Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் மகத்துவம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மட்டுமல்ல, வழிபாட்டிற்கும், குலதெய்வ அருளைப் பெறுவதற்கும் மிகவும் உன்னதமான நாளாகும். சூரிய பகவானின் ஆற்றல் நிறைந்த இந்த நாள், அதிலும் ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவை. உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் குடும்ப சுபிட்சம் தரும் ஆடி ஞாயிறு வழிபாட்டின் மகத்துவத்தை விரிவாகக் காண்போம்.

ஆடி ஞாயிறு வழிபாட்டின் முக்கியத்துவம்

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை நாள் என்பதால் அனைவருக்கும் பிடித்தமான நாளாக உள்ளது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பது வழிபாட்டிற்கு மிகவும் உன்னதமான ஒரு நாள் ஆகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற நாள் என்றால் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானின் ஆற்றல் அதிக நிறைந்திருக்கும் ஒரு நாளாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மிக சக்தி வாய்ந்தது என்பது அற்புதமான பலன்களை தரக் கூடியது. அதிலும் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும் ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு, உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் குடும்ப சுபிட்சத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் வருகிறது. இதில் ஒன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளாகும்.

2025ல் வரும் ஆடி ஞாயிற்றுக்கிழமைகள் (ஜோதிட பார்வை)

  • ஆடி முதல் ஞாயிறு: ஜூலை 20 (கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பு).
  • ஆடி 2வது ஞாயிறு: ஜூலை 27
  • ஆடி 3வது ஞாயிறு: ஆகஸ்ட் 03
  • ஆடி 4வது ஞாயிறு: ஆகஸ்ட் 10

இந்த தேதிகள் தமிழ் ஜோதிட பஞ்சாங்கத்தின்படி முக்கியத்துவம் பெறுகின்றன.

குலதெய்வ வழிபாட்டின் அவசியம்

எப்போதும் எந்த வழிபாட்டை துவங்குவதற்கு முன்பும் முதலில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். அதன் படி ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பு. ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடும் பழக்கம் பலரது குடும்பத்தின் வழக்கமானதாக உள்ளது. சிலர் ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு பல விதமான அபிஷேகங்கள் செய்து வழிபடுவார்கள். இன்னும் சிலர் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இன்னும் சிலர் படையல் போட்டு வழிபடுவார்கள். இன்னும் சில பகுதிகளில் விழா எடுத்தும் வழிபாடுவார்கள். இப்படி எந்த முறையில் வழிபடும் பழக்கம் இருந்தாலும் அந்த முறையில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையில் வழிபட வேண்டும்.

வீட்டில் ஆடி ஞாயிறு வழிபாடு செய்யும் முறை

குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, அதை வீட்டில் இருக்கும் குல தெய்வம் படத்திற்கு முன்பாக வைத்து படைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து குலதெய்வத்திற்கு பூஜை செய்து மனதார வழிபட வேண்டும். பிறகு நைவேத்தியமாக படைத்த சர்க்கரை பொங்கல் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட்டு, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தானத்தின் மகத்துவம் (மகாலட்சுமியின் அருள்)

ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று யாராவது ஒருவரை வீட்டிற்கு அழைத்து உணவு அளிப்பத மிகவும் சிறப்பு. வீட்டிற்கு வருபவர்களுடன் மகாலட்சுமியும் கூட வருவாள் என்பது ஐதீகம். அதனால் வீட்டிற்கு வருபவர்களை நன்கு உபசரித்து, உணவளித்து, அவர்களை மன மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி செய்தால் மகாலட்சுமியும் மனம் மகிழ்ந்து அந்த வீட்டிலேயே தங்கி விடுவாளாம். ஒருவேளை வீட்டிற்கு வருபவர் திரும்பிச் செல்லும் போது மன வருத்தத்துடன் சென்றால் அவருக்கு முன்பாக மகாலட்சுமி, நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என சொல்வார்கள். அதனால் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும், குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் ஆடி ஞாயிற்றுக்கிழமையில் யாருக்காவது உணவளிப்பது சிறப்பானது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி அதிகரித்து காணப்படும். ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் ஆற்றல் கொண்டது. இவை இரண்டும் இணையும் போது செய்யப்படும் வழிபாடு உடல் ஆரோக்கியம், செல்வம், மற்றும் குடும்ப சுபிட்சத்தை தரும்.

குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடலாம். செல்ல முடியாதவர்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து குலதெய்வம் படத்திற்கு படைத்து, குடும்பத்துடன் வழிபட வேண்டும்.

ஆடி ஞாயிறில் வீட்டிற்கு ஒருவரை அழைத்து உணவு அளிப்பது மகாலட்சுமியின் அருளையும், குலதெய்வத்தின் அருளையும் பெற்றுத்தரும். மனம் மகிழ்ச்சியுடன் உபசரிக்கும் போது மகாலட்சுமி நிரந்தரமாக வீட்டில் தங்குவாள் என்பது ஐதீகம்.

Our Other Services