கைரேகை ஜோதிடம் என்பது நம் உள்ளங்கையில் காணப்படும் பல்வேறு சிறப்பு அடையாளங்கள், மேடுகள் மற்றும் குறியீடுகளைக் கொண்டு தனிநபரின் குணம் மற்றும் எதிர்கால பலன்களை கணிக்கும் ஒரு அற்புதமான கலை. இந்த உள்ளங்கை அடையாளங்கள், ஒவ்வொருவரின் வாழ்விலும் தனித்துவமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உங்கள் உள்ளங்கையில் உள்ள வட்டம், முக்கோணம், நட்சத்திரம் போன்ற இந்த குறியீடுகள் எந்த மாதிரியான பலன்களை அளிக்கின்றன என்பதை இந்த பதிவில் தமிழ் ஜோதிடம் வாயிலாக விரிவாகக் காண்போம்.
வட்டம் - சுதந்திரமானவர்
உள்ளங்கையில் வட்டம் (அ) சக்கரம் போன்ற குறியீடு இருப்பது, தனி நபரின் சுதந்திரத்தை குறிக்கிறது. இவர்களின் வாழ்க்கை சக்கரம் போல் தடையின்றி மகிழ்ச்சியாக சுழன்று செல்லும்.
இந்தக் குறியீட்டைக் கொண்டவர்கள் தங்கள் விருப்பம் போல் வாழ்வார்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். ‘My Life, My Rules’ என்றபடி தனித்து செயல்பட விரும்புவார்கள். மேலும், தனக்கான தேவைகளை தானே பார்த்துக்கொள்வார்கள். இது கைரேகை ஜோதிடத்தின் ஒரு முக்கிய பலனாகும்.
முக்கோணம் - மர்மம் நிறைந்தவர்
மூன்று கூர்மையான முனைகளைக் கொண்ட முக்கோணக் குறியீடு உள்ளவர்கள் மர்மங்கள் நிறைந்தவர்களாகவும், ரகசியங்களைப் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தந்திரவாதிகள், யோகா, தியானம் போன்ற உடல் கட்டுப்பாட்டில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். தனிமையை விரும்பும் இத்தகையோர், எந்த விஷயத்தையும் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என கைரேகை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நட்சத்திரம் - செல்வந்தர்
நட்சத்திரம் அல்லது சிலுவை குறியீடு உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும், சவாலான பணிகளிலும் வெற்றிகளைக் குவிப்பார்கள்.
எதிர்பார்ப்புக்கு மீறிய வருமானத்தை அடிக்கடி பெற்று, விரைவில் செல்வந்தராக மாறும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எண்ணற்ற தொழில் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் பெற்று வாழ்க்கையில் சிறப்பார்கள். இது ஜோதிடத்தின் ஒரு நேர்மறையான பலனாகும்.
சிக்கலான வரிகள் - பதற்றம் நிறைந்தவர்!
உள்ளங்கையில் ஒன்றோடு ஒன்று இணைந்த சிக்கலான வரிகள் அல்லது சிலந்தி வலை போன்ற கைரேகை உள்ளவர்கள் குழப்பங்கள் மற்றும் பதற்றம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களால் எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது, மற்றவர்களின் துணையின்றி தனித்து செயல்பட முடியாது. முக்கிய முடிவுகளுக்கு மற்றவர்களின் துணையை நாடும் இத்தகையோர், ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனையாளராக இருந்தாலும் மற்ற துறைகளில் கவனம் செலுத்த இயலாது.
அரை வட்டம் - ஆற்றல் மிக்கவர்கள்
அரை வட்டம் (அ) அரை நிலா போன்ற வடிவம் கொண்டவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகவும், எந்நேரமும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
பெரும்பாலும் விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களாகவும், குழுப்பணியில் சிறந்து விளங்கி, ஒரு குழுவை வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி, தங்கள் தோற்றத்திலும் கவனம் செலுத்துவார்கள்.
சதுரம், நாற்கரம் - கடின உழைப்பாளி
சதுரம், நாற்கரம் போன்ற நான்கு மூலை கொண்ட வடிவங்கள் உள்ளவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்கள் தங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைய எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தைரியசாலிகள்.
தங்கள் கடின உழைப்பால் பொருளாதார நிலையை மேம்படுத்தி, கடன் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, விரைவில் செல்வந்தராக மாறுவார்கள் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.