Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆண்கள் தலைமுடி பராமரிப்பு: டாக்டர் ஸ்வேதா ராகுல் குறிப்புகள்

தலைமுடி பராமரிப்பில் ஆண்களும் பெண்களைப் போலவே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் சரியாகப் பராமரிக்காமல் விடும்போது வழுக்கை விழும் ஆபத்து அதிகம். ஹெல்மெட் பயன்பாடு, மாசுகளில் இருந்து பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் தலைமுடியில் பாதிப்புகள் உண்டாகலாம். ஆண்கள் கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய ஹேர் கேர் விஷயங்கள் பற்றி டாக்டர் ஸ்வேதா ராகுல் விளக்குகிறார்.

டாக்டர் ஸ்வேதா ராகுல் பரிந்துரைக்கும் மூன்று முக்கிய ஹேர் கேர் விஷயங்கள்

ஆண்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் ஆயில் (அல்லது சீரம்) ஆகிய மூன்று விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அவை என்னவென்று பார்ப்போம்.

1. ஆண்கள் பயன்படுத்தும் ஷாம்பு

ஆண்கள் பெரும்பாலும் தினமும் குளிக்கும்போது தலைக்கும் சேர்த்து ஷாம்பு போடுவார்கள். ஆனால் தினசரி ஷாம்பு போடுவதைத் தவிர்ப்பது நல்லது. வாரத்தில் மூன்று நாட்கள் என்று வைத்துக் கொண்டால் போதும். அதேபோல தேர்வு செய்யும் ஷாம்புவும் முக்கியம். வறண்ட முடி இருப்பவர்கள் மைல்ட் SLS அல்லது சல்பேட் ஃப்ரீ ஷாம்புவையும், ஆயில் ஸ்கால்ப் இருப்பவர்கள் கண்ணாடி போல் தெளிவாக இருக்கும் க்ளாரிஃபையிங் ஷாம்புவையும், முடி அதிகமாக உதிர்கிறது என்றால் காஃபைன் உள்ள ஷாம்புவையும் பயன்படுத்துங்கள். ஆனால் பொடுகு இருந்தால் மருத்துவரிடம் கேட்டு வாங்கி ஷாம்பு பயன்படுத்துங்கள்.

2. கண்டிஷனர் பயன்படுத்துதல்

பெண்கள் அளவுக்கு ஆண்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால், ஆண்களில் 90 சதவீதம் பேர் கண்டிஷனர்கள் பயன்படுத்துவதே கிடையாது. ஆனால் ஆண்கள் கட்டாயம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஷாம்பு போட்டு தலையை அலசியதும், கொஞ்சமாக கண்டிஷனர் எடுத்து முடியில் மட்டும் அப்ளை செய்து, ஸ்கால்ப்பில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து தலையை அலசிக் கொள்ளலாம்.

3. ஹேர் ஆயில் அல்லது சீரம்?

ஆண்கள் எல்லோருமே பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஹேர் ஆயில் பயன்படுத்துவார்கள். ஆனால் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமாக வெளியில் செல்வது, மாசு மற்றும் தூசுக்களில் செல்வதால், முடியில் எண்ணெய் இருந்தால் அதில் தூசி எல்லாம் படிந்து மோசமாகிவிடும். பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். அதனால் ஆண்கள் ஹேர் ஆயிலை விடவும் ஹேர் சீரம் பெஸ்ட். வேண்டுமானால் சீரமில் ஆயில் சேர்க்கப்பட்டிருக்கும் சீரம் பயன்படுத்துங்கள். ஜோஜோபா ஆயில், செரமைடு, கொழுப்பு அமிலங்கள், ஆர்கன் ஆயில் போன்றவை இருக்கிற சீரம்களைப் பயன்படுத்துங்கள்.

இறுதியாக, டாக்டர் ஸ்வேதா சொன்ன இந்த மூன்று ஹேர் கேர் டிப்ஸ்களை நீங்கள் சரியாகப் பின்பற்றினாலே போதும். ஆண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான தலைமுடி பிரச்சினைகள் சரியாவதோடு முடி உதிர்தலையும் தடுக்க முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தினமும் ஷாம்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் ஷாம்பு பயன்படுத்துவது நல்லது.

ஆம், கண்டிஷனர் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஷாம்பு செய்த பிறகு, முடியில் மட்டும் தடவி 5 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

ஆண்கள் அதிகமாக வெளியில் செல்வதால், மாசு மற்றும் தூசுக்களில் இருந்து முடியைப் பாதுகாக்க ஹேர் சீரம் சிறந்தது. ஜோஜோபா, செரமைடு, ஆர்கன் ஆயில் உள்ள சீரம்களைப் பயன்படுத்தலாம்.

Our Other Services