Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பவுத்திர நோய்க்கு குப்பைமேனி மற்றும் அரிசி திப்பிலி: 48 நாட்களில் தீர்வு!

ஆசனவாயில் ஏற்படும் பவுத்திரம் (Fistula) பெரும் வலியை தரக்கூடிய ஒரு தீவிர பிரச்சனை. இதற்கு சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள் உள்ளன. டாக்டர் எஸ். காமராஜ் அவர்கள் பரிந்துரைக்கும் குப்பைமேனி மற்றும் அரிசி திப்பிலி சூரணம், 48 நாட்களில் இந்த உபாதையை கட்டுக்குள் கொண்டு வர உதவும் வழிகளை இந்த தமிழ் வழிகாட்டியில் விரிவாக காண்போம். இந்த பாரம்பரிய மருத்துவ முறைகள், ஜோதிட ரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் முருகன் அருளுடன் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

பவுத்திரம் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

பவுத்திரம் என்பது ஆசனவாயில் உள்ள சீழ் படிந்த கட்டிகளால் உருவாகிறது. இது மோசமான வலி உணர்வு ஏற்படுத்தும். சீழ் வெளியேறினாலும் இந்த கட்டிகளில் இருக்கும் புண் ஆறுவதில்லை. இந்த பவுத்திரம் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. எனினும் ஆசனவாய் பகுதியை சுற்றி வலி மற்றும் எரிச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். சீழ் வெளியேறும் போது கடுமையான துர்நாற்றம் உண்டாகும். மலத்தில் இரத்தம், சீழ் போன்றவை கண்டால், ஆசனவாய் சுற்றி வீக்கம் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்ந்தால் மருத்துவரை அணுகி பவுத்திரம் உள்ளதா என்ற பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெறுங்கள்.

ஆரம்ப நிலை என்னும் போது வீட்டு சிகிச்சை முறையில் குப்பைமேனி மற்றும் அரிசி திப்பிலியை உள்ளுக்கு எடுத்துவருவது பவுத்திரம் குணப்படுத்த உதவும். அதை எப்படி எடுத்துகொள்ளலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

பவுத்திர நோய்க்கு குப்பைமேனி

டாக்டர் எஸ். காமராஜ் அவர்களின் பரிந்துரை:

குப்பை மேனி கார்ப்பு சுவையையும் வெப்ப தன்மையையும் கொண்டுள்ளது. பல்வேறு வீட்டு வைத்திய முறைகளுக்கு இதை பயன்படுத்துவதுண்டு. பெரும்பாலும் இதை தோல் சிகிச்சைக்கு நாம் பயன்படுத்துவதுண்டு. சொறி, சிரங்கு, புண் போன்றவற்றை ஆற்றும் தன்மை கொண்ட இது பவுத்திரம் நோய்க்கு மருந்து என்கிறார் சித்த மருத்துவர் எஸ். காமராஜ்.

குப்பைமேனி சூரணம் தயாரிக்கும் முறை:

குப்பை மேனி இலையை எடுத்து வந்து சுத்தம் செய்து இலையை மட்டும் வெயில்படாமல் உலர்த்தி கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் பொடியாக்கி சலித்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். குப்பை மேனி பொடியான இதை உள்ளுக்கு எடுப்பது போன்று சரும பிரச்சனைகளில் வெளியேயும் பயன்படுத்தலாம்.

அரிசி திப்பிலி

திப்பிலியின் வகைகள் மற்றும் தயாரிப்பு:

திப்பிலியில் இரண்டு வகை உண்டு ஒன்று அரிசி திப்பிலி என்று அழைக்கப்படும் சிறிய வகை. மற்றொன்று யானை திப்பிலி என்று அழைக்கப்படும் பெரிய வகை திப்பிலி. இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஏதேனும் ஒன்றை வாங்கி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துங்கள் என்கிறார் டாக்டர் எஸ். காமராஜ். பிறகு இந்த திப்பிலையை இடித்து மிக்ஸியில் போட்டு நன்றாக மைய அரைக்கவும். இப்படி அரைத்து வைத்த திப்பிலி பொடியை பாட்டிலில் போட்டு சேகரித்து வைக்கவும்.

குப்பைமேனி அரிசி திப்பிலி எப்படி சாப்பிடுவது?

குப்பை மேனி மற்றும் அரிசி திப்பிலி இரண்டையும் தனித்தனியாக பொடித்து வைத்து கொள்ளுங்கள். குப்பை மேனி சூரணம் மற்றும் திப்பிலி பொடி இரண்டும் 100 கிராம் அளவில் எடுத்து நன்றாக கலந்து ஒன்றாக சேர்த்து வைத்துகொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

  • தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சாப்பிட வேண்டும்.
  • காலை உணவுக்கு பிறகும் மாலை உணவுக்கு பிறகும் 2 கிராம் முதல் 4 கிராம் வரை எடுத்து பசு நெய்யில் குழைத்து சாப்பிட வேண்டும்.

இப்படி சாப்பிடும் போது பவுத்திரம் படிப்படியாக குறையும் என்கிறார் சித்த மருத்துவர்.

பவுத்திரம் கட்டுப்பட எவ்வளவு நாட்கள் சாப்பிட வேண்டும்?

இந்த இரண்டு மூலிகைகளையும் கலந்து 48 நாட்கள் வரை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிடும் போது பவுத்திரம் கட்டுப்படுவதை பார்க்கலாம் என்கிறார் டாக்டர். எஸ் காமராஜ். அதற்குள் உபாதை குணமாகவில்லை, 50% மட்டுமே குணமாகி உள்ளது என்றால் மேலும் ஒரு மண்டலம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பவுத்திரம் கட்டுக்குள் இருக்கும் என்கிறார் டாக்டர். எஸ் காமராஜ். மேலும் இந்த வைத்தியம் முயற்சிக்கும் போது உங்கள் உணவு முறையும் சரியானதாக இருக்க வேண்டும் என்கிறார் சித்த மருத்துவர் எஸ். காமராஜ். பவுத்திரம் உபாதை இருந்தால் நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.

குப்பை மேனி மற்றும் திப்பிலி எப்படி மருந்தாகிறது?

  • குப்பைமேனி: குப்பை மேனி இலையுடன் விளக்கெண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் மருந்து சித்த மருத்துவத்தில் முக்கியமானது. இது வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்கும். மலச்சிக்கல் தீர்க்கும். ஆசன வாய் சுற்றியிருக்கு கட்டிகளும் கரையும். பவுத்திரம் நோயை சரி செய்யும்.
  • அரிசி திப்பிலி: மருந்துகளில் அரிசி திப்பிலி அதிகம் பயன்படுத்தப்படும். திப்பிலி ஆஸ்துமாவை நிர்வகிக்க செய்யும். கபம், மலச்சிக்கல் போன்ற உபாதையை குறைக்க செய்யும். பவுத்திரம் குணமாகவும் இவை உதவும்.

பவுத்திரம் குணமாக இந்த இரண்டு மூலிகைகள் மட்டும் போதுமா?

ஆசனவாய் பவுத்திரம் என்பது எளிமையானதா அல்லது சிக்கலானதா என்பதை பொறுத்து சிகிச்சை முறை தேவையிருக்கும். நாள்பட்ட சிக்கலை கொண்டிருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைபடும், மேலும் இது மீண்டும் வரலாம். அதனால் ஆசனவாயில் இதன் அறிகுறிகள் உணர்ந்த உடன் மருத்துவரை அணுகவும். இது தானாக சரியாகாது. மருத்துவ சிகிச்சையுடன் சரி செய்யலாமா அல்லது அறுவை சிகிச்சை தேவையா என்பதை மருத்துவருடன் விவாதியுங்கள். மருத்துவ சிகிச்சை போதுமானது என்பதற்கேற்ப பாதிப்புகள் இருந்தால் நீங்கள் இந்த வீட்டு வைத்திய முறையை முயற்சிககலாம்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பவுத்திரம் என்பது ஆசனவாயில் ஏற்படும் சீழ் படிந்த கட்டிகளால் உருவாகும் ஒரு வலி மிகுந்த நோயாகும். இதன் முக்கிய அறிகுறிகள் ஆசனவாயைச் சுற்றி வலி, எரிச்சல், மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய சீழ் வெளியேற்றம் ஆகியவை.

குப்பைமேனி கார்ப்பு சுவையையும் வெப்ப தன்மையையும் கொண்டுள்ளது. இது சொறி, சிரங்கு, புண் போன்றவற்றை ஆற்றும் தன்மை கொண்டது. பவுத்திரம் நோய்க்கு உள்ளுக்கு மருந்தாகவும், ஆசனவாய் சுற்றியுள்ள கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது.

அரிசி திப்பிலி சித்த மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது ஆஸ்துமா, கபம், மலச்சிக்கல் போன்ற உபாதைகளை குறைக்க உதவுகிறது, மேலும் பவுத்திரம் குணமாகவும் துணை புரிகிறது.

டாக்டர் எஸ். காமராஜ் அவர்களின் பரிந்துரைப்படி, இந்த இரண்டு மூலிகைகளையும் கலந்து 48 நாட்கள் வரை (ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால், மேலும் ஒரு மண்டலம் சாப்பிடலாம்.

பவுத்திரத்தின் தீவிரம் மற்றும் சிக்கலைப் பொறுத்து சிகிச்சை அமையும். ஆரம்ப நிலை பாதிப்புகளுக்கு இந்த வீட்டு வைத்தியம் உதவலாம். நாள்பட்ட மற்றும் சிக்கலான பவுத்திரத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

Our Other Services