Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

சுக்கிரன் 108 போற்றி மந்திரங்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்கிரன், செல்வம், ஆடம்பரம், கலைகள், திருமண வாழ்வு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரகராகக் கருதப்படுகிறார். சுக்கிர பகவானின் அருள் பெற, இந்த 108 போற்றி மந்திரங்களை உச்சரிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை நேரத்தில் இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட, வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்.

சுக்கிரன் 108 போற்றி

  • ஓம் அசுர குருவே போற்றி
  • ஓம் அரியசக்தி வாய்த்தவனே போற்றி
  • ஓம் அழகனே போற்றி
  • ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
  • ஓம் அந்தணனே போற்றி
  • ஓம் அத்தி சமித்தனே போற்றி
  • ஓம் அவுணரமைச்சனே போற்றி
  • ஓம் அந்தகனுக்குக்குதவியனே போற்றி
  • ஓம் ஆறாம் கிரகனே போற்றி
  • ஓம் ஆச்சாரியனே போற்றி
  • ஓம் இருகரனே போற்றி
  • ஓம் இந்திரியமானவனே போற்றி
  • ஓம் இல்லறக் காவலே போற்றி
  • ஓம் இரு பிறையுளானே போற்றி
  • ஓம் ஈர்க்கும் மீனே போற்றி
  • ஓம் உல்லாசனே போற்றி
  • ஓம் உற்றோர்க் காவலே போற்றி
  • ஓம் ஒரு கண்ணனே போற்றி
  • ஓம் ஒளி மிக்கவனே போற்றி
  • ஓம் கசன் குருவே போற்றி
  • ஓம் கசனால் மீண்டவனே போற்றி
  • ஓம் கலை நாயகனே போற்றி
  • ஓம் கலை வளர்ப்போனே போற்றி
  • ஓம் கருடவாகனனே போற்றி
  • ஓம் கமண்டலதாரியே போற்றி
  • ஓம் களத்ர காரகனே போற்றி
  • ஓம் கயமுகன் தந்தையே போற்றி
  • ஓம் காவியனே போற்றி
  • ஓம் கனகம் ஈவோனே போற்றி
  • ஓம் கீழ் திசையனே போற்றி
  • ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
  • ஓம் கிரகாதிபனே போற்றி
  • ஓம் சடை முடியனே போற்றி
  • ஓம் சயந்தி நாதனே போற்றி
  • ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
  • ஓம் சந்திரன் ஆகானே போற்றி
  • ஓம் சத்ரு நாசகனே போற்றி
  • ஓம் சிவனடியானே போற்றி
  • ஓம் சிவனுதரத்திருந்தவனே போற்றி
  • ஓம் சுக்கிரனே போற்றி
  • ஓம் சுக்கிரன் ஆனவனே போற்றி
  • ஓம் சுக்கிர நீதிஅருளியவனே போற்றி
  • ஓம் சுரர்ப் பகைவனே போற்றி
  • ஓம் சுக்கிராச்சாரியனே போற்றி
  • ஓம் செழிப்பிப்பவனே போற்றி
  • ஓம் தவயோகனே போற்றி
  • ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி
  • ஓம் திங்கள் பகையே போற்றி
  • ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி
  • ஓம் துலாராசி அதிபதியே போற்றி
  • ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
  • ஓம் தேவயானி தந்தையே போற்றி
  • ஓம் தூமகேதுக்கருளியவனே போற்றி
  • ஓம் நாடப்படுபவனே போற்றி
  • ஓம் நாடளிப்பவனே போற்றி
  • ஓம் நாற்கரனே போற்றி
  • ஓம் நீண்ட தசாகாலனே போற்றி
  • ஓம் நுண்கலைத் தேவனே போற்றி
  • ஓம் நெடியவனே போற்றி
  • ஓம் பரணி நாதனே போற்றி
  • ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி
  • ஓம் பத்துபரித் தேரனே போற்றி
  • ஓம் பஞ்சகோணப் பீடனே போற்றி
  • ஓம் பிரகாசிப்பவனே போற்றி
  • ஓம் பிருகு குமாரனே போற்றி
  • ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி
  • ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி
  • ஓம் புதன் மித்ரனே போற்றி
  • ஓம் புகழளிப்பவனே போற்றி
  • ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி
  • ஓம் பூமியன்ன கோளே போற்றி
  • ஓம் பூரத்ததிபதியே போற்றி
  • ஓம் பூராட நாதனே போற்றி
  • ஓம் பெண்பால் கிரகமே போற்றி
  • ஓம் பேராற்றலானே போற்றி
  • ஓம் மழைக் கோளே போற்றி
  • ஓம் மலடு நீக்கியே போற்றி
  • ஓம் மரவுரி ஆடையனே போற்றி
  • ஓம் மாமேதையே போற்றி
  • ஓம் மாண்டு மீண்டவனே போற்றி
  • ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி
  • ஓம் மாபலியின் குருவே போற்றி
  • ஓம் மாலோடிணைந்தருள்பவனே போற்றி
  • ஓம் மீனத்திலுச்சனே போற்றி
  • ஓம் மிருத்யு நாசகனே போற்றி
  • ஓம் மோகனனே போற்றி
  • ஓம் மொச்சைப் பிரியனே போற்றி
  • ஓம் யயதி மாமனே போற்றி
  • ஓம் யமபயமழிப்பவனே போற்றி
  • ஓம் ரவிப் பகைவனே போற்றி
  • ஓம் ரிஷபராசி அதிபதியே போற்றி
  • ஓம் வண்டானவனே போற்றி
  • ஓம் வரத ஹஸ்தனே போற்றி
  • ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி
  • ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி
  • ஓம் விடிவெள்ளியே போற்றி
  • ஓம் விபுதை ப் பிரியனே போற்றி
  • ஓம் வெண்ணிறனே போற்றி
  • ஓம் வெள்ளி உலோகனே போற்றி
  • ஓம் வெண் குடையனே போற்றி
  • ஓம் வெள்ளாடையனே போற்றி
  • ஓம் வெண் கொடியனே போற்றி
  • ஓம் வெள்ளித் தேரனே போற்றி
  • ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி
  • ஓம் வைரம் விரும்பியே போற்றி
  • ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
  • ஓம் வெள்ளி நாயகனே போற்றி

சுக்கிரன் போற்றி உச்சரிப்பதன் பலன்கள்

  • செல்வ வளம்: சுக்கிரனின் அருள் செல்வ வளத்தை அதிகரிக்கும்.
  • மகிழ்ச்சியான திருமண வாழ்வு: சுக்கிரன் களத்ர காரகன் என்பதால், திருமண உறவுகளை மேம்படுத்தும்.
  • கலைத் திறன்கள்: கலைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சுக்கிரன் துணை நிற்பார்.
  • ஆடம்பர வாழ்க்கை: சொகுசு மற்றும் ஆடம்பரமான வாழ்வு அமைய உதவும்.
  • நல்ல ஆரோக்கியம்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சுக்கிர பகவானின் பல்வேறு குணாதிசயங்களையும் பெருமைகளையும் போற்றும் 108 திருநாமங்களின் தொகுப்பே சுக்கிரன் 108 போற்றி ஆகும். இது செல்வ வளம், அன்பு, கலைகள் ஆகியவற்றை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது.

வெள்ளிக்கிழமைகள் சுக்கிர பகவானுக்கு உகந்த நாளாகும். அந்நாளில், குறிப்பாக காலை 6-7 மணி (சுக்கிர ஹோரை) அல்லது இரவு 8-9 மணி (சுக்கிர ஹோரை) போன்ற சுக்கிர ஹோரை நேரங்களில் இந்த போற்றியை உச்சரிப்பது மிகவும் பலன் தரும். தினசரி உச்சரிப்பதும் சிறந்தது.

சுக்கிரன் போற்றியை உச்சரிப்பதன் மூலம் செல்வ வளம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, கலைகளில் வெற்றி, சௌகரியமான வாழ்க்கை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நேர்மறை ஆற்றல் ஆகியவை கிடைக்கும். ஜோதிட ரீதியாக சுக்கிரன் வலுப்பெறுவார்.

Our Other Services