சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது மனித உடலின் அமைப்பு மற்றும் தனித்துவமான அடையாளங்களை வைத்து அவர்களின் குணாதிசயங்களையும், எதிர்காலத்தையும் கணிக்கும் ஒரு பழங்கால முறையாகும். இந்த பண்டைய சாஸ்திர முறையின்படி, நம் விரல் நகங்களில் காணப்படும் குறியீடுகள் - குறிப்பாக, வெள்ளை நிற புள்ளிகள் - நம் எதிர்காலத்தை கணிக்க உதவும் என நம்பப்படுகிறது. ஜோதிட நிபுணர்கள் இந்த வெள்ளை நிற அடையாளங்களை சந்திரனுடன் ஒப்பிடும் நிலையில், சந்திரனின் கிரக நிலை மாற்றம் மற்றும் இந்த அடையாளங்களை கொண்டிருக்கும் நபரின் ராசி அமைப்புயைப் பொறுத்து அவர்களின் பலன்கள் மாறுபடும் என குறிப்பிடுகின்றனர்.
வெள்ளை தழும்புகள் இருப்பின்...
உங்கள் விரல் நகங்களில் வெள்ளை நிற தழும்புகள் இருப்பது உண்மையில் ஆரோக்கியமான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஜோதிட நிபுணர்களின் கருத்துப்படி, இந்த வெள்ளை நிற புள்ளிகள் உங்கள் வாழ்க்கையில் மங்களகரமான மாற்றங்களை கொண்டு வரும். காதல், குடும்ப வாழ்க்கை, மண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் லட்சியங்களை அடைவதற்கு உதவும் அதிர்ஷ்டங்களையும், வாய்ப்புகளையும் இந்த வெள்ளை நிற புள்ளிகள் கொண்டு வரும் என சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.
ஆள்காட்டி விரலில் இருந்தால்!
உங்கள் (வலது) ஆள்காட்டி விரல் நகத்தில் இந்த வெள்ளை நிற தழும்புகள் இருப்பது தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காண உதவும். இது பேச்சாற்றலை மேம்படுத்தும் என்பதால், வழக்கறிஞர், ஊடகவியலாளர், சந்தைப்படுத்துதல் துறை வல்லுநர்கள் போன்ற வார்த்தைகளை தங்கள் பலமாக கொண்டவர்களுக்கு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும்.
உங்கள் இடது கையில் ஆள்காட்டி விரல் நகத்தில் வெள்ளை நிற தழும்புகள் இருப்பின், அது புதிய தொடக்கத்திற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் திருமண பந்தத்தில் இணையும் வாய்ப்பும் கிடைக்கும்.
நடுவிரல் நகத்தில் புள்ளி இருந்தால் என்ன பலன்!
நடுவிரல் நகத்தில் வெள்ளை நிற தழும்பு அல்லது புள்ளி இருப்பது உங்கள் தொழில் மற்றும் செல்வாக்குடன் தொடர்பு கொண்டது. வலது கையில் நடு விரல் நகத்தில் புள்ளிகள் இருப்பின், உயர் பதவி, தொழில் வளர்ச்சி, வியாபாரச் செழிப்பு, பண வரவு அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் மற்றும் உயரிய அந்தஸ்து பெறுவீர்கள்.
உங்கள் இடது கையின் நடு விரல் நகத்தில் தழும்புகள் இருப்பின், திருமண காரியங்கள் கைகூடும் மற்றும் காதல் வாழ்க்கை வெற்றியடையும். காதல் மற்றும் மண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும்.
மோதிர விரல் நகத்தில் வெள்ளை தழும்புகள் இருப்பின்!
வலது கையின் மோதிர விரல் நகத்தில் வெள்ளை நிற தழும்பு இருப்பது நேர்மறை ஆற்றலையும், தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். குறிப்பாக, கலைத்துறையினர் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் இடதுகையின் மோதிர விரல் நகத்தில் வெள்ளை நிற தழும்புகள் இருப்பின், அது திடீர் வருமானத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது (லாட்டரி, பங்குசந்தை முதலீடுகள் வழியே).
சுண்டு விரல் நகத்தில் வெள்ளை நிற தழும்புகள் இருப்பின்...
வலது கையின் சுண்டு விரல் நகத்தில் புள்ளிகள் காணப்படுவது ஆசைகள் நிறைவேறுவதை குறிக்கிறது. அரசு வேலை, காதல் வாழ்க்கை கைகூடுதல், மகிழ்ச்சியான வாழ்க்கை போன்ற நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
இடது கை சுண்டு விரல் நகத்தில் புள்ளிகள் இருப்பது முன்னேற்றத்தை குறிக்கிறது. இது தொழில், மண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்படும் முன்னேற்றத்தை உள்ளடக்கியது.
கட்டை விரல் நகத்தில் வெள்ளை நிற தழும்புகள் இருப்பதன் பலன்!
வலது கட்டை விரல் நகத்தில் காணப்படும் தழும்புகள், நீடித்த உறவை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும். அதாவது, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருவரை சந்திக்க இருப்பதன் அறிகுறியாக இந்த அடையாளத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்த ஒரு நபர் உங்கள் நெருங்கிய நண்பராக இருக்கலாம், வாழ்க்கை துணையாக இருக்கலாம், அல்லது உங்களுடன் வாழ்க்கை முழுவதும் பயணிக்க காத்திருக்கும் ஒரு ஆத்ம துணையாக இருக்கலாம்.
இடது கையின் கட்டை விரல் நகத்தில் வெள்ளை நிற புள்ளிகள் இருப்பது, லட்சிய பாதையின் வெற்றியை குறிக்கிறது. அதாவது, உங்கள் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான பாதையை கண்டறிவதன் ஒரு அறிகுறியாக இந்த அடையாளங்கள் பார்க்கப் படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, நகங்களில் காணப்படும் வெள்ளை நிற புள்ளிகள் பொதுவாக ஆரோக்கியமான மற்றும் மங்களகரமான மாற்றங்களை குறிக்கின்றன. இது ஜோதிட ரீதியாக உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.
இல்லை, ஒவ்வொரு விரல் நகத்திலும் தோன்றும் வெள்ளை புள்ளிகள் வெவ்வேறு பலன்களைக் குறிக்கின்றன. உதாரணமாக, ஆள்காட்டி விரல் தொழில் வளர்ச்சியையும், நடுவிரல் செல்வாக்கையும், மோதிர விரல் கலை மற்றும் செல்வத்தையும், சுண்டு விரல் ஆசைகள் நிறைவேறுவதையும், கட்டை விரல் உறவுகளையும் குறிக்கும்.
ஜோதிட நிபுணர்கள் இந்த வெள்ளை நிற புள்ளிகளை சந்திரனுடன் ஒப்பிடுகின்றனர். சந்திரனின் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் நபரின் ராசி அமைப்பு ஆகியவற்றை பொறுத்து, இந்த அடையாளங்கள் தரும் பலன்கள் மாறுபடும் என தமிழ் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.