நம் வீட்டை பராமரிப்பதிலும், வீட்டில் மகிழ்ச்சி, செழுமை அதிகரிக்க பலவகையில் வாஸ்து குறிப்புகள் உதவுகின்றன. அந்த வகையில் நம் வீட்டில் சுபிட்சம் எப்போதும் நிறைந்திருக்க சில பொருட்கள் கட்டாயம் இருப்பது அவசியம். இதன் மூலம் வீட்டில் நிதி நெருக்கடிகள் குறைவதோடு, நேர்மறை தாக்கங்கள் ஏற்படும். அப்படி என்னென்ன வாஸ்து பொருட்கள் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
செல்வம் மற்றும் மகிழ்ச்சி தரும் முக்கிய வாஸ்து பொருட்கள்
-
மகாலட்சுமி குபேரரின் படம்
ஒருவருக்கு செல்வம், மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தெய்வங்கள் மகாலட்சுமி மற்றும் குபேரர். இவர்கள் அடங்கிய புகைப்படத்தை புதிய அறையில் வைத்து வழிபாடு செய்வது அவசியம். இதனால் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் பணம் தட்டுப்பாடு இருக்காது. உங்கள் செயலிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். ஜோதிடம் ரீதியாகவும் இது முக்கியம்.
-
வில்வ பழம் அல்லது தேங்காய்
நம்முடைய ஒவ்வொருவரும் வீட்டிலும் பூஜை அறையில் வில்வ பழம் அல்லது தேங்காய் வைத்திருப்பது வீட்டில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். வில்வ பழம் கிடைக்காவிட்டால் தேங்காயை வைத்திருப்பது நல்லது. இதை நாம் பின்பற்றி வர வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம்.
-
விநாயகர் சிலை
நம் வீட்டில் சிறிய அளவில் ஒரு விநாயகர் சிலையாவது வைத்திருப்பது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி விக்னங்கள் எனும் துன்பங்களை போக்கக்கூடியவர் விநாயகர். தமிழில் வினை தீர்ப்பான் விநாயகர் என கூறுவது உண்டு. இந்த வகையில் அவரின் அருளால் நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, நம்முள் நேர்மறை எண்ணங்களும், நேர்மறை சக்தியும் வீட்டில் அதிகரிக்கும். வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
-
சங்கு
வீட்டின் பூஜை அறையில் சங்கு வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. சங்கு மற்றும் சங்கின் ஒலியானது வீட்டில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். முன்பெல்லாம் நாம் வீடு கட்டும் போது வீட்டின் உள்ளே நுழையக்கூடிய இடத்தில் சங்கு பதிப்பது வழக்கமாக இருந்தது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க மகாலட்சுமி குபேரரின் படம், வில்வ பழம் அல்லது தேங்காய், விநாயகர் சிலை மற்றும் சங்கு போன்றவற்றை வாஸ்து படி வைக்கலாம்.
விநாயகர் சிலை வீட்டில் வைப்பதால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, விக்னங்கள் நீங்கி, வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நேர்மறை எண்ணங்கள் மற்றும் சக்தி அதிகரிக்கும்.
வீட்டின் பூஜை அறையில் சங்கு வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வாஸ்து தோஷங்களை விலக்கி, மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. இதன் ஒலி கூட நேர்மறை சக்தியை ஈர்க்கும்.
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. இவற்றைத் பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.