Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

எந்தெந்த ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்?

ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான அழகும், வசீகரமும் உண்டு. ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் புறத்தோற்றத்திலும், அகத்தோற்றத்திலும் தனிச்சிறப்புடன் திகழ்வார்கள். அவர்களின் தோற்றப் பொழிவு, வசீகரம், கவர்ச்சியான அமைப்பு மற்றும் கருணை என பல அம்சங்கள் ஒருவரை ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன. அழகு, கவர்ச்சி மற்றும் தனித்துவமான குணாதிசயங்களுடன் கூடிய 5 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.

அழகு ராசிகளின் சிறப்பம்சங்கள்:

மேஷம்

தைரியம், தன்னம்பிக்கை, ஆற்றல் மிக்க செயல்பாடு மற்றும் கருணை இவர்களின் அழகை கூட்டுகின்றன.

சிம்ம ராசி

ஆளுமை, கவர்ச்சிகரமான ஆற்றல், சிங்க நடை, கலைத்திறன் இவர்களை ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது.

துலாம்

இயற்கையான அழகு, சமநிலை பண்பு, வசீகர புன்னகை இவர்களின் தனித்துவமான அம்சங்கள்.

விருச்சிக ராசி

மர்மமான கவர்ச்சி, தீவிரம், அன்பால் ஈர்க்கும் குணம் இவர்களின் அழகை கூட்டுகிறது.

மீனம்

உணர்ச்சிவசப்படும் குணம், கற்பனைத்திறன், ஆன்மாவின் அழகு, இரக்க குணம் இவர்களை வசீகரிக்கிறது.

5 அழகிய ராசிகளின் விரிவான குணாதிசயங்கள்

ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் உடல் ரீதியாகவும், குணம் ரீதியாகவும் எப்படிப்பட்ட தனித்தன்மைகளைக் கொண்டுள்ளனர் என்பதைப் பார்ப்போம்:

மேஷம்

மேஷ ராசியை சேர்ந்த நபர்கள் பொதுவாகவே மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். அதோடு இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் பிரகாசமாக, வசீகரமாக இருப்பார்கள். மற்றொரு புறம் இவர்கள் அழகாக இல்லாவிட்டாலும் இவர்களின் தன்னம்பிக்கை, ஆற்றல் மிக்க செயல்பாடு, கருணை உள்ளிட்டவை பிறரை ஈர்க்கக்கூடிய விஷ்யாமாக அமையும். கடினமான சூழலாக இருந்தாலும் மேஷ ராசியின் தைரிய செயல்பாடு சிரமமின்றி செயல்படும் தன்மை பிறரை ஈர்க்கக்கூடிய அழகாக தோற்றமளிக்கும்.

சிம்ம ராசி

நவகிரக தலைவரான சூரிய பகவானை அதிபதியாக கொண்ட ராசி சிம்மம். தன்னுடைய சிறப்பான ஆளுமை மற்றும் கவர்ச்சிகரமான ஆற்றலால் பிறர் புறக்கணிக்கமுடியாத அளவிற்கான அற்புதமான நபராக இருப்பார்கள். இவர்கள் சிங்க நடைபோடும் செயல்பாடு, ஆளுமைத் திறனானது மற்றவர்களை ஈர்க்கக்கூடிய அழகாக இருக்கும். இவர்களின் செயல் மட்டுமல்லாமல் பார்க்கவும் அழகாக இருப்பார்கள். மேலும் இவர்கள் நடிப்பு, நடனம், கலைத்திறன் ஆகியவை இவர்களை மேலும் அழகாக காட்டக்கூடியது. அதோடு இவர்களின் இயல்பான குணமான பிறர் தன்னை பார்க்க வேண்டும், கவனிக்க வேண்டும் என செய்யக்கூடிய விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.

துலாம்

அழகு, ஆடம்பரத்தைத் தரக்கூடிய துலாம் ராசியை சேர்ந்தவர்கள் இயற்கையாகவே அழகானவர்களாகவும், அழகு சார்ந்த விஷயத்தில் ஈர்க்கப்படக்கூடிய நபர்களாக இருப்பார்கள். துலாம் ராசியில் பிறந்தவர்கள் பிறரையும் தன்னைப் போல சமநிலையாக பார்ப்பார்கள். இவர்களின் அழகு மட்டுமல்லாமல் இவர்களின் பண்பும் இவர்களை மேலும் அழகாக காட்டும். இவர்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்க அதிக முயற்சிகள் எடுப்பார்கள். அதோடு வசீகர புன்னகை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் மர்மமான குணம் கொண்டவர்கள். தங்களின் திட்டம், செயல்பாடு பிறர் அறிந்து கொள்வது கடினம். இவர்களின் கவர்ச்சியும், அழகும் ஒரு மர்மமாகவே இருக்கும். இவர்கள் சற்று கோபப்படக்கூடிய நபர்களாக இருந்தாலும், அன்பால் பிறரை ஈர்ப்பார்கள். இவர்களின் சொல், செயலானது தனித்துவமாகவும், தீவிரமானதாக இருக்கும். இவர்கள் தோற்றத்தில் அழகாக, கவர்ச்சியாக தோற்றமளிப்பார்கள்.

மீனம்

மீன ராசியை சேர்ந்தவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் அதிகமாக கனவு காணக்கூடியவர்களாகவும், அதை தன் கற்பனை உலகில் செயல்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களின் அழகானது தோற்றத்தை தாண்டி ஆன்மாவின் ஆழத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும். புறத்தோற்றத்தைத் தாண்டி இவர்களின் மென்மையான மற்றும் இரக்கக் குணத்தால் பிறர் இவர்கள் அழகில் மயங்குவார்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தோற்றத்திலும், குணத்திலும் தனித்துவமான அழகை கொண்டுள்ளனர். இது ஜோதிடத்தின் ஒரு கணிப்பு.

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அந்த கிரகத்தின் குணாதிசயங்களும், ராசியின் அடிப்படை தன்மைகளும் ஒருவரின் தோற்றம், குணம், மற்றும் ஈர்க்கும் சக்தியை தீர்மானிக்கின்றன.

இல்லை, ஜோதிட ரீதியாக அழகு என்பது புறத்தோற்றத்தையும் தாண்டி, ஒருவரின் தன்னம்பிக்கை, கருணை, ஆளுமை, மென்மை, இரக்கம் போன்ற அக குணங்களையும் உள்ளடக்கியது.

Our Other Services