க்கலாம். குறிப்பாக பருப்பு, பயறு மற்றும் பால் சார்ந்த பொருள்களில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

  • வெந்நீரில் கலந்து: ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் அளவு பெருங்காயத்தைக் கலந்து அதை காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் இருக்கும் பல பிரச்சினைகள் தீரும்.
  • மோருடன் கலந்து: வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம் போன்றவை இருப்பவர்கள் ஒரு டம்ளர் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்து குடிக்கலாம்.

இறுதியாக, இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்த மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையான மாற்று இல்ல. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்படும் திறன் ஆகியவற்றுக்கு ஜோதிடம்360 பொறுப்பேற்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

வெறும் வயிற்றில் பெருங்காயம் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது ஆண்டிபாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் பெருங்காயத்தைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தைச் சேர்த்தும் குடிக்கலாம். உணவில் தாளிப்பிலும் சேர்க்கலாம்.

ஆம், பெருங்காயம் இரத்தம் உறைதலைத் தடுப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Our Other Services