Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சுப்ரமண்ய புஜங்கம் பாடல் விளக்கம் மற்றும் பலன்கள்

முருகப் பெருமானின் அருளைப் பெற, ஆதிசங்கரர் திருச்செந்தூரில் இயற்றிய அற்புதமான சுப்ரமண்ய புஜங்கம் பாடல்கள் பற்றிய முழுமையான விளக்கத்தையும், இப்பாடல்களை பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் இங்கே காணலாம். இந்த ஜோதிடக் கட்டுரையில், தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியான முருகன் பக்தி, ஆறுபடை வீடுகள் மற்றும் சுப்ரமண்ய புஜங்கத்தின் மகத்துவம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

சுப்ரமண்ய புஜங்கத்தின் சிறப்பு

திருச்செந்தூர் முருகனான செந்தில் ஆண்டவர் வீரம், பெருமை பற்றி ஆதிசங்கரரால் வடமொழியில் இயற்றப்பட்டது தான் சுப்ரமண்ய புஜங்கம் பாடல். புஜங்கம் என்றால் தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு என்று பொருள். இது வடமொழிழில் உள்ள ஒருவகை யாப்பை குறிக்கும். பாம்பு போல் வளைந்து வளைந்து செல்வது போல் இருப்பதால் இந்த கவிக்கு பஜங்கம் என பெயர்.

சிவ பெருமானின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வந்த ஆதிசங்கரருக்கு பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் கடுமையான வயிற்று வலி நீங்கியது. தன்னுடைய வலி நீங்கியதால் இத்தல இறைவனை போற்றி ஆதிசங்கர் இந்த பாடலை இயற்றினார். 32 பாடல்களைக் கொண்ட இந்த பதிகத்தின் 33 வது பாடல் நூல் பயனாக அமைந்துள்ளது. எவர் ஒருவர் இந்த புஜங்கத்தை மனம் உருகி படிக்கிறாரோ அவருக்கு செல்வம், புகழ், ஆயுள், அழகிய மனைவி, குழந்தைகள், உறவுகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் முருகப் பெருமானின் திருவடிகளையும் அடைவார் என ஆதிசங்கரரே குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமண்ய புஜங்கம் பாடல்கள் மற்றும் பலன்கள்

(தீராத துன்பம் தீர)
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி

(புலமை ஏற்பட)
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம் ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம்

(திருவடி தரிசனம் கிடைக்க)
மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் மஹீதேவதேவம் மஹாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்

(பிறவிப் பிணி தீர)
யதா ஸந்நிதானம் கதாமானவா மே பவாம் யோதிபாரம் கதாஸ்தே ததைவ இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்

(போகாத துன்பம் போக)
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்

(கயிலை தரிசன பலன் கிடைக்க)
கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து

(கொடிய பாவம் நீங்க)
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே முனீந்த்ரானுகூலே ஸூகந்தாக்யசைலே குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம்

(மன அமைதி கிடைக்க)
லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே ஸூமஸ்தோம ஸஞ்ச்சவ்வ மாணிக்ய மஞ்சே ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம் ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம்

(புகலிடம் கிடைக்க)
ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

(அக இருள் நீங்க)
ஸூவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம் க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம் லஸத்தேம பட்டேன வித்யோதமானாம் கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம்

(ஆபத்து விலக)
புளிந்தேச கன்யாக நாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்சீரராகம் நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம்

(பிரம்ம ஞானம் ஏற்பட)
விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான் நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான் ஹதேந்த்ராரிஷண்டான் ஜகர்ராண செளண்டான் ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹூதண்டான்

(தாபங்கள் நீங்க)
ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத் ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்

(அமுத லாபம் கிடைக்க)
ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத் கடாக்ஷவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி

(கிருபா கடாக்ஷம் கிடைக்க)
விசாலேஷூ கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம் தயாஸ்யந்திஷூ த்வாதசஸ் வீக்ஷணேஷூ மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத் பவேத்தே தயாசீல கா நாமஹானி

(விருப்பங்கள் நிறைவேற)
ஸூதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய

(எதிரி பயம் நீங்க)
ஸ்புத்ரத் ன கேயூரஹாராபிராம ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக கடெள பீதவாஸா கரே சாருசக்தி புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ

(ஆனந்தம் ஏற்பட)
இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத் ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம் ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம்

(கர்மவினை நீங்க)
குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா பதே சக்தி பாணே மயூரா திரூட புளிந்தாம்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின் ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம்

(திவ்ய தரிசனம் கிடைக்க)
ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விமேஷ்டே கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே ப்ரயாணோன்முககே மய்யநாதே ததானீம் த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம்

(எம பயம் நீங்க)
க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூகோபா த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம் புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம்

(அபயம் கிடைக்க)
ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா

(கவலை தீர)
ஸஹஸ்ராண்ட போகத் த்வயா ஸூரநாமா ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம் ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி

(மனநோய் நீங்க)
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம் மமாதிம் த்ருதம் நாசயோமா ஸூதத்வம்

(பிணிகள் தீர)
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம் விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே

(சராணகதி பலன் கிடைக்க)
த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம் குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா

(வேண்டிய வரம் கிடைக்க)
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே

(குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக)
களத்ரம் ஸூதா பந்துவர்க பசுர்வா நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம் ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார

(விஷம், நோய் நீங்க)
ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸூதூரே விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல

(குற்றம் குறை நீங்க)
ஜநிக்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம் ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத அஹம் சாதிபாலோ பவான் லோக தாத க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச

(ஆனந்தம் பெருக)
நம கேகினே சக்தயே சாபி துப்யம் நமச்சாக துப்யம் நம குக்குடாய நம ஸிந்தவே ஸிந்த தேசாய துப்யம் புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து

(வெற்றி கிடைக்க)
ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன் ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ

(நூல் பயன்)
புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர் லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இது முருகப் பெருமானைப் போற்றி ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட வடமொழிப் பதிகம். இதில் 32 பாடல்களும், ஒரு நூல் பயன் பாடலும் உள்ளன. 'புஜங்கம்' என்பது ஒருவகை யாப்பை குறிக்கிறது.

மகா தத்துவஞானியும் ஆன்மீகவாதியுமான ஆதிசங்கரர், திருச்செந்தூர் முருகனின் அருளைப் பெற்று தனது வயிற்று வலி நீங்கிய பிறகு இப்பாடலை இயற்றினார். இது முருகன் ஆலயங்கள் பலவற்றிலும் பாராயணம் செய்யப்படும் ஒரு முக்கிய பக்திப் பாடலாகும்.

சுப்ரமண்ய புஜங்கத்தை மனம் உருகி படிப்பவர்களுக்கு செல்வம், புகழ், ஆயுள், அழகிய மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகளுடன் நிறைவான வாழ்க்கை கிடைக்கும். இறுதியில் முருகப் பெருமானின் திருவடிகளையும் அடையலாம் என்று ஆதிசங்கரரே குறிப்பிட்டுள்ளார். இது ஜோதிட ரீதியாகவும் பல தடைகளை நீக்கும் வல்லமை கொண்டது.

Our Other Services